விஷ்ணு விஷாலின் `இரண்டு வானம்' படத்தின் செகண்ட் லுக் வெளியானது

இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்து நடித்துள்ளார்.படத்திற்கு இரண்டு வானம் என தலைப்பு வைத்துள்ளனர்.
விஷ்ணு விஷாலின் `இரண்டு வானம்' படத்தின் செகண்ட் லுக் வெளியானது
Published on

கடந்த 2018 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் , அமலா பால், காளி வெங்கட், அம்மு அபிராமி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து ராம் குமார் இயக்கத்தில் வெளியானது ராட்சசன் திரைப்படம் . இப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இந்நிலையில் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மீண்டும் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

இப்படத்தை சத்ய ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு நேற்று வெளியிட்டது. படத்திற்கு இரண்டு வானம் என தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் படத்தின் செக்ண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படம் ஒரு ஃபேண்டசி ராம் - காம் திரைப்படமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் இசையை திபு நினன் தாமஸ் மேற்கொள்கிறார். படத்தை பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com