என் மலர்
நீங்கள் தேடியது "எம்.எஸ்.தோனி"
- ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் ஓமன் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சுக்லா 2 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- ஓமன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஓமன் அணி, யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர். அந்த அணி கடைசி வரை போராடி 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷன் என ஓமன் அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் விநாயக் சுக்லா கூறினார். மேலும் அவர் ஆட்டங்களை முடித்து அணியை வழிநடத்து விதம் ஈடு இணையற்றது. அவர் எனது குரு என கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் சுக்லா 2 பந்தில் 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
- அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.
- அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் தொடர்வார் என்று தோனி தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியது எம்.எஸ்.தோனி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மேலும், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் தொடர்வார் என்று தோனி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தோனி, "அடுத்த ஆண்டு ருதுராஜ் கெய்க்வாட் வந்துவிடுவார், அவர் வந்ததும் அனைத்தும் சரியாகிவிடும். ஐபிஎல் 2025-ல் நாங்கள் சரியாக விளையாடவில்லை என்று சொல்லவில்லை. இருப்பினும் சில இடங்களில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். மினி ஆக்சன் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் அணியில் சில வீரர்களை எடுக்க உள்ளோம்.
அடுத்த 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடும் அளவுக்கு, என்னுடைய கண்கள் நன்றாக உள்ளது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். சூட்சமம் என்னவென்றால், உடல் தகுதிக்கு இன்னும் TICK மார்க் கிடைக்கவில்லை. கண்களை வைத்து மட்டுமே விளையாட முடியாதே" என்று கிண்டலாக தெரிவித்தார்.
- அஸ்வினின் யூடியூப் சேனலுக்கு ஜடேஜா பேட்டியளித்தார்.
- அந்த நேர்காணலில் பல சுவாரஷ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.
இந்திய அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சக சி.எஸ்.கே. வீரர் அஷ்வினுக்கு பேட்டி அளித்தார். அந்த நேர்காணலில் பல சுவாரஷ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார்.
அந்த நேர்காணலில் பேசிய ஜடேஜா, "எனது கிரிக்கெட் பயணத்தை செதுக்கியது 2 மகேந்திரன்கள் தான். ஒருவர் எனது சிறுவயது பயிற்சியாளர் மகேந்திரசிங் சவுகான். மற்றொருவர் மகேந்திர சிங் தோனி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தோனியை பற்றி ஒரே வார்த்தையில் விவரிக்கச் சொன்னால் என்ன சொல்வீர்கள் என்று ஜடேஜாவிடம் அஷ்வின் கேள்வி எழுப்பினார். அதற்கு "அவரது மகத்துவத்தை விவரிக்க வார்த்தையே இல்லை. அவர் அனைவருக்கும் மேலாக நிற்கிறார்" என்று ஜடேஜா பதிலளித்தார்.
- இது சிஎஸ்கே அணியின் 3வது வெற்றி ஆகும்.
- கொல்கத்தாவுக்கு கிடைத்த 6வது தோல்வி இதுவாகும்.
ஐ.பி.எல். தொடரின் 57-வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.4 ஓவரில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இது சிஎஸ்கே அணியின் 3வது வெற்றி ஆகும். கொல்கத்தாவுக்கு கிடைத்த 6வது தோல்வி இதுவாகும்.
இப்போட்டியில் இறுதி ஓவரில் சிக்ஸ் அடித்து வெற்றிக்கு உதவிய கேப்டன் எம்.எஸ். தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 100 முறை அவுட் ஆகாமல் இருந்து சி.எஸ்.கே கேப்டன் தோனி போட்டியை முடித்துக் கொடுத்துள்ளார். இதில் சேஸிங்கில் 42 முறையும் வெற்றி பெட்ரா போட்டிகளில் 60 முறையும் தோனி நாட் அவுட்டாக இருந்துள்ளார்.
- சி.எஸ்.கே. அணி விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
- 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் சி.எஸ்.கே. அணி உள்ளது.
5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. 5-ல் தோற்றது. 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.
கடந்த 23-ந் தேதி நடந்த முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. அதன் பிறகு ஆர்.சி.பி. (50 ரன்), ராஜஸ்தான் ராயல்ஸ் (6 ரன்) , டெல்லி கேப்பிட்டல்ஸ் (25 ரன்), பஞ்சாப் (18 ரன்) , கொல்கத்தா (8 விக்கெட்) என தொடர்ச்சியாக தோற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 7-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை இன்று (திங்கட்கிழமை) இரவு 7.30 மணிக்கு சந்திக்கிறது. லக்னோவில் உள்ள வாஜ்பாய் ஸ்டேடியத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது.
தொடர்ந்து 5 தோல்வியை சந்தித்துள்ள சி.எஸ்.கே அணி 2-வது வெற்றிக்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறது. எஞ்சி இருக்கும் 8 போட்டியில் 7-ல் வெற்றி பெற வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் இருக்க இயலும்.
சி.எஸ்.கே. கேப்டனாக பணியாற்றிய ருதுராஜ் கெய்க்வாட் கவுகாத்தியில் நடந்த போட்டியின் போது காயம் அடைந்தார். இதனால் அவர் போட்டியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆட்டத்தில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை டோனி ஏற்றுள்ளார்.
இந்நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பையை சேர்ந்த 17 வயதான தொடக்க வீரர் ஆயுஷ்மத்ரே சேர்க்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் எஞ்சிய போட்டிகளில் சி.எஸ்.கே. அணியில் இணைந்து கொள்வார். வருகிற 20-ந் தேதி மும்பைக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் அவர் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது.
ஆயுஷ் மத்ரே ஏற்கனவே தேர்வு பயிற்சி முகாமில் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். 17 வயதான இவர் இதுவரை 9 முதல் தர போட்டிகளில் விளையாடி 504 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்
இதன்மூலம் பிரித்விஷாவின் வாய்ப்பு பறிபோகியுள்ளது. ஐ.பி.எல். ஏலத்தில் விலை போகாத அவர் ருதுராஜூக்கு பதிலாக அணியில் இடம் பெறுவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 2008 ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்தது கிடையாது.
- எனக்கு 43 வயது, ஐபிஎல் 2025 முடிவதற்குள், எனக்கு 44 வயது இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ். தோனி தனது ஓய்வு வதந்திகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் தோனியின் பெற்றோர் வருகை தந்திருந்தனர். இதுவரை, அதாவது (2008) ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்தது கிடையாது. இந்நிலையில் நேற்று அவர்கள் வந்திருந்ததால் தோனி தனது ஐபிஎல் லீக் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக வதந்திகள் பரவின.
இந்நிலையில் சமீபத்திய பாட்காஸ்டில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தோனி, "இல்லை, இப்போதைக்கு இல்லை. நான் இன்னும் ஐபிஎல் விளையாடுகிறேன். நான் அதை மிகவும் எளிமையாக எடுத்துக்கொள்கிறேன். நான் அதை ஒரு வருடத்திற்கு ஒரு முறை செய்கிறேன்.
எனக்கு 43 வயது, ஐபிஎல் 2025 முடிவதற்குள், எனக்கு 44 வயது ஆகியிருக்கும். எனவே அதன் பிறகு நான் விளையாடுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய எனக்கு 10 மாதங்கள் உள்ளன. ஆனால் முடிவு செய்வது நான் அல்ல, என் உடல்தான் முடிவு செய்கிறது. எனவே, இன்னும் ஒரு வருடம் இருக்கிறது, அதன் பிறகு பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
- நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.
- வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.
மும்பைக்கு எதிரான நேற்றையப் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்ற நிலையில், சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டாலும், அணிக்கான முடிவுகளை தோனி எடுப்பதாக பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், சிஎஸ்கே அணிக்கான முடிவுகளை ருதுராஜ் கெய்க்வாட்டின் பின்னணியில் இருந்து தான் எடுப்பதாக கூறப்படுவதை தோனி மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ருதுராஜ் கெய்க்வாட் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பல ஆண்டுகளாக பயணிக்கிறார். அவர் மிகவும் அமைதியானவர். அவரிடம் சிறந்த தலைமைப் பண்பு உள்ளது. அதன் காரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்படுவதற்கு அவர் கருத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டார்.
இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு நான் ருதுராஜிடம் கூறியது என்னவென்றால், நான் ஒரு அறிவுரை கூறினால் அதனை நீங்கள் கண்டிப்பாக கேட்டு நடக்க வேண்டும் என அர்த்தம் கிடையாது. நான் முடிந்த அளவுக்கு உங்களது முடிவுகளில் இருந்து விலகியே இருப்பேன் என்றேன்.
கடந்த ஐபிஎல் தொடரின்போது, ருதுராஜ் கெய்க்வாட் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான்தான் இருக்கிறேன் என பரவலாக பேசப்பட்டது. ஆனால், உண்மையில் 99 சதவிகித முடிவுகளை எடுத்தது அவர்தான். பந்துவீச்சில் மாற்றங்கள், ஃபீல்டிங்கில் மாற்றங்கள் போன்ற மிகவும் முக்கியமான முடிவுகளை அவர்தான் எடுத்தார். அவருக்கு நான் உதவியாக இருந்தேன். வீரர்களை ருதுராஜ் மிகவும் அருமையாக கையாண்டார்.
என தோனி கூறினார்.
- தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
- இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் 'தக் லைஃப்' (Thug Life). மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் கிட்டதட்ட முடியும் கட்டத்தில் இருக்கிறது. இத்திரைப்படம் வரும் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
நேற்று இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் கமல்ஹாசன் மற்றும் சிம்பு இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று ஐபிஎல் தொடரில் மும்பை அணியை சென்னை அணி எதிர்கொளவதை ஒட்டி தக் லைஃப் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. அதில், கமல்ஹாசன், எம்.எஸ்.தோனி ஒருபக்கமும் சிம்பு, ருதுராஜ் மறுபக்கமும் இடம்பெற்றுள்ளனர்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
- கொல்கத்தா வெற்றி பெற வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன்.
ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
இந்த ஐ.பி.எல். தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் மற்றும் சிஎஸ்கே அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர் பிராவோ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடந்தால் எந்த அணியை ஆதரிப்பீர்கள் என்று பேட்டி ஒன்றில் பிராவோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பிராவோ, "கே.கே.ஆர். vs சிஎஸ்கே அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடினால், கொல்கத்தா வெற்றி பெற வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். நான் அந்த அணியில் தான் ஆலோசகராக இருக்கிறேன்.
இதனை எம்.எஸ்.தோனி புரிந்துகொள்வார். எனக்கு கொல்கத்தா அணியில் இருந்து எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, நான் தோனியை தான் அழைத்து பேசினேன். அவர் சம்மதம் சொன்னபிறகு தான் அந்த அழைப்பை நான் ஏற்றுக்கொண்டேன். அதுதான் நான் தோனி மேல் வைத்திருக்கும் மரியாதை" என்று தெரிவித்தார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்த புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
- 100வது டெஸ்ட் போட்டிக்கு நினைவு பரிசு வழங்க தோனியை அழைத்தேன், அவரால் வரமுடியவில்லை
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களாக அஷ்வின், ஸ்ரீகாந்த் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய அஷ்வின், "என்னுடைய 100வது டெஸ்ட் போட்டிக்கு நினைவு பரிசு வழங்க தோனியை அழைத்தேன், அவரால் வரமுடியவில்லை. ஆனால், மீண்டும் என்னை சிஎஸ்கேவுக்கு அழைத்து மறக்க முடியாத பரிசை தோனி கொடுத்து விட்டார்" என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.
முன்னதாக பேசிய ஸ்ரீகாந்த், "வெங்கட்ராமனுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து இந்தியாவுக்காக உச்சம் தொட்ட ஸ்பின்னர் அஷ்வின்தான். அஷ்வினை தோனி நன்றாகப் பயன்படுத்தி மெருகேற்றினார். பஞ்சாப், ராஜஸ்தான் என ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு அஷ்வின் மீண்டும் சென்னைக்கு வந்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.
- ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- ஐபிஎஸ் அதிகாரி தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவித்ததாக தோனி புகார் கூறியிருந்தார்.
கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் விசாரணை நடத்தி அறிக்கையை தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் தன்னுடைய பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு அவர் மீது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கடந்த 2014 ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி ஆசிரியர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் ஆகியோர் எதிர்மனு தாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் சம்பத் குமார் பதில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகள் குறித்து களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை அவர் தெரிவித்துள்ளதாக கூறி, சம்பத் குமார் மீது, சென்னை உயர்நீதிமன்றத்தில் தோனி தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் அனுமதியை பெற்று இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக தோனி தன்னுடைய மனுவில் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கிரிக்கெட் பற்றிய துருவ் ஜுரலின் அணுகுமுறையும் ஆட்டத்தின் போக்கைக் கணித்து ஷாட்களை விளையாடுவது ஆச்சரியமாக உள்ளது
- இவரைப் பார்க்கும் போது அடுத்த எம்.எஸ். தோனி உருவாவது போல் தோன்றுகிறது
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 353 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. அதில் 307 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் துரூவ் ஜுரல் 90 ரன்கள் சேர்த்துத் தடுமாறிய இந்திய அணியை ஓர் அளவிற்கு ரன்கள் சேர்க்க உதவினார். இந்த அசத்தலான ஆட்டத்தின் மூலம் துருவ் ஜுரல் தனது முதல் டெஸ்ட் அரைச்சதத்தைப் பதிவு செய்தார்.
இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்துத் தடுமாறி இருந்த போது தான் துருவ் ஜுரல் களத்திற்கு வந்து, இந்திய அணியை ஓர் நல்ல ரன்களை எடுக்க உதவியாக இருந்தார்.
துருவ் ஜுரலின் இந்த ஆட்டத்தை பார்த்து வியந்த சுனில் கவாஸ்கர் அவரை முன்னாள் வீரர் எம்.எஸ்.தோனியோடு ஒப்பிட்டுப் பாராட்டி உள்ளார்.
இது குறித்து பேசிய கவாஸ்கர், "கிரிக்கெட் பற்றிய துருவ் ஜுரலின் அணுகுமுறையும் ஆட்டத்தின் போக்கைக் கணித்து ஷாட்களை விளையாடுவது ஆச்சரியமாக உள்ளது. இவரைப் பார்க்கும் போது அடுத்த எம்.எஸ். தோனி உருவாவது போல் தோன்றுகிறது" இவ்வாறு சுனில் கவாஸ்கர் துருவ் ஜுரலை பாராட்டியுள்ளார்.






