என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2-வது மற்றும் கடைசி நாள் மாநாடு இன்று காலை தொடங்கியது.
    • போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடனான எனது சந்திப்பின் விவரங்களை தலைவர்களுக்குத் தெரிவிப்பேன்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு நேற்று சீனாவின் தியான்ஜின் நகரில் தொடங்கியது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ஈரான் அதிபர் மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் 2 பார்வையாளர்களாக உள்ள நாடுகள் மற்றும் 14 உரையாடல் நாடுகளின் தலைவர்களும் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2-வது மற்றும் கடைசி நாள் மாநாடு இன்று காலை தொடங்கியது.

    ஷாங்காய் மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பேசியதாவது:-

    ரஷியா-உக்ரைன் இடையேயான போர் நெருக்கடியைத் தீர்க்க சீனாவும் இந்தியாவும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்புடனான எனது சந்திப்பின் விவரங்களை தலைவர்களுக்குத் தெரிவிப்பேன். டிரம்புடனான பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட புரிதல்கள் உக்ரைனில் அமைதிக்கான வழியைத் திறந்து உள்ளன என்றார்.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா.

    பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் லோகா. இவர்களுடன் சாண்டி, சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படத்தை டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.

    திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கல்யாணியின் நடிப்பு பலரால் பாராட்டப்படுகிறது.

    திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியானது. தமிழ் மற்றும் தெலுங்கு மக்கள் மத்தியிலும் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில் திரைப்படம் 4 நாட்களில் உலகளவில் 60 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மிக வேகமாக 60 கோடி ரூபாய் வசூலித்த மலையாள திரைப்படங்கள் பட்டியலில் லோகா இடம் பெற்றுள்ளது.

    • தனது அதிகாரத்தை மீறி டிரம்ப் வரிகளை விதித்து உள்ளதாக நீதிமன்றம் கருத்து.
    • டிரம்பின் அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவு

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.

    அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார்.

    அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

    இதற்கிடையில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்த்தக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

    இதனை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.

    இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க டிரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.

    இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் டிரம்ப் பதவிட்டார். அவரது பதிவில், அமெரிக்காவில் பொருட்களின் விலைகள் மிகக் குறைந்துவிட்டன. பணவீக்கம் கிட்டத்தட்ட இல்லை. எரிசக்தி விலைகள் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. பெட்ரோல் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.

    பல ஆண்டுகளாக நம்மை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட நாடுகளிலிருந்து டிரில்லியன் கணக்கான டாலர்களைக் கொண்டு வரும் அற்புதமான வரிகள் அனைத்தும் அமெரிக்காவை மீண்டும் வலிமையாகவும் மரியாதைக்குரியதாகவும் ஆக்குகின்றன.

    வரிகளும், நாம் ஏற்கனவே பெற்றுள்ள டிரில்லியன் கணக்கான டாலர்களும் இல்லாவிட்டால், நமது நாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு, நமது இராணுவ சக்தி உடனடியாக அழிக்கப்படும்" என்று தெரிவித்தார்.

    • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுக்க சென்றனர்.
    • கடந்த 7 தசாப்தங்களாக இந்தியா பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது.

    தியான்ஜின்:

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு நேற்று சீனாவின் தியான்ஜின் நகரில் தொடங்கியது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

    சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், ஈரான் அதிபர் மற்றும் கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பெலாரஸ் ஆகிய 10 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் 2 பார்வையாளர்களாக உள்ள நாடுகள் மற்றும் 14 உரையாடல் நாடுகளின் தலைவர்களும் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.

    நேற்று மாநாட்டின் ஒரு பகுதியாக சீன அதிபர் ஜின்பிங்குடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் வர்த்தகம், எல்லை விவகாரம், வரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தனர். இரு நாட்டு உறவை வலுப்படுத்த அவர்கள் உறுதி அளித்தனர். அதே போல் நேற்றைய மாநாட்டில் பிரதமர் மோடி மேலும் சில நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 2-வது மற்றும் கடைசி நாள் மாநாடு இன்று காலை தொடங்கியது.

    மாநாட்டு அரங்குக்கு வந்த தலைவர்களை சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்றார். இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் ஆகியோர் ஒன்றாக நடந்து சென்றனர்.அவர்களை சீன அதிபர் ஜின்பிங் வரவேற்றார். அப்போதுமோடி, ஜின்பிங், புதின் ஆகியோர் சிறிது நேரம் உரையாடியானார்கள். அவர்கள் சிரித்தப்படி பேசி கொண்டிருந்தனர்.

    பின்னர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் குழு புகைப்படம் எடுக்க சென்றனர்.

    இதை தொடர்ந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் உறுப்பினர்கள் அமர்வு நடந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் எதிர்கால கண்ணோட்டம் குறித்து பேசினர்.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டின் அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். எங்களுக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்ததற்காக சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இன்று உஸ்பெகிஸ்தானின் சுதந்திர தினம் ஆகும். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த அமைப்பின் உறுப்பினராக இந்தியா மிகவும் நேர்மறையான பங்கைக் கொண்டுள்ளது. அமைப்பிற்கான இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கை 3 முக்கியமான தூண்களை அடிப்படையாகக் கொண்டது. பாதுகாப்பு, பரஸ்பர இணைப்பு, வாய்ப்பு ஆகியவை ஆகும்.

    கடந்த 7 தசாப்தங்களாக இந்தியா பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பஹல்காமில் பயங்கரவாதத்தின் மோசமான செயலை பார்த்தோம். இந்த தாக்குதல் பயங்கரவாதத்தின் அருவருப்பான வடிவம் ஆகும்.

    இந்த துயர நேரத்தில் எங்களுடன் நின்ற நட்பு நாட்டிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்பு, அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை அடிப்படையாகும். ஆனால் இதற்கு பயங்கரவாதம், பிரிவினை வாதம், பயங்கரவாதம் பெரிய சவால்களாக உள்ளன. பயங்கரவாதம் என்பது ஒரு நாட்டின் பாதுகாப்பிற்கு மட்டுமல்ல, அனைத்து மனிதகுலத்திற்கும் பொதுவான சவாலாகும்.

    அதிலிருந்து எந்த நாடும், சமூகமும், குடிமகனும் தன்னைப் பாதுகாப்பாகக் கருத முடியாது. எனவே, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா ஒற்றுமையை வலியுறுத்தி வருகிறது. கூட்டு தகவல் நடவடிக் கையை வழிநடத்துவதன் மூலம் அல்கொய்தா மற்றும் அதனுடன் தொடர்புடைய பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்துப் போராட இந்தியா முன்முயற்சி எடுத்தது.

    பயங்கரவாத நிதியுதவிக்கு எதிராக நாங்கள் குரலை எழுப்பி வருகிறோம். அதில் உங்கள் ஆதரவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு கிடைக்கும் நிதியை தடை செய்வதோடு அதன் மூலங்களை கண்டறிந்து களையெடுத்து வருகிறோம்.

    ஆனால் சில நாடுகள் பயங்கரவாதத்திற்கு வெளிப்படையாக ஆதரவு அளித்து வருகின்றன. இதை நாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே அது வேரறுக்கப்பட வேண்டும்.

    பயங்கரவாதம் மீது சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது. பயங்கரவாத பயங்கரவாத எதிர்ப்பில் எந்தவிதமான சமரசமும் இல்லை. பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் எந்த இரட்டை நிலைப்பாடும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதை நாம் தெளிவாகக் கூற வேண்டும்.

    பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் நாம் ஒற்றுமையாக எதிர்த்துப் போராட வேண்டும். இது மனித குலத்திற்கான நமது பொறுப்பு ஆகும்.

    வலுவான இணைப்பு வர்த்தகத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல் வளர்ச்சி, நம்பிக்கைக்கான கதவுகளையும் திறக்கிறது என்று இந்தியா எப்போதும் நம்புகிறது. இதைக் கருத்தில் கொண்டு, சபாஹர் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் போன்ற முயற்சிகளில் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

    இது ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகளுடனான இணைப்பை மேம்படுத்த உதவும். சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் என்ற மந்திரத்தைப் பின்பற்றி இந்தியா முன்னேறி வருகிறது. ஒவ்வொரு சவாலையும் ஒரு வாய்ப்பாக மாற்ற நாங்கள் முயற்சித்து வருகிறோம்.

    இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு பகுதியாக இருக்க உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். காலத்தின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு வளர்ச்சியடைந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்த, நாகரிக உரையாடல் மன்றம் ஒன்றை உருவாக்க முன்மொழிகிறேன். இது நமது பண்டைய நாகரிகம், கலாச்சாரம், மரபுகள் மற்றும் இலக்கியங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு உலகளாவிய பாதையை வழங்கும்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இன்றைய மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் முன்னிலையில் அந்நாட்டை மறைமுகமாக பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து பேசினார். பயங்கரவாதத்துக்கு ஆதரவு தரும் பாகிஸ்தானை மற்ற நாடுகள் கண்டிக்க வேண்டும் என்று மோடி தனது உரையில் மறைமுகமாக வலியுறுத்தி பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.
    • புதின் உடனான உரையாடல்கள் எப்போதும் அறிவுபூர்வமானவை என்று பிரதமர் மோடி பதிவு

    பிரதமர் மோடி தனது ஜப்பான் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, விமானம் மூலம் சீனா சென்றடைந்தார். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி சீனா சென்றார்.

    நேற்று பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையே இருதரப்பு உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படத்த இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இதனையடுத்து இன்று சீனாவில் தொடங்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்..

    ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்.

    உச்சி மாநாட்டிற்கு பின்னர் இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக மாநாட்டு அரங்கில் இருந்து ஒரே காரில்

    பிரதமர் மோடி மற்றும் ரஷ்யா அதிபர் புதின் புறப்பட்ட சென்றனர்.

    இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்ட பிரதமர் மோடி, "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புஉச்சி மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து, ஜனாதிபதி புதினும் நானும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் இடத்திற்கு ஒன்றாகப் பயணித்தோம். அவருடனான உரையாடல்கள் எப்போதும் அறிவுபூர்வமானவை" என்று தெரிவித்தார்.

    அமெரிக்க வரிவிதிப்புக்கு மத்தியில் புதினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    • நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் திடுக்கிட்டு எழுந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
    • இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    காபூல்:

    தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு 11.57 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.3 புள்ளிகளாக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

    ஜலாலாபாத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 27 கிலோமீட்டர் தொலைவில், 8 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டது. இது 10 கி.மீ. ஆழத்தில் 4.5 ரிக்டர் அளவில் பதிவானது.

    நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் திடுக்கிட்டு எழுந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இருந்து விழுந்ததில் 500 பேர் உயிரிழந்தனர். மேலும் 1000-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும் இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடி வருவதையும் கட்டிடங்கள் இடிந்து விழுவதும் போன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

    • சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் இண்டர் மியாமி படுதோல்வி அடைந்தது.
    • மெஸ்ஸியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    லீக்ஸ் கப் கால்பந்து இறுதிப் போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியை மெஸ்ஸியின் இண்டர் மியாமி அணி எதிர்கொண்டது.

    இப்போட்டியில் சியாட்டில் சவுண்டர்ஸ் அணியிடம் 3-0 என்ற கோல் கணக்கில் மெஸ்ஸியின் இண்டர் மியாமி படுதோல்வி அடைந்தது. இதனால் மெஸ்ஸியின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

    இப்போட்டி முடிந்த பின்னர் இரு அணி வீரர்களுக்கும் இடையே மைதானத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதால் இரு அணி வீரர்களும் கடுமையாக தாக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    நடிகர் கார்த்தி இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் 'மெய்யழகன்' படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தற்போது 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் "வா வாத்தியார்" படத்தில் நடித்து முடித்துள்ளார்.

    இந்த படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இவர் தமிழில் வா வாத்தியார், எல்ஐகே, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். விரைவில் இப்படங்கள் வெளியாக உள்ளது.

     

    கார்த்தி நடிக்கும் 26-வது படமாக 'வா வாத்தியார்' உருவாகி இருக்கிறது. இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். மேலும் நடிகர் ராஜ் கிரண் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    இந்த நிலையில், வா வாத்தியார் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் சில மாதங்களுக்கு முன் வெளியானது. திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

    • இரவு முதலே லாரி லாரியாக குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
    • 3 பொக்லைன் எந்திரங்கள் மூலமும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.

    இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ந் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட இந்த சிலைகளுக்கு கடந்த 5 நாட்களாக பூஜை செய்யப்பட்டன.

    இந்த விநாயகர் சிலைகள் சென்னையில் நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.

    மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, அண்ணா நகர், கொளத்தூர், பூக்கடை, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஆட்டோக்கள் மினி லாரிகள் மற்றும் லாரிகளில் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கப்பட்டன.

    சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் முழுவதும் கரையாத விநாயகர் சிலைகளின் எஞ்சிய பாகங்கள், மாலைகள், மரக்கட்டைகள், இரும்பு கம்பிகள் என டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளன.

    இந்நிலையில் கரை ஒதுங்கிய குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு முதலே லாரி லாரியாக குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. 3 பொக்லைன் எந்திரங்கள் மூலமும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.

    குப்பைகளை 100-க்கணக்கான லாரிகள் மூலம் அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

    அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று மாலை முதல் தொடங்க இருக்கிறது.

    மதராஸி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைப்பெற்றது. அப்போது சிவகார்த்திகேயன் தெலுங்கு மொழியில் ரசிகர்களிடம் பேசி அசத்தினார் அவர் கூறியதாவது " படத்தின் கதை மற்றும் கண்டண்ட் நன்றாக இருந்தால் தெலுங்கு தயாரிப்பாளர்கள் செலவு செய்வதற்கு யோசிப்பதே இல்லை. அதனால் தான் தெலுங்கு சினிமாவில் அடிக்கடி 1000 கோடி ரூபாய் திரைப்படங்கள் உருவாகிறது" என கூறினார்.

    ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

    பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

    இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

    அண்மையில் வெளியான மதராஸி படத்தின் டிரெய்லர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் டிக்கெட் முன்பதிவு இன்று மாலை முதல் தொடங்க இருக்கிறது.

    மதராஸி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று ஐதராபாத்தில் நடைப்பெற்றது. அப்போது சிவகார்த்திகேயன் தெலுங்கு மொழியில் ரசிகர்களிடம் பேசி அசத்தினார் அவர் கூறியதாவது " எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மகேஷ் பாபு , சிரஞ்சீவி போன்ற பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கியவர் அவருடைய படத்தில் நான் நடிப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அவருக்கும் மிகபெரிய நன்றி" என கூறினார்.

    • இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார்.
    • இந்தியா ரஷியாவினுடைய சலவை நிலையமாக உள்ளது

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் 50 சதவீதம் வரி விதித்தார்.

    டிரம்பின் எதிர்ப்பை தொடர்ந்தும் இந்தியா தொடர்ந்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.

    இந்நிலையில், ரஷியாவிடம் இருந்து இந்தியா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை அதை சுத்திகரித்து ஐரோப்பா மற்றும் பிற நாடுகளுக்கு விற்பதாக வெள்ளை மாளிகை ஆலோசகர் பீட்டர் நவாரோ குற்றம் சாட்டினார்.

    ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் பேசிய பீட்டர் நவாரோ, இந்தியா ரஷியாவினுடைய சலவை நிலையமாக உள்ளது. இந்திய மக்களின் செலவில் பிராமணர்கள் லாபம் ஈட்டுகிறார்கள் . அதை நாம் நிறுத்த வேண்டும். இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் தள்ளுபடி விலையில் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கி, பதப்படுத்தி, அதிக விலைக்கு ஏற்றுமதி செய்கின்றன. இது உக்ரேனியர்களைக் கொல்கிறது. வரி செலுத்துவோராக நாம் என்ன செய்ய வேண்டும்? நாம் அவர்களுக்கு அதிக பணம் அனுப்ப வேண்டும்.

    பிரதமர்மோடி ஒரு சிறந்த தலைவர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான அவர் விளாடிமிர் புடின் மற்றும் ஜி ஜின்பிங்குடன் ஏன் கூட்டு சேருகிறார் என்பது எனக்குப் புரியவில்லை" என்று தெரிவித்தார். 

    ×