என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சிலைகள் கரைப்பு"

    • இரவு முதலே லாரி லாரியாக குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன.
    • 3 பொக்லைன் எந்திரங்கள் மூலமும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.

    இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27-ந் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

    இந்து முன்னணி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்ட இந்த சிலைகளுக்கு கடந்த 5 நாட்களாக பூஜை செய்யப்பட்டன.

    இந்த விநாயகர் சிலைகள் சென்னையில் நேற்று ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பட்டினப்பாக்கம், காசிமேடு, எண்ணூர், திருவொற்றியூர், பாலவாக்கம் உள்ளிட்ட கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.

    மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, அண்ணா நகர், கொளத்தூர், பூக்கடை, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஆட்டோக்கள் மினி லாரிகள் மற்றும் லாரிகளில் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு பட்டினப்பாக்கம் கடலில் கரைக்கப்பட்டன.

    சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியில் முழுவதும் கரையாத விநாயகர் சிலைகளின் எஞ்சிய பாகங்கள், மாலைகள், மரக்கட்டைகள், இரும்பு கம்பிகள் என டன் கணக்கில் குப்பைகள் குவிந்துள்ளன.

    இந்நிலையில் கரை ஒதுங்கிய குப்பைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரவு முதலே லாரி லாரியாக குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. 3 பொக்லைன் எந்திரங்கள் மூலமும் குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருகின்றன.

    குப்பைகளை 100-க்கணக்கான லாரிகள் மூலம் அகற்றும் பணியில் துப்புரவு பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    • 4 இடங்களில் இதுவரை 1,869 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.
    • மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

    விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 27-ந்தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில், இந்து அமைப்புகள் சார்பில் 1,519 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டது.

    இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

    விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவான்மியூர் பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் போலீசார் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்று மாலை முதல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் சென்னை கடற்கரைகளில் கரைக்கப்பட்டன.

    சென்னையில் அனுமதிக்கப்பட்ட 4 இடங்களில் இதுவரை 1,869 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. பட்டினப்பாக்கம், திருவான்மியூர், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய இடங்களில் பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.

    சென்னை பட்டினப்பாக்கம், பாலவாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. கரை ஒதுங்கும் மரக்கட்டைகள் உள்ளிட்ட கழிவுகளை 50க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் உடனுக்குடன் சேகரித்து அகற்றி வருகின்றனர்.

    கரை ஒதுங்கும் விநாயகர் சிலைகளை ஹிட்டாச்சி உதவியுடன் மீண்டும் கடலுக்குள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. 

    • இதுவரை 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன.
    • 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னையில் 1,500 விநாயகர் சிலைகள் கடந்த 7-ந்தேதி பூஜைக்காக வைக்கப்பட்டன.

    இந்த சிலைகளில் ஒரு பகுதி கடந்த 11-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில் நேற்று மற்றும் இன்று விநாயகர் சிலைகள் அதிக எண்ணிக்கையில் கரைக்கப்பட்டு வருகின்றன.

    இன்று 1,300 சிலைகளுடன் பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது. சிலைகள் கரைப்பதற்கு இன்று கடைசி நாள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய 4 இடங்களில் சென்னை மாநகரில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை கரைக்கப்படுகின்றன.

    இந்நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் இதுவரை 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டுள்ளன. இதனால், பொது மக்கள் குவிந்துள்ளனர்.

    5 அடிக்கு மேல் உள்ள சிலைகள் கிரேன் உதவியுடன் கரைக்கப்பட்டு வருகின்றன. 2,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை.

    சென்னை பாலவாக்கத்தில் விநாயகர் சிலை கரைப்பின்போது, கிரேன் மூலம் தூக்கியபோது எடை தாங்காமல் விநாயகர் சிலை கிழே விழுந்து உடைந்தது.

    இதனால் விநாயகர் சிலையை எடுத்து வந்த பக்தர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    சிலை உடைந்து விழுந்ததற்கு போலீசார் அவசரப்படுத்தியதே காரணம் என பக்தர்கள் குற்றம்சாட்டினர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயர்போலீஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பக்தர்களை சமாதானப்படுத்தினர்.

    பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின் ஒருவழியாக பக்தர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிரேன் மூலம் தூக்கியபோது விநாயகர் சிலை உடைந்து விழுந்ததால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    விநாயகர் சிலைகளை கரைக்கும்போது பொதுமக்கள் யாரும் கடலுக்கு செல்லாமல் இருக்க கடற்கரை முழுதும் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • விநாயகர் சிலைகள் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.
    • பல்வேறு சிறப்பு பூஜைகளை செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த டி.அம்மாபேட்டையில் 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வெள்ளிக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டன.

    விநாயகர் சதுர்த்தி விழாவில் பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர், தீர்த்த மலை, கோட்டப்பட்டி, அனுமன்தீர்த்தம், கோ.கூட்டுரோடு, மொரப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகளை வைத்து பல்வேறு சிறப்பு பூஜைகளை செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    விநாயகர் சிலைகளை தென்பெண்ணை ஆற்றில் கரைக்க செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, அரூர் வட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை டி.அம்மாபேட்டை தென்பெண்ணை ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைத்தனர்.

    ×