என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

எனக்கு 44 வயது ஆகப்போகிறது.. ஐ.பி.எல். ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி!
- 2008 ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்தது கிடையாது.
- எனக்கு 43 வயது, ஐபிஎல் 2025 முடிவதற்குள், எனக்கு 44 வயது இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ். தோனி தனது ஓய்வு வதந்திகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் தோனியின் பெற்றோர் வருகை தந்திருந்தனர். இதுவரை, அதாவது (2008) ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்தது கிடையாது. இந்நிலையில் நேற்று அவர்கள் வந்திருந்ததால் தோனி தனது ஐபிஎல் லீக் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக வதந்திகள் பரவின.
இந்நிலையில் சமீபத்திய பாட்காஸ்டில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தோனி, "இல்லை, இப்போதைக்கு இல்லை. நான் இன்னும் ஐபிஎல் விளையாடுகிறேன். நான் அதை மிகவும் எளிமையாக எடுத்துக்கொள்கிறேன். நான் அதை ஒரு வருடத்திற்கு ஒரு முறை செய்கிறேன்.
எனக்கு 43 வயது, ஐபிஎல் 2025 முடிவதற்குள், எனக்கு 44 வயது ஆகியிருக்கும். எனவே அதன் பிறகு நான் விளையாடுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய எனக்கு 10 மாதங்கள் உள்ளன. ஆனால் முடிவு செய்வது நான் அல்ல, என் உடல்தான் முடிவு செய்கிறது. எனவே, இன்னும் ஒரு வருடம் இருக்கிறது, அதன் பிறகு பார்ப்போம்" என்று தெரிவித்தார்.






