என் மலர்
தலைப்புச்செய்திகள்
- பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜுனைத் ஜாபர் கான்.
- 107 டிகிரி வெப்பநிலையில் விளையாடியதால் இந்த இறப்பு எற்பட்டதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜுனைத் ஜாபர் கான் ஆவார். அவர் சர்வதேச அளவில் விளையாடாத இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்தார்.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் உள்ள கான்கார்டியா கல்லூரி ஓவல் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால் திடீரென மைதானத்திலேயே ஜூனைத் மயங்கி விழுந்தார்.
உடனே மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி வழங்கினர். ஆனால் அது பலனளிக்கவில்லை. அவர் மைதானத்திலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்த போட்டிக்கு முன்னதாக அவர் ரம்ஜான் பண்டிகைக்காக நோன்பு இருந்து வந்துள்ளார். 107 டிகிரி வெப்பநிலையில் விளையாடியதால் இந்த இறப்பு எற்பட்டதாக கூறப்படுகிறது.
- டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்றார் அமைச்சர் ரகுபதி.
- பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் அமலாக்கத்துறை மூலமாக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
டாஸ்மாக் நிறுவன அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை குறித்து அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாற்று கட்சி ஆட்சி நடத்தும் மாநிலங்களை பழிவாங்க மாட்டோம் என பாஜகவினர் சொன்னார்கள்.
ஆனால், பாஜக ஆளாத மாநிலங்களில் பழிவாங்கும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.
மாற்று கட்சியினர் எங்கெல்லாம் ஆட்சி செய்கிறார்களோ அங்கெல்லாம் மத்திய பாஜக அரசு பழி வாங்குகிறது.
அமலாக்கத்துறை வழக்கு தொடரப்பட்டவர்கள் பாஜகவில் சேர்ந்தவுடன் புனிதர்களாகி விடுகிறார்கள்.
பாஜக ஆளாத மாநிலங்களில் எல்லாம் அமலாக்கத்துறை மூலமாக நெருக்கடி கொடுக்கப்படுகிறது.
டெல்லி பாணியில் அரசியல் செய்யலாம் என்று பாஜக கனவு கண்டு கொண்டிருக்கிறது.
அமலாக்கத்துறையில் இருப்பவர்கள் எல்லாம் யோக்கியர்கள் அல்ல. அமலாக்கத்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துறை அதிகாரிகளே லஞ்சம் வாங்குகிறார்கள்.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழலுக்கு ஏதேனும் ஆதாரங்கள் இருக்கிறதா ?
அனுமதியின்றி போராடப் போகிறவர்களை முன்னெச்சரிக்கையாக கைது செய்வது தவறு இல்லை. முதலமைச்சர் வீட்டை முற்றுகையிட அண்ணாமலை வந்து பார்க்கட்டும்; என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை.
டாஸ்மாக் மதுபான விற்பனையால் இளம் விதவைகள் அதிகரிப்பதாக கூறுவதில் உண்மை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- விஜய் சேதுபதி 51 திரைப்படமாக ACE திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் 50 - வது திரைப்படமான மகாராஜா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி ஏஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுககுமார் இயக்கியுள்ளார். இதற்கு முன் ஆறுமுககுமார் விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் இணைந்து நடித்த 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' திரைப்படத்தை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. படத்தில் யோகி பாபு, பப்லு பிரித்விராஜ், பி.எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். கரன் பி ராவத் ஒளிப்பதிவு மேற்கொள்ள கோவிந்தராஜ் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் பாடலான உருகுது உருகுது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கன்னோஜில் கட்டுப்பாட்டை இழந்து லாரி காந்தி சிலை மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
- இந்த விபத்தில் சிலை பெருமளவில் சேதமடைந்தது.
உத்தரபிரதேச மாநிலத்தில் லாரி மோதியதில் காந்தி சிலை. பீடத்துடன் உடைந்து விழுந்தது. இதனால், மதுபோதையில் இருவர் அழுது புலம்பியது இணையத்தில் வைரலானது.
கன்னோஜில் கட்டுப்பாட்டை இழந்து லாரி காந்தி சிலை மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிலை பெருமளவில் சேதமடைந்தது.
விபத்தில் உடைந்த காந்தி சிலை அருகே மதுபோதையில் 2 நபர்கள் கட்டிபிடித்தபடியே அழுது புரண்டனர்.
- ஐந்து நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- பிரபல கேஸ்டிங் நிறுவனம் ஒன்றின் மேலாளர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
உற்சாக பானம் (எனர்ஜி டிரிங்க்) விளம்பரத்தில் நடிக்க வைக்கப்பட்டு இந்தி தொலைக்காட்சி பிரபலங்கள் மீது நடந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உற்சாக பானம் விற்பனை செய்யும் நிறுவனத்தின் விளம்பரம் எனக் கூறி நடிக்க வைத்துவிட்டு அதற்கு எந்த சம்பளமும் தராமல் 25 பிரபலங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். அதில் பிரபல இந்தி சீரியல் நடிகை அங்கிதா லோகண்டேவும் ஒருவர்.
அங்கிதா லோகண்டே, ஆயுஷ் சர்மா மற்றும் அட்ரிஜா ராய் உட்பட 25 நடிகர்களிடம் கிட்டத்தட்ட 1.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ஐந்து நபர்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விளம்ரபரங்களுக்கு ஆள் பிடித்து கொடுக்கும் பிரபல கேஸ்டிங் நிறுவனம் ஒன்றின் மேலாளர் அளித்த புகாரை அடுத்து போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
- ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்?
- அடக்குமுறைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
டாஸ்மாக் ஊழல் போராட்டத்துக்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்: போராட்டத்துக்கு முன்பே அண்ணாமலை உள்ளிட்ட பாரதிய ஜனதா தலைவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது!
ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதற்கு முன்பே பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களை காவல்துறை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ஊழலுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டு அரசும் காவல்துறையும் அஞ்சுவது ஏன்? தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக ஜனநாயக முறையில் போராடுவதற்கு கூட அனுமதி இல்லையா?
திமுகவினர் ஊழல் செய்யவில்லை என்றால் இத்தகைய அடக்குமுறைகளை கைவிட்டு, டாஸ்மாக் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- 'டேஸ்ட் அட்லஸ்' உலகின் 50 சிறந்த பிரெட்கள் பட்டியலை வெளியிட்டது.
- இந்தியாவைச் சேர்ந்த பட்டர் கார்லிக் நாண்-க்கு முதலிடம் பிடித்துள்ளது.
'டேஸ்ட் அட்லஸ்' என்ற உலகின் பிரபல உணவு மற்றும் பயண நிறுவனம் உலகின் 50 சிறந்த பிரெட்கள் பட்டியலை வெளியிட்டது.
உலகின் 50 சிறந்த பிரெட்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் பிரபல உணவான பரோட்டா 6ம் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த பட்டர் கார்லிக் நாண்-க்கு முதலிடம் பிடித்துள்ளது. வட இந்திய உணவான Paratha 18 ஆவது இடத்தையும் Bhatura 26ம் இடத்தையும் பிடித்துள்ளது.
- கடந்த பிப்ரவரி 1-ந்தேதி முதல் பல்வேறு மாடல்களுக்கு 32500 ரூபாய் வலை உயர்த்தப்படும் எனத் தெரிவிந்தது.
- இந்த நிலையில் வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 4 சதவீதம் உயர்த்தப்படும் எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்ளில் ஒன்று மாருதி சுசுகி. இந்த நிறுவனம் பல்வேறு நோக்கத்திற்காக வாகனங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது.
தற்போது உற்பத்தி செலவு மற்றும் செயல்பாட்டு செலவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கான 4 சதவீதம் வரை வாகனங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இந்த விலை ஏற்றம் அமலுக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மாடல்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும்.
கடந்த ஜனவரி மாதம், பிப்ரவரி 1-ஆம் தேதியில் இருந்து பல்வேறு மாடல்களுக்கு 32,500 ரூபாய் வரை விலை உயர்த்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த நிலையில்தான் தற்போது அந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பங்குச் சந்தையில் மாருதி சுசுகியின் ஒரு பங்கு 11578.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று பங்கின் விலை 0.61 சதவீதம் உயர்ந்தது.
- ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
- தொடக்க நாளில் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சிகள் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உலகின் பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர் ஐபிஎல். இந்த தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
5 அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த தொடர் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் தொடக்க நாளில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த முறையும் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சிகள் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கலை நிகழ்ச்சிகளில் பிரபல பாலிவுட் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி மற்றும் பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவுஜ்லா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுவும் வெளியாகவில்லை.
- எங்களை குச்சிகள், கட்டைகள் மற்றும் பேஸ்பால் மட்டைகளால் தாக்கினர்.
- நாங்கள் மயங்கி விழுந்தோம். மீண்டும் கண்விழித்து பார்க்கும்போது அவர்கள் எங்களை அப்போதும் தாக்கிக்கொண்டுதான் இருந்தனர்.
பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் மூன்று பேர் ஒரு ராணுவ அதிகாரியையும் அவரது மகனையும் சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த மார்ச் 14 அதிகாலை ராணுவ அதிகாரி ஒருவரும் அவரது மகனும் தங்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்த உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது சாதாரண உடையில் வந்த மூன்று போலீஸ் அதிகாரிகள் தங்கள் காரை அங்கே நிறுத்த, ராணுவ அதிகாரியை அவரது காரை எடுக்க சொல்லியுள்ளனர். அவர்கள் மிரட்டலாக சொன்னதால், ராணுவ அதிகாரி தனது காரை எடுக்க மறுத்துள்ளார். இதனால் ராணுவ அதிகாரியை போலீஸ்காரர்களில் ஒருவர் குத்தியுள்ளார். தடுக்க வந்த அவரது மகனையும் தாக்கியுள்ளனர்.
ராணுவ அதிகாரியின் மகன் கூற்றுப்படி, அவர்கள் எங்களை குச்சிகள், கட்டைகள் மற்றும் பேஸ்பால் மட்டைகளால் தாக்கினர். நாங்கள் மயங்கி விழுந்தோம்.
மீண்டும் கண்விழித்து பார்க்கும்போது அவர்கள் எங்களை அப்போதும் தாக்கிக்கொண்டுதான் இருந்தனர். குறைந்தது 45 நிமிடங்கள் அவர்கள் எங்களை தாக்கினர் என்று தெரிவித்தார். மேலும் அந்த போலீஸ்காரர்கள் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் ராணுவ அதிகாரியின் கை முறிந்தது. அவரது மகனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
'இந்த தாக்குதல் தொடர்பாக நாங்கள் இரண்டு நாட்களாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய முயற்சித்தோம், ஆனால் போலீசார் எங்களுக்கு உதவவில்லை. எனக்கு மிரட்டல் அழைப்புகளும் வந்தன' என்று மகன் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் காவல்துறை இறுதியாக நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவத்தில் 12 அதிகாரிகளை பாட்டியாலா காவல்துறை இடைநீக்கம் செய்துள்ளது.

- 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம்.
- தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும்.
நம்மவர் படிப்பகங்கள் மூலம் கோடை விடுமுறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாது செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எதிர்காலத் தலைமுறையின் நலன்களை முன்னிறுத்திச் செயல்பட்டு வரும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பள்ளி மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டை வளர்ப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்.
இதன் ஒரு பகுதியாக தற்போது நம்மவர் படிப்பகங்களில் கோடைகால இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது.
தற்போது மதுரை, அருப்புக்கோட்டை, பரமக்குடி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்கள் மூலம் குழந்தைகள், மாணவ, மாணவிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள் என ஏராளமானோர் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.
கமல் பண்பாட்டு மையம் சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நம்மவர் படிப்பகங்களில் புத்தகங்களுடன், இலவச வை-பை வசதியுடன் கூடிய கணினிகளும் நிறுவப்பட்டுள்ளதால், தினமும் நூற்றுக்கணக்கானோர் இங்கு வருகை புரிகின்றனர்.
அமெரிக்காவில் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் மூலம் செயல்படும் லீப் என்ற அமைப்பு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சியை அளித்து வருகிறது. இந்நிறுவனத்துடன் இணைந்து நம்மவர் படிப்பகங்களில் கோடை விடுமுறையில் ஆங்கிலப் பேச்சு பயிற்சி முகாம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வாயிலாக இலவச ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி முகாம் ஏப்ரல் முதல் ஜூன் வரை 6 வாரங்களுக்கு நடத்தப்பட உள்ளது.
அமெரிக்காவில் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் அமெரிக்க மற்றும் இந்திய மாணவர்கள், ஆன்லைன் வாயிலாக நம்மவர் படிப்பகங்களில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்க உள்ளனர்.
ஆங்கிலத்தில் பேசுவதற்கு உள்ள தயக்கத்தைப் போக்கி, மாணவ, மாணவிகள் சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கு இந்தப் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய சிந்தனைகளுக்கு, இப்பயிற்சி முகாம் செயல்வடிவம் கொடுப்பதாக அமையும்.
குறிப்பாக, கிராமப்புற மாணவர்களின் தகுதியை மேம்படுத்தி, அவர்களது திறனை வளர்த்துக் கொள்ள உதவும். மாணவர்கள், மகளிர் ஆகியோரது மேம்பாட்டுக்கானப் பணிகளில் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து ஈடுபடும்.
சமத்துவச் சமுதாயத்தை உருவாக்கி, கல்வியும், திறன் மேம்பாடும் அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும் கிடைக்கச் செய்வதே மக்கள் நீதி மய்யத்தின் பிரதான நோக்கமாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதலில் வழக்கு தொடர்பான முக்கிய விஷயங்களை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தால் போதும் என ஆளுநர் கூறினார்.
- தற்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை முழுமையாக மொழி பெயர்த்து கொடுக்குமாறு கேட்கின்றார்- தமிழக அரசு
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடி செய்ததாக இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்து வருவதாகவும், இந்த வழக்கை விரைவாக விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ரவீந்திரன் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு கடந்த ஜனவரி 6-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே, தனக்கு எதிரான வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக ராஜேந்திர பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார்.
இந்த மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என்.பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, 'ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவு நியாயமானதாக இல்லை. கவர்னரிடமிருந்து ஒப்புதல் ஆணை பெறுவதில் சிக்கல் உள்ளது' என தெரிவித்தார்.
ராஜேந்திர பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் வி.கிரி சி.பி.ஐ. விசாரிக்க கோரிய ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்யவேண்டும் என வாதிட்டார்.
பின்னர் கடந்த 7-ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, 'இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு சூசகமான உத்தரவு பிறப்பிக்கவில்லையென்றால் ஒப்புதல் ஆணை பெறுவதில் மேலும் தாமதம் ஏற்படும்' என வாதிட்டார்.
ராஜேந்திர பாலாஜி தரப்பில் மூத்த வக்கீல் வி.கிரி வாதிட முற்பட்டபோது, மனுதாரருக்கு எதிரான வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால் என்ன? லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்தால் என்ன? என நீதிபதிகள் கேட்டனர்.
இதற்கு மூத்த வக்கீல் வி.கிரி, மனுதாரருக்கான எதிரான புலன்விசாரணை நிறைவடைந்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையின் மனுதாரர் ராஜேந்திர பாலாஜி கடந்த 5 ஆண்டுகளாக ஆஜராகியுள்ளார். சி.பி.ஐ. விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், நேரடியாக புலன் விசாரணையை தொடங்க முடியும் என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஒப்புதல் ஆணை கோரி தமிழ்நாடு அரசு எழுதிய கடிதங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்கும் பிரமாண பத்திரத்தை தமிழ்நாடு கவர்னரின் முதன்மைச் செயலாளர் அடுத்த விசாரணை நடைபெறும் வருகிற மார்ச் 17-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
அதன்படி இன்று வழக்கு விசாரணைக் வந்தது.
அப்போது தமிழக அரசு தரப்பில் "முதலில் வழக்கு தொடர்பான முக்கிய விஷயங்களை மட்டும் மொழிபெயர்ப்பு செய்து கொடுத்தால் போதும் என ஆளுநர் சொன்னார். ஆனால் தற்போது 400 பக்கத்துக்கும் அதிகமான ஆவணங்களை முழுமையாக மொழி பெயர்த்து கொடுக்குமாறு கேட்கின்றார்" எனக் கூறப்பட்டது.
அப்போது, ஆளுநர் வேண்டுமென்றே தாமதம் செய்கிறாரா? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. பின்னர். இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை ஆவணங்களை மொழி பெயர்த்து தமிழக அசு ஆளுநருக்கு அனுப்ப வேண்டும்.
மொழி பெயர்த்து தந்ததும், ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கான அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் ராஜேந்திர பாலாஜி வழக்கில் சிபிஐ மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க தடைவிதிக்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.






