என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • 2021–2022 மற்றும் 2022–2023 கல்வியாண்டுகளுக்கான ஒன்றிய அரசின் 60% பங்களிப்பான ரூ.342.69 கோடி இதுவரை வழங்கப்படவில்லை.
    • ஒட்டுமொத்த செலவினங்களையும் தமிழக அரசே செய்துள்ளதாக தமிழக அரசு வாதம்.

    கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டிற்கு மாநில அரசு உடனே நிதியளிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான விசாரணையில், தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நிதி வழங்குவதில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் சம பங்கினைக் கொண்டுள்ளன. ஆனால், இந்த செலவினங்களுக்கு மாநில அரசாங்கமே பிரதான பங்கினை வகிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தவறானது என வாதிட்டார்.

    மேலும், 2025–2026 கல்வியாண்டிற்கான முழு நிதி செலவையும் மாநில அரசே அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், ஒன்றிய அரசும் இந்த செலவுகளுக்கு பங்களிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட வில்சன், 2021–2022 மற்றும் 2022–2023 கல்வியாண்டுகளுக்கான ஒன்றிய அரசின் 60% பங்களிப்பான ரூ.342.69 கோடி இதுவரை வழங்கப்படவில்லை. எனவே அந்த கல்வியாண்டுகளுக்கான ஒட்டுமொத்த செலவினங்களையும் தமிழக அரசே செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

    வில்சின் வாதங்களை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த மனுவின் மீது மத்தயி அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

    • அதிகபட்சமாக நெல்லையில் 333 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது.
    • தென்மேற்கு பருவமழை காலம் செப்டம்பர் மாதம் வரை உள்ளது.

    சென்னை:

    நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளம் நிலச்சரிவு ஏற்பட்டன. இதனால் கடுமையான உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் வடமாநிலங்களில் செப்டம்பர் மாதம் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன், ஜூலை, ஆகஸ்டு ஆகிய 3 மாதத்தில் இயல்பை விட கூடுதலாக மழை பெய்துள்ளது.

    வடகிழக்கு, கிழக்கு இந்தியாவின் சில பகுதிகள், கடைக்கோடி தென்தீபக்கற்ப பகுதிகளை தவிர்த்து நாடு முழுவதும் பரலாக அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை 209.7 மில்லி மீட்டர் பெய்ய வேண்டும். ஆனால் 214 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 6 மில்லி மீட்டர் அதிகமாகும். மொத்தம் உள்ள 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் சராசரி மழை அளவை விட கூடுதலாக பெய்துள்ளது.

    அதிகபட்சமாக நெல்லையில் 333 மி.மீ. மழை கூடுதலாக பெய்துள்ளது. தென்காசியில் 88 மி.மீ., கோவை 52 மி.மீ. மயிலாடுதுறை 49 மி.மீ. திருவள்ளூர் 44 மி.மீ., தேனி 41 மி.மீ., ராணிப்பேட்டை 40 மி.மீ., சென்னையில் 23 மி.மீ. கூடுதலாக மழை பெய்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை காலம் செப்டம்பர் மாதம் வரை உள்ளது. ஆனால் கடந்த 3 மாதங்களில் தமிழகத்தின் 38 மாவட்டங்களில் 19 மாவட்டங்களில் இயல்பைவிட மழை குறைவாக பெய்துள்ளது. இந்த மாதம் பரவலாக மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

    பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.

    இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.

    இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. U/A சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது

    படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது அதில் வெற்றி மாறன் தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தை மூடப்போவதாக அறிவித்தார் அதில் அவர் கூறியதாவது " தயாரிப்பாளரில் வேலை மிகவும் கடினமானது, இயக்குநரின் வேலை அதை ஒப்பிடும் போதுஜ் ஜாலியாக இருக்கிறது. தயாரிப்பாளரின் பொறுப்பு மிகப்பெரியது. இதனால் நான் தயாரிக்கும் கடைசி திரைப்படமாக Bad Girl இருக்கும். அத்துடன் கிராஸ் ரூட் நிறுவனத்தில் கடையை மூடுகிறோம்" என கூறினார்.

    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
    • ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்

    பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றார்.

    இன்று சீனாவில் தொடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

    உச்சி மாநாட்டிற்கு பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக மாநாட்டு அரங்கில் இருந்து ஒரே காரில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்யா அதிபர் புதின் புறப்பட்ட சென்றனர்.

    இந்நிலையில், அமெரிக்கா - இந்தியா இடையிலான உறவு தொடர்ந்து புதிய உச்சத்தை அடைந்து வருவதாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதரகம் பதிவிட்டுள்ளது ஏற்றப்படுத்தியுள்ளது.

    சீனாவில் நடைபெற்று வரும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று ரஷ்ய அதிபர் புதினுடன் பேசி வரும் நிலையில், இந்த பதிவு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

    அருகே நின்று கொண்டிருந்த நடிகர் பவன்சிங், திடீரென அவரது இடுப்பை கிள்ளினார்.

    போஜ்புரி சினிமாவின் முன்னணி நடிகையான அஞ்சலி ராகவ், லக்னோவில் நடந்த ஒரு பட விழாவில் கலந்துகொண்டு பேசியபோது, அருகே நின்று கொண்டிருந்த நடிகர் பவன்சிங், திடீரென அவரது இடுப்பை கிள்ளினார்.

    அஞ்சலியும் சிரித்தபடி சமாளித்தார். பொதுமேடையிலேயே நடிகையின் இடுப்பை கிள்ளிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

    இடுப்பை தொடும் நடிகரிடம் எதிர்ப்பு தெரிவிக்காமல் அஞ்சலி சிரிக்கிறாரே... அவரும் இதை ரசித்து அனுபவிக்கிறாரோ, என்னவோ... என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஆவேசமடைந்த அஞ்சலி, ''இதை எப்படி ரசிப்பேன் என்று நினைக்கலாம். என் இடுப்பில் ஏதோ இருக்கிறது? என்று கூறியபடி பவன்சிங் தொட்டார். எனக்கு அதிர்ச்சி இருந்தாலும் மேடை என்பதால் காட்டிக்கொள்ளவில்லை. எந்த பெண்ணையும் அனுமதியின்றி தொடுவது தவறு. நான் அதை அனுமதிப்பதும் கிடையாது. இனி போஜ்புரி படங்களில் நான் பணியாற்ற போவதில்லை'', என்று அறிவித்தார்.

    இதற்கிடையில் தனது செயல்பாடு குறித்து மன்னிப்பு கேட்டிருக்கும் நடிகர் பவன்சிங், படங்களில் நடிக்க மாட்டேன் என்ற முடிவை வாபஸ் பெறுமாறும் அஞ்சலியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு அதிகமாக காலம் உள்ள ஆசிரியர்கள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும்.
    • ஓய்வு பெறும்போது கிடைக்கும் இறுதி சலுகைகளை பெற்றுக் கொண்டு கட்டாய ஓய்வு பெறலாம்.

    புதுடெல்லி:

    அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமா? என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை செய்யப்பட்டது.

    நீதிபதி தீபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

    அந்த வழக்கு விசாரணையின்போது, அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்கள், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், அதை கட்டாயப்படுத்தக்கூடாது என்று வாதம் வைக்கப்பட்டது.

    குறிப்பாக சிறுபான்மை கல்வி நிறுவனங்களை பொறுத்தவரைக்கும் அரசியல் சாசனம் அவர்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய உரிமையின் அடிப்படையில் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.

    அதேபோல ஓய்வு பெறக்கூடிய நிலையில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் தகுதி தேர்வு கட்டாயப்படுத்துவதற்கு முன்பாக பணியில் சேர்ந்து பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்தவரைக்கும் டெட் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று ஆக்கப்படுவதால் பாதிப்படைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் நீதிபதி தீபான்கர் தத்தா தலைமையிலான அமர்வு ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது

    அந்த தீர்ப்பில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என்று தீர்ப்பளித்தது.

    இருப்பினும் பல்வேறு சூழல்களை கருத்தில் கொண்டு, ஓய்வு பெறும் வயதை எட்ட 5 ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் என்றும், ஓய்வு பெற 5 ஆண்டுகளுக்கு அதிகமாக காலம் உள்ள ஆசிரியர்கள் தாங்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தகுதி பெற வேண்டும். இல்லையெனில் அவர்கள் தங்களது வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது ஓய்வு பெறும்போது கிடைக்கும் இறுதி சலுகைகளை பெற்றுக் கொண்டு கட்டாய ஓய்வு பெறலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

    அதேவேளையில், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் டெட் தேர்வை அரசு கட்டாயப்படுத்த முடியுமா?, அது அவர்களின் உரிமைகளை பாதிக்குமா? என்ற அம்சங்கள் குறித்து விசாரிப்பதற்காக இந்த வழக்கை உயர் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைப்பதாகவும் தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

    • பும்ரா சுப்மன் கில் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளனர்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்காக ரோகித் சர்மா ஆயத்தமாகி வருகிறார்.

    ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

    இந்திய அணியில் இடம் பெற்றுள்ள டெஸ்ட் கேப்டன் சுப்மன்கில், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு உடல் தகுதிக்கான சோதனை நடத்தப்பட்டது. பெங்களூரில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இருவரும் தேர்ச்சி பெற்றனர். இதே போல ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் ரோகித்சர்மாவும் உடல் தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றார்.

    சுப்மன்கில் 20 ஓவர் அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக துலிப் டிராபி போட்டியில் இருந்து அவர் விலகினார். இதனால் அவருக்கு உடல் தகுதி சோதனை கட்டாயமாக்கப்பட்டது.

    மராட்டியத்தை சேர்ந்த பிரபல இந்தி நடிகை பிரியா மராத்தே (வயது 38).

    மராட்டியத்தை சேர்ந்த பிரபல இந்தி நடிகை பிரியா மராத்தே (வயது 38). இவர் இந்தியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், பல்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் பவித்ரா ரிஷ்டா மற்றும் கசம் சே சீரியல்களின் மூலம் பிரபலமானாவர்.

    இதனிடையே, பிரியா மராத்தேவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் கடந்த சில மாதங்களாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரியா மராத்தே நேற்று உயிரிழந்தார். மும்பை மிரா சாலையில் உள்ள தனது வீட்டில் பிரியா மராத்தே உயிரிழந்தார். அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    அவருடைய சகோதரர், இணை நடிகர்கள் என அவருக்கு ஆழ்ந்த இரங்கல் செய்தியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    • மலைக்கோவில் சாலையை சீரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • ஏராளமான பக்தர்கள் படிக்கட்டு வழியாக நடந்து செல்கிறார்கள்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.

    பெரும்பாலான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு கார், பஸ், வேன், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மூலம் செல்வது வழக்கம். வாகனங்கள் மலைக்கோவிலுக்கு சென்று வருவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில், திருத்தணி -அரக்கோணம் சாலையில் இருந்து மலைப்பாதை உள்ளது.

    இந்த ஒரே பாதையில் அனைத்து வாகனங்களும் மலைக்கோவிலுக்கு சென்று வருவதால் கடந்தசில மாதங்களாக சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனை சரிசெய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் மலைக்கோவில் சாலையை சீரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மலைக்கோவில் பாதையில் சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெறும் இந்த பணி நாளை வரை நடக்கிறது.

    இதனால் மலைக் கோவிலுக்கு வாகனங்கள் செல்ல இன்றும், நாளையும் என 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கோவில் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் மூலம் மட்டும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

    இதனால் கோவில் பஸ்சில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் படிக்கட்டு வழியாக நடந்து செல்கிறார்கள். நாளை (செவ்வாய்க்கிழமை) மலைக்கோவிலுக்கு மோட்டார் சைக்கிள்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    பக்தர்கள் வசதிக்காக 4 பஸ்கள் மட்டும் மலைக்கோவிலுக்கு இயக்கப்படுகிறது. பிற எந்தவித வாகனங்களுக்கும் மலைப்பாதையில் செல்வதற்கு இன்றும் நாளையும் அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்..
    • ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

    பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றார்.

    நேற்று பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இதனையடுத்து இன்று சீனாவில் தொடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்..

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

    அப்போது மாணத்தில் கலந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கண்டுகொள்ளாமல் மோடியும் புதினும் பேசிக்கொண்டே சென்றனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2-வது மற்றும் கடைசி நாள் மாநாடு இன்று காலை தொடங்கியது.
    • போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடனான எனது சந்திப்பின் விவரங்களை தலைவர்களுக்குத் தெரிவிப்பேன்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு நேற்று சீனாவின் தியான்ஜின் நகரில் தொடங்கியது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ஈரான் அதிபர் மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் 2 பார்வையாளர்களாக உள்ள நாடுகள் மற்றும் 14 உரையாடல் நாடுகளின் தலைவர்களும் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2-வது மற்றும் கடைசி நாள் மாநாடு இன்று காலை தொடங்கியது.

    ஷாங்காய் மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பேசியதாவது:-

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் நெருக்கடியைத் தீர்க்க சீனாவும் இந்தியாவும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடனான எனது சந்திப்பின் விவரங்களை தலைவர்களுக்குத் தெரிவிப்பேன். டிரம்புடனான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட புரிதல்கள் உக்ரைனில் அமைதிக்கான வழியைத் திறந்து உள்ளன என்றார்.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா. இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.

    திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக வேகமாக 60 கோடி ரூபாய் வசூலித்த மலையாள திரைப்படங்கள் பட்டியலில் லோகா இடம் பெற்றுள்ளது.

    ×