என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இரு அணிகளும் "பி" பிரிவில் இடம் பிடித்துள்ளன.
- ஹாங்காங் அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வி அடைந்திருந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3ஆவது போட்டி அபுதாபியில் நடக்கிறது. இதில் வங்கதேசம்- ஹாங்காங் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்கதேச அணி கேப்டன் லிட்டோன் தாஸ் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இரு அணிகளும் பி பிரிவில் இடம் பிடித்துள்ளன. ஹாங்காங் அணி தனது முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியடைந்திருந்தது.
- விலைவாசியை மட்டும் உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா?
- திமுகவின் ஆட்சிக் கனவு இனி ஒருபோதும் பலிக்கப் போவதில்லை.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பெட்ரோல், டீசல் விலை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 -ம் குறைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?
மக்களுக்கு போலி நம்பிக்கைகள் கொடுத்து எப்படியெல்லாம் வித விதமாக ஏமாற்றலாம் என ஒரு போட்டி வைத்தால் அதில் திமுக மட்டும் தான் தனித்து வெற்றி பெறும். அந்தளவிற்கு நாள்தோறும் பொய்களிலும் புரளிகளிலும் புரண்டு கொண்டிருக்கும் தில்லுமுல்லு திமுகவின் அடுத்த போலி தேர்தல் வாக்குறுதி தான், வாக்குறுதி எண் 504.
அதாவது, மக்கள் நலனுக்காக பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 -ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4 -ம் குறைக்கப்படும் என வாய்க்கூசாமல் வாக்குறுதி அளித்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் கடந்தும் அதைப்பற்றி வாயைத் திறக்காமல் தப்பித்துக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைக்காமல் விலைவாசியை மட்டும் உயர்த்தி மக்களை வதைப்பது தான் திராவிட மாடலா? இந்த லட்சணத்தில் நாடு போற்றும் நான்காண்டு என வெற்று விளம்பரங்கள் வேறு.
கொடுத்த வாக்கின்படி பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டின் விலையையும் இன்று வரை குறைக்காத திமுக
அரசு, இனியும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றப் போவதில்லை என்பதும், வரும் சட்டமன்றத் தேர்தலில் இதற்கு என்ன எதிர்வினையாற்ற வேண்டும் என்பதும் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும். திமுகவின் ஆட்சிக் கனவு இனி ஒருபோதும் பலிக்கப் போவதில்லை!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மார்ச் மாதத்தில் இருந்து தீவிரத்தன்மையோடு நேர்மறையான சூழ்நிலையுடன் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது.
- இது முன்னேறி கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் இதில் திருப்திகரமாக உள்ளது.
இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நேர்மறையான சூழ்நிலையில் முன்னேறி வருகின்றன என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மேலும், பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் நவம்பர் மாதத்திற்குள் வர்த்தக ஒப்பந்தத்தின் முதற்கட்ட பேச்சுவார்த்தையை நவம்பர் மாதத்திற்குள் முடிக்க அந்தந்த நாட்டின் வர்த்தக மந்திரிகளுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
மார்ச் மாதத்தில் இருந்து தீவிரத்தன்மையோடு நேர்மறையான சூழ்நிலையுடன் பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. இது முன்னேறி கொண்டிருக்கிறது. இரண்டு நாடுகளும் இதில் திருப்திகரமாக உள்ளது எனத் தெரிவித்தார்.
இந்திய பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றியில் முடிவடைய இருநாடுகளும் முன்வருவதில் எந்த சிக்கலும் இல்லை. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக தடைகளைத் தீர்க்க இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்தார். இதற்கு பிரதமர் மோடி, டிரம்பின் நேர்மறையாக மதிப்பீட்டை அன்புடன் வரவேற்பதாக பதில் அளித்திருந்தார்.
- அமித் ஷா- செங்கோட்டையனின் ரகசிய சந்திப்பு தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.
- இபிஸ் முதல் செங்கோட்டையன் வரை பாஜகவிடம் சரண் அடைந்துவிட்டனர்.
அதிமுகவில் எந்த பிரச்னை என்றாலும் அமித்ஷாவை சந்திக்கிறார்கள்; அதிமுக டெல்லியில் இருந்து நடத்தப்படுகிறது என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆ.ராசா கூறியதாவது:-
மத்திய அமைச்சர் அமித் ஷாவும், செங்கோட்டையனும் சந்தித்தது ஒரு மறைமுகமான செயல்.
செங்கோட்டையன் அதிமுகவில் இருக்கக்கூடியவர். பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்திருக்கிறார்.
ஆனால், இருவரும் மவுனமாக உள்ளனர். எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இந்த ரகசிய சந்திப்பு தமிழ்நாட்டிற்கு நல்லதல்ல.
பாஜகவின் கட்டுப்பாட்டிற்குள் அதிமுக எப்போதோ சென்றுவிட்டது. இபிஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் தற்போது செங்கோட்டையன் என பாஜகவிடம் சரண் அடைந்துவிட்டனர்.
அதனால், இபிஎஸ்., அல்லது தமிழ்நாடோ அதிமுகவை இயக்கவில்லை. டெல்லியில் இருந்து அதிமுக இயக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிறப்பு அதிரடிப்படை, கோப்ரா வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
- அடர்ந்த காட்டில் நடைபெற்ற சண்டையில் 8 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் இன்று நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 8 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
சிறப்பு அதிரடிப்படை (SIT) கோப்ரா (CoBRA) படை வீரர்களுடன் உள்ளூர் போலீஸ் குழுவினர் சேர்ந்து மெய்ன்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது நக்சலைட்டுகளுக்கும்- வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் குறைந்தது 8 நக்சலைட்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராய்ப்பூர் சரக ஐஜி தெரிவித்துள்ளார்.
- கவிஞர் குவேம்பு-க்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப தீர்மானம்.
- நடிகர் விஷ்ணுவர்தனுக்கும் கர்நாடகா ரத்னா விருது வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
கர்நாடக மாநில அமைச்சரவை மறைந்த நடிகர் விஷ்ணுவர்தன் மற்றும் நடிகை சரோஜா தேவிக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்க முடிவு செய்துள்ளது.
மேலும், கவிஞர் குவேம்பு-க்கு பாரத ரத்னா விருது வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
உப்பேர் பத்ரா நீர்ப்பாசன திட்டத்திற்காக 75 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நாளை சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம் பிடித்துள்ள மோனிகா பாடல் இணையத்தில் வைரலானது. இப்பாடலில் பூஜா ஹெக்டே, சௌவின் ஷாஹிர் உடன் ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், கூலி படத்தில் இடம் பெற்ற மோனிகா பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- இரண்டு வருடத்திற்கும் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
- இல்லையென்றால் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு.
இந்தியாவில் அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் ஆகும்.
தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011-12 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.
ஆனால் 2012-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? என்ற கேள்வி இருந்தது. அதற்கு விடையளிக்கும் வகையில்தான் உச்ச நீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அதாவது கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக தமிழ்நாடு அரசின் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. அதேபோல், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர்களை தமிழக அரசு கைவிடாது என கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்தை சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது என அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக 'இட்லி கடை' உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இட்லி கடை படத்தின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இப்படத்தில் அருண் விஜய் அஷ்வின் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் சத்யராஜ் விஷ்ணு வர்தன் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும், நடிகர் ராஜ்கிரன் சிவனேசனாக நடிப்பதாகவும் கதாப்பாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது.
இந்நிலையில், 'இட்லி கடை' படத்தில் கயல் என்ற கதாப்பாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- ஊட்டிக்குப் பிறகு நீலகிரி மலைகளில் இரண்டாவது பெரிய மலைப்பிரதேசம் ஆகும்.
- 1550 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டால்பினோஸ் ஒத்த வடிவமுள்ள அசாதாரண பாறை இது.
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப் பிரதேசம் குன்னூர். ஊட்டிக்குப் பிறகு நீலகிரி மலைகளில் இரண்டாவது பெரிய மலைப்பிரதேசம் ஆகும்.
சிம்ஸ் பார்க், டால்பின்ஸ் நோஸ் மற்றும் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களும் இங்கு அமைந்துள்ளது.
1550 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டால்பினோஸ் ஒத்த வடிவமுள்ள அசாதாரண பாறை இதுவாகும்.
இந்நிலையில், குன்னூர் டால்பினோஸ் காட்சி முனை மேம்பாட்டு பணிகள் காரணமாக நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் நலன் கருதி சாலை, கழிவளை, வண்ண விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த செலிபிரிட்டி ஸ்டைலிஸ்டாகப் பெயர் பெற்ற நீர்ராஜா கோனா, தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார். அவருடைய முதல் படம் Telusu Kada, ரொமான்டிக் டிராமாவாக உருவாகியுள்ளது.
இந்த படத்தில் சித்து , ராஷி கண்ணா, மற்றும் ஸ்ரீநிதி ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் "மல்லிகா கந்தா" ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்று வெளியான டீசர், புதுமையான காட்சிகள், தமன் இசை, மற்றும் வண்ணமயமான காதல் கதை அம்சங்களுடன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
சித்து ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை காதலிக்கும் கதையமைப்பு, மேலும், இருவரிடமும் திருமணத்திற்கான வேண்டுகோள் வைப்பது டீசரின் முக்கிய அம்சமாக உள்ளது. திரைப்படம் வரும் அக்டோபர் 17-ம் தேதி படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை People Media Factory நிறுவனம் சார்பில் டி.ஜி. விஸ்வா பிரசாத் மற்றும் கிரிதி பிரசாத் தயாரிக்கின்றனர்.
- பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுவதால் வாகன மைலேஜ் குறைந்துவிட்டதாக புகார்
- டீசலுடன் எத்தனாலை கலக்கும் திட்டம் தோல்வியடைந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது. 2014-ல் பெட்ரோலில் எத்தனால் கலப்பு விகிதம் வெறும் 1.5% உடன் தொடங்கிய நிலையில், 2022 ஜூன் மாதத்தில் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. தற்போது பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கப்படுகிறது.
ஒரு லிட்டர் எரிபொருளில் 800 மில்லி லிட்டர் பெட்ரோல் 200 மில்லி லிட்டர் எத்தனால் கலந்து விற்கப்படுவதால் (E 20) வாகன மைலேஜ் குறைந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயிரி எரிசக்தி மாநாட்டின் உரையாற்றிய நிதின் கட்கரி, "டீசலுடன் எத்தனாலை கலக்கும் திட்டம் தோல்வியடைந்ததால், தற்போது டீசலுடன் ஐசோபியூடனாலை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பிற்கு எதிரான கருத்துக்கள், தனக்கு எதிராக பணம் கொடுத்து திட்டமிட்டு நடக்கும் பரப்புரை என விமர்சித்தார்.






