என் மலர்
நீங்கள் தேடியது "Vehicles ban"
- மலைக்கோவில் சாலையை சீரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- ஏராளமான பக்தர்கள் படிக்கட்டு வழியாக நடந்து செல்கிறார்கள்.
திருத்தணி:
திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள்.
பெரும்பாலான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு கார், பஸ், வேன், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மூலம் செல்வது வழக்கம். வாகனங்கள் மலைக்கோவிலுக்கு சென்று வருவதற்கு கோவில் நிர்வாகம் சார்பில், திருத்தணி -அரக்கோணம் சாலையில் இருந்து மலைப்பாதை உள்ளது.
இந்த ஒரே பாதையில் அனைத்து வாகனங்களும் மலைக்கோவிலுக்கு சென்று வருவதால் கடந்தசில மாதங்களாக சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனை சரிசெய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் மலைக்கோவில் சாலையை சீரமைக்க கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மலைக்கோவில் பாதையில் சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கியது. நெடுஞ்சாலைத் துறை மூலம் நடைபெறும் இந்த பணி நாளை வரை நடக்கிறது.
இதனால் மலைக் கோவிலுக்கு வாகனங்கள் செல்ல இன்றும், நாளையும் என 2 நாட்கள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கோவில் சார்பில் இயக்கப்படும் பஸ்கள் மூலம் மட்டும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
இதனால் கோவில் பஸ்சில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஏராளமான பக்தர்கள் படிக்கட்டு வழியாக நடந்து செல்கிறார்கள். நாளை (செவ்வாய்க்கிழமை) மலைக்கோவிலுக்கு மோட்டார் சைக்கிள்கள் மட்டும் அனுமதிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பக்தர்கள் வசதிக்காக 4 பஸ்கள் மட்டும் மலைக்கோவிலுக்கு இயக்கப்படுகிறது. பிற எந்தவித வாகனங்களுக்கும் மலைப்பாதையில் செல்வதற்கு இன்றும் நாளையும் அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
கூடலூர்:
கேரளாவில் கடந்த மாதம் கன மழை பெய்தது. குமுளி மலைச்சாலையிலும் பெய்த கனமழை காரணமாக மாதா கோவில் அருகே இரைச்சல் பாலம் உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு அதிகாரிகள் மணல் மூடையை வைத்து தற்காலிகமாக சாலையை சீரமைத்தனர்.
தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மீண்டும் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மோட்டார் சைக்கிள்கள் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
கடந்த 2 நாட்களாக கூடலூர், குமுளி, லோயர் கேம்ப் பகுதியில் தொடர்ந்து கன மழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மாதா கோவில் அருகேயும் இரைச்சல் பாலம் அருகே உள்ள வளைவு பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டது.
மேலும் சாலை ஓரம் இருந்த மரம் முறிந்து விழுந்தது. இதனால் இரு சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத அளவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எனவே பாதுகாப்பு கருதி அனைத்து வாகனங்களுக்கும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடை விதித்தனர். சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் மீண்டும் பெய்த கன மழை காரணமாக மணல் மூடைகள் அடித்துச் செல்லப்பட்டது. எனவே கம்பம்மெட்டு சாலையை பயன்படுத்துமாறு வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கூடலூர் பகுதியில் இருந்து குமுளி டீக்கடை, ஓட்டல், பேக்கரி ஆகியவற்றுக்கு பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிள்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதே போல் தேயிலை எஸ்டேட் செல்லும் தொழிலாளர்களும் கடந்த சில நாட்களாக வேலை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
கம்பம் மெட்டு வழியாக சென்றால் வெகு தூரம் என்பதால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல வில்லை. ஒரு சிலர் மட்டும் பைக்குகளில் கம்பம் மெட்டு பகுதிக்கு சென்று வருகின்றனர். தொடர் மழை காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பால் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். #Landslide
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்பில் இருந்து குமுளி வரை 6 கி.மீ. தூரத்திற்கு மலைச்சாலை உள்ளது. கடந்த மாதம் பெய்த கன மழை காரணமாக இரைச்சல் பாலம், கொண்டை ஊசி வளைவு மாதாகோவில் பகுதி ஆகிய பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்கி சீரமைப்பு பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
தற்போது திடீரென பெய்த கனமழையினால் மாதாகோவில் அருகே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதனை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் உத்தமபாளையம் தாசில்தார் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மலைப்பாதையில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் வாகனங்கள் சென்றால் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதனை நிரந்தரமாக சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.
சீரமைப்பு பணி நடைபெறுவதால் இன்று முதல் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் மெட்டு வழியாக கேரளா செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகள் 2 வாரங்களில் முடியும். அதன்பின்பு போக்குவரத்து சீரமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Landslide






