என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரேயா கோஷல்"
- லைக்குகளை யாரும் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.
- இதுதான் இசை கலைஞர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருதும், அங்கீகாரமும்.
இந்திய அளவில் முன்னணி பாடகியாக திகழும் ஸ்ரேயா கோஷல், தேசிய விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை குவித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என பல மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரேயா கோஷல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கருத்துக்கள் கவனம் ஈர்த்துள்ளன.
அவர் பேசும்போது. "ஒரு பாடலின் உண்மையான வெற்றி என்பது ரசிகர்கள் தரும் லைக்குகளில் கிடையாது. ஒரு கச்சேரியில் அந்த பாடல் ஒலிக்கும்போது, ரசிகர்களும் சேர்ந்து பாடுவது தான். ரசிகர்களின் உதடுகள் அந்த பாடலை உச்சரிப்பது தான். இதுதான் இசை கலைஞர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய விருதும், அங்கீகாரமும் ஆகும்.
லைக்குகளை யாரும் எப்போது வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் ரசிகர்களின் மனநிலையை வெல்வதுதான் அந்த பாடலின் உண்மையான வெற்றி. ஒருவர் என்ன மனநிலையில் இருந்தாலும், அவரது மனதை அந்த பாடல் துளைத்து, ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதுதான் அந்த பாடலின் உண்மையான வெற்றி'' என்று குறிப்பிட்டார்.
- ஐபிஎல் தொடரின் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதுகிறது.
- தொடக்க நாளில் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சிகள் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
உலகின் பிரபலமான டி20 கிரிக்கெட் தொடர் ஐபிஎல். இந்த தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற்றது. இதில் ஒவ்வொரு அணியிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
5 அணிகளுக்கு புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த தொடர் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் தொடக்க நாளில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த முறையும் பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சிகள் நடத்த ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
கலை நிகழ்ச்சிகளில் பிரபல பாலிவுட் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி மற்றும் பஞ்சாபி பாப் பாடகர் கரண் அவுஜ்லா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதுவும் வெளியாகவில்லை.
- பெண்ணாக அந்த பயிற்சி மருத்துவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
- கொல்கத்தாவில் இம்மாதம் 14-ம் தேதி நடக்கவிருந்த எனது இசை நிகழ்ச்சியை அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கிறேன்.
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "சமீபத்தில் கொல்கத்தாவில் நிகழ்ந்த கொடூரமான சம்பவத்தால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். ஒரு பெண்ணாக அந்த பயிற்சி மருத்துவர் அனுபவித்த கொடூரத்தை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இப்படியான சம்பவம் என்னுள் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது.
கொல்கத்தாவில் இம்மாதம் 14-ம் தேதி நடக்கவிருந்த எனது இசை நிகழ்ச்சியை அக்டோபர் மாதத்திற்கு ஆழ்ந்த சோகத்துடன் தள்ளி வைக்கிறேன். இந்த நிகழ்ச்சி பலராலும் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நான் அனைவரையும் ஒற்றுமையுடன் இணைக்க வேண்டும்.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து பெண்களின் பாதுகாப்பிற்காகவும், மரியாதைக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்னுடைய இந்த முடிவை ரசிகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். மனித இனத்தின் மிருகங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம். தயவுசெய்து புதிய தேதியை அறிவிக்கும் வரை பொறுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.






