என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijay Sethpathi"

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள்.

    நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன.

    சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

    பிக்பாஸ் சீசன் 9 தமிழில் நாளை முதல் தொடங்கும் நிலையில், இன்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.

    15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார். 

    இதில், இன்ஸ்டா பிரபலமான அரோரா சின்கிளர் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். பலூன் அக்கா என்று அழைக்கப்படும் அரோராவுக்கு பெரிய அளவில் ஃபாளோவர்ஸ் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத்.
    • பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனர்களுள் ஒருவர் பூரி ஜெகநாத். இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் பவன் கல்யாண் நடிப்பில் பத்ரி திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து மகேஷ் பாபு நடிப்பில் போக்கிரி திரைப்படத்தை இயக்கினார். இப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்று படத்தை பல மொழிகளில் ரீமேக் செய்தனர்.

    இவர் இயக்கிய இட்லு ச்ரவனி சுப்ரமணியம்,அப்பு, இடியட், சிவமணி, பிஸ்னஸ்மேன், ஹார்ட் அடாக், டெம்பர், இஸ்மார்ட் ஷங்கர் திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.

    இந்நிலையில் பூரி ஜெகநாத் அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி வைத்து திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

    படத்தில் விஜய் சேதுபதியுடன் தபு,சம்யுக்தா, துனியா விஜய், நிவேதா தாமஸ், மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

    இப்படத்தை பூரி ஜெகநாத் மற்றும் ஜேபி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். படத்தின் சிறு பூஜை விழா இன்று நடைப்பெற்றது. இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. படத்தை பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • விஜய் சேதுபதி 51 திரைப்படமாக ACE திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் பாடலான உருகுது உருகுது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விஜய் சேதுபதி 51 திரைப்படமாக ACE திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.

    விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதியின் 51 திரைப்படமாக ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் பாடலான உருகுது உருகுது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' திரைப்படம்
    • திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இவ்விழாவில் பட குழுவினருடன் ' மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் ரியோ ராஜ், இயக்குநர் ஹரிஹரன் ஆனந்த் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து படத்தின் இசையை விஜய் சேதுபதி வெளியிட, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

    ஏகனுடைய பெரியப்பா வேடத்தில் நடித்திருக்கிறேன். படங்களில் நான் லோக்கலாக 'கவுன்ட்டர்' அடித்து கொண்டிருப்பேன். ஆனால் இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட என்னை 'கவுன்ட்டர்' அடிக்க விடாமல் முழுவதுமாக கட்டுப்படுத்தி விட்டார் இயக்குநர் சீனு ராமசாமி. படமாக பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

    'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி பேசுகையில், ''சகோதரன் ஏகனுக்கு முதலில் வாழ்த்துகள். இதுபோன்ற மேடையில் 11 ஆண்டுகளுக்கு முன் நிற்கும்போது உங்கள் அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை. நான் மிகவும் நடுக்கத்துடன் தான் இருந்தேன். ஆனால் உங்கள் முகத்தில் நல்லதொரு நம்பிக்கை தெரிகிறது. பாடல்களிலும் காட்சிகளிலும் உங்களுடைய நடிப்பு நன்றாக இருக்கிறது. இந்த விழா எப்படி இருக்கிறது என்றால்... நான் இருந்த இடத்தில் என்னுடைய 'பாஸ்ட்' டும், 'பிரசென்ட்'டும் இருப்பது போல் இருக்கிறது. ஆனால் உங்களுடைய 'ஃபியூச்சர்' என்னை விட சிறப்பாக இருக்க வேண்டும் என ஏகனுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நிகழ்வில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில், ''சினிமா உண்மையிலேயே ஒரு மாற்றத்தை சந்திக்க வேண்டும் என்றால் இடைவேளை என்ற ஒரு விஷயத்தை நீக்கிவிட வேண்டும். இது மிக முக்கியமான கருத்து. உடனடியாக திரையரங்குகளில் பாப்கார்ன் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் என் மீது கோபம் கொள்ளக்கூடாது. ஏனெனில் பாப்கார்ன் சாப்பிடுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதனை சாப்பிடுவார்கள்.

    சினிமா என்பது முழு உடல். அதனை அரை மணி நேரம் பார்த்துவிட்டு அப்படியே நிறுத்திவிட்டு, இதற்கு முன் எப்படி இருக்கும் எனக் கேட்பது தவறு. முழு உடல், முழு தரிசனம். அப்படி ஒரு முழு தரிசனம் இந்த 'கோழிப்பண்ணை செல்லதுரை'யில் கிடைக்கும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    https://iflicks.in/

    • விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது.
    • திரைப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்து கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் விடுதலை. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன்.

    இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, சூரி, எஸ்.ஜே சூர்யா மற்றும் மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    திரைப்படம் வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டப்பிங் பணிகள் இன்று ஆரம்பித்தது. இதில் விஜய் சேதுபதி, சூரி, போஸ் வெங்கட் ,வெற்றி மாறன் கலந்துக்கொண்டனர். இதுக்குறித்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கியுள்ளார்.
    • திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'கிஸ்மத்' படம் மூலம் மலையாள சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷேன் நிகாம்.

    தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'இஷ்க்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'ஆர்டிஎக்ஸ்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.

    ஷேன் நிகாம் தற்போது 'மெட்ராஸ்காரன்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக களம் இறங்கியுள்ளார்.

    இயக்குனர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் கலையரசன், நிஹாரிகா கொனிடேலா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    எஸ்.ஆர் புரொடக்சன்ஸ் சார்பில் ஜெகதீஷ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர். வசந்தகுமார் படத்தொகுப்பு செய்கிறார்.

    இந்நிலையில், ஷேன் நிகாம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் 'மெட்ராஸ்காரன்' திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கியுள்ளது.

    படத்தின் டிரெய்லர் நாளை மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு வெளியிட்டுள்ளது. டிரெய்லரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிடவுள்ளார். இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நாளை மாலை 6 மணிக்கு சத்யம் சினிமாஸ்-ல் நடைப்பெறவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
    • படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது.

    இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள பன் பட்டர் ஜாம் திரைப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

    கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இதை ரெயின் ஆஃப் ஆரோஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

    படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் படக்குழு வெளியிட்டது. இளம் தலைமுறையின் காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு திரைப்படமாகும். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை வெளியாகவுள்ளது. இந்த பாடலின் வரிகளை நடிகர் விஜய் சேதுபதி எழுதியுள்ளார். இதன் மூலம் விஜய் சேதுபதி பாடலாசிரியர் அறிமுகமாகவுள்ளார். இப்பாடலை சித்தார்த் மற்றும் ஷில்பா ராவ் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலர் பாணியில் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் இரண்டாவது படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #NenjamunduNermaiyunduOduRaja #NNOR
    கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்த படம் உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்தகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 

    கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்த படத்தில் ரியோ ராஜ் நாயகனாக நடிக்க, ஷிரின் கஞ்ச்வாலா நாயகியாக தமிழில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராதாரவி, நாஞ்சில் சம்பத், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த் மற்றும் யூடியூப் பிரபலங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். ஷபீர் இசையமைக்க, யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.



    இந்த படத்தின் தலைப்பை படக்குழு இன்று வெளியிட்டது. படத்தின் எம்.ஜி.ஆரின் பிரபல பாடலான `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' என்று தலைப்பு வைத்துள்ளார்கள். படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை வீடியோ வடிவில் படக்குழு வெளியிட்டது. அதனை விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் டிரைலர் பாணியில் வடிவமைத்து படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்கள். இந்த வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. #NenjamunduNermaiyunduOduRaja #NNOR #SKProductions #RioRaj #ShirinKanchwala

    நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா தலைப்பு குறித்த வீடியோ:

    ×