என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறேன்.
    • 6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

    நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் கார் மூலம் கேரள மாநிலம் பாலக்காடு சென்றார்.

    விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் நான் ஜெயிலர் 2 படப்பிடிப்புக்காக கேரள மாநிலம் பாலக்காடு செல்கிறேன். அங்கு 6 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்கிறேன். இந்த படம் ஜூன் மாதத்திற்கு பிறகு வெளியாகும் என்றார்.

    தொடர்ந்து ரஜினிகாந்திடம் திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என கேள்வி எழுப்பினர். அதற்கு ரஜினிகாந்த் நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்து விட்டு புறப்பட்டுச் சென்றார்.

    முன்னதாக பயணிகள் தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் கல்லூரி மாணவிகள் படுகர் இன நடனமாடி, பயணிகளை வரவேற்றனர். நடிகர் ரஜினிகாந்த்துக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நடனமாடிய மாணவிகள், ரஜினியுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையை உசைன் போல்ட் படைத்தார்.
    • உசைன் போல்ட் மின்னல் வீரன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

    ஜமைக்கா நாட்டை சேர்ந்த முன்னாள் பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளரான அவர் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் 11 உலக தடகள சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.

    உசைன் போல்ட், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் (9.58 வினாடிகளில்) மட்டுமில்லாமல் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் (19.19 வினாடிகள்) மற்றும் 4x100 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயம் (36.84) உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

    உலகின் மிக வேகமாக ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையை பெற்ற உசைன் போல்ட் மின்னல் வீரன் என்று அழைக்கப்பட்டார்.

    ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட உசைன் போல்டிற்கு தற்போது படிக்கட்டுகளில் ஏறுவதற்கு கூட மூச்சு வாங்குகிறது என்று வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    39 வயதான உசைன் போல்ட்செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில், "நான் ஒரு காலத்தில் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் ஓடினேன். ஆனால் இப்போது படிக்கட்டில் ஏறினால் கூட எனக்கு மூச்சு வாங்குகிறது. நான் உண்மையில் மீண்டும் ஓடத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறன். நான் மீண்டும் முழுமையாக உடற்பயிற்சி செய்யத் தொடங்கும்போது, மூச்சு வாங்கும் பிரச்சனை சரி ஆகும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    • தியாகிகளின் உயிர் தியாகம் வீண் போகவில்லை.
    • இன்று பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ராமதாஸ் தெரிவித்தார்.

    திண்டிவனம்:

    வன்னியர்களுக்காக தொடங்கப்பட்ட பா.ம.க.வில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு அவரது நினைவிடங்களில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ந் தேதி டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

    தற்போது தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இரு அணிகளாக சென்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதன் ஒரு பகுதியாக தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு அங்குள்ள அரசியல் பயிலரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள 21 பேரின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

    முன்னதாக பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டம் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காரல் மார்க்ஸ், அம்பேத்கர் ஆகியோரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையொட்டி தைலாபுரம் தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, பேராசிரியர் தீரன், பு.தா அருள்மொழி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த ராமதாஸ், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு உயிர்நீத்த தியாகிகளின் 38-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தியாகிகளின் உயிர் தியாகம் வீண் போகவில்லை. தியாகிகளின் தியாகத்தால் பலர் பயன் பெற்று வருகின்றனர். 10.5 சதவீத இடஒதுக்கீட்டினை கண்டிப்பாக பெறுவோம் என தெரிவித்தார்.

    மேலும் இன்று பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ராமதாஸ் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து சித்தணி, பாப்பம்பட்டு, பனையபுரம், கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு தூண்களில் டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்துகிறார்.

    • பெரியாரின் இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது.
    • முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.

    தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது.

    தந்தை பெரியாரின் பிறந்தநாளை ஒட்டி கேரள முதலமமைச்சர் பினராயி விஜயன் வாழ்த்து பதிவு வெளியிட்டுள்ளார்.

    இதுகுறித்து பினராயி விஜயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பெரியார் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறோம். சாதிய ஒடுக்குமுறை மற்றும் சமூக அநீதிகளுக்கு எதிரான அவரது இடைவிடாத போராட்டம் தலைமுறை தலைமுறையாக நமக்கு வழிகாட்டுகிறது.

    பெரியாரின் பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் சமூக சீர்திருத்தம் ஆகிய கொள்கைகள், நீதி மற்றும் முற்போக்கான சமூகத்திற்கான நமது போராட்டத்திற்குத் தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாள்.
    • ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டார்கள்.

    திண்டிவனம்:

    வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு 1987-ம் ஆண்டு செப்டம்பர் 17-ல் நடைபெற்ற போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 வன்னியர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் டாக்டர் அன்புமணி திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த 21 தியாகிகள் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இடஒதுக்கீடு போராட்டத்தில் 21 தியாகிகள் காவல் துறையினரால் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஆளும் தி.மு.க.விற்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. வன்னியர் சமூக மக்களின் வாக்கு மட்டும் அவர்களுக்கு வேண்டும். 15 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி டிசம்பர் மாதம் 17-ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும்.

    தமிழக அமைச்சரையும், முதலமைச்சரையும் சந்தித்து இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கூறியும் எதுவும் செய்யவில்லை. சமூக நீதி பற்றி பேச தி.மு.க.விற்கு அருகதை கிடையாது. பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாள். ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டார்கள். ஆனால் தமிழகத்தில் நடத்தவில்லை. சமூக நீதி விரோதி தி.மு.க. தான். மக்கள் நிச்சயமாக தி.மு.க.வை புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அன்புமணி அஞ்சலி செலுத்தியதையொட்டி திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகம் பகுதி மற்றும் தனியார் திருமண மண்டபம் அருகே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு வன்னியர் சங்க அலுவலகம் அருகே ராமதாஸ் தரப்பினர் மற்றும் அன்புமணி தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் வன்னியர் சங்க அலுவலகத்திற்குச் செல்லும் கேட் மூடப்பட்டு வருவாய் துறை முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    திண்டிவனத்தை தொடர்ந்து அன்புமணி சித்தணி, பாப்பம்பட்டு போன்ற பகுதிகளில் உள்ள நினைவு தூண்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.

    • பான்-இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது.
    • இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக உள்ளது. அதுகுறித்த அறிவிப்பும் தற்போது வெளியாகி உள்ளது.

    மோடியின் வாழ்க்கையை திரைப்படமாக சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு 'மா வந்தே' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் நரேந்திர மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடிக்க உள்ளார்.

    இந்த திரைப்படம், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற நரேந்திர மோடியின் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தைச் சித்தரிக்கிறது. சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும் உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஸ்ரீமதி ஹீராபென் மோடி அவர்களுடனான ஆழமான பந்தத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது.

    சர்வதேச தரத்திலும், அற்புதமான VFX தொழில்நுட்பங்களுடனும், இந்தியாவின் முன்னணி நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. பான்-இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது.

    ஊக்கமூட்டும் இந்த வாழ்க்கை வரலாறு, மறக்கமுடியாத திரை அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் உருவாகிறது.

    இப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். கிராந்தி குமாரின் எழுத்து மற்றும் இயக்கத்தில், கே. கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணி மேற்கொள்ள உள்ளார்.

    • இ.பி.எஸ். பக்கத்தில் இருப்பது அவரது அன்பு மகன் என ஊடகங்களில் செய்தி வெளியானது.
    • முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா என்ற கோரிக்கையில் தவறில்லை.

    சென்னையில் தந்தை பெரியாருக்கு மரியாதை செலுத்திவிட்டு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தேர்தல் வெற்றியை விட தன்மானமே முக்கியம் என வீரவசனம் எல்லாம் பேசிவிட்டு தற்போது அமித்ஷாவை சந்தித்துள்ளார் இ.பி.எஸ்.

    * தமிழ்நாட்டு மக்களை இனிமேலும் எடப்பாடி பழனிசாமியால் ஏமாற்ற முடியாது.

    * இ.பி.எஸ். அடிக்கும் கூத்துக்களை எல்லாம் ராஜதந்திரம் என கூறி கொண்டிருந்தனர்.

    * இ.பி.எஸ். பக்கத்தில் இருப்பது அவரது அன்பு மகன் என ஊடகங்களில் செய்தி வெளியானது.

    * அ.தி.மு.க. தொண்டர்கள் இனிமேலும் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்ள வேண்டாம்.

    * இரட்டை இலையை வைத்துக்கொண்டு அ.தி.மு.க. தொண்டர்களை ஏமாற்றுகிறார் இ.பி.எஸ்.

    * முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா என்ற கோரிக்கையில் தவறில்லை.

    * தென்மாவட்ட மக்களை சரி செய்ய வேண்டும் என முயற்சி செய்கிறார் இ.பி.எஸ்.

    * இ.பி.எஸ். நினைப்பதுபோல் தென் மாவட்ட மக்கள் முட்டாள்கள் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
    • திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழி ஏற்பு.

    தந்தை பெரியாரின் 147வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    அங்கு, சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியார் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    மேலும், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதி நாள் உறுதி மொழியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றார்.

    பெரியாரின் பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதி நாளாக கடைபிடிக்கப்படும் நிலையில் உறுதி மொழி ஏற்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் அரசு அதிகாரிகளும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்தனர்.

    • இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர்.
    • இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடம் பாகிஸ்தான் முறையிட்டது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

    டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.

    இந்த விவகாரம் சா்ச்சையாகி இருக்கும் நிலையில் இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை (ஜிம்பாப்வே) நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. மேலும் இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடமும் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முறையிட்டது.

    இந்நிலையில் ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராஃப்டை நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.

    இந்நிலையில், பாகிஸ்தானின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ஐசிசி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதாவது UAE உடனான கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியில் ஆண்டி பைகிராஃப் நடுவராக இருக்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ரிச்சி ரிச்சர்ட்சன் நடுவராக செயல்படுவார் என்று ஐசிசி பாகிஸ்தானுக்கு உறுதி அளித்துள்ளது.

    UAE உடனான போட்டியில் வெற்றி பெற்றால் தான் சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணியால் தகுதி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

    பிரபல இந்தி இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் காஷ்யப், வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

    இதேபோல், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

    மேலும் மலையாள திரைப்படமான ரைஃபில் கிளப் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.

    பாலிவுட்டில் ஹிட் படங்களை இயக்கிய அனுராக் கஷ்யப் சமீப காலமாக இந்தி சினிமாவைவிட தென்னிந்திய படங்களில் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகிறார்.

    இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி

    வாழ்க்கையை படமாக்குவது குறித்து இயக்குநர் அனுராக் காஷ்யப் மனம் திறந்து பேசியுள்ளார்.

    இதுகுறித்து பேசிய அவர்," விராட் கோலியின் வாழ்க்கை வரலாற்று படத்தை நான் இயக்க விரும்பவில்லை. ஏனெனில் பல்வேறு மக்களுக்கும், குழந்தைகளுக்கும் அவர் ஏற்கனவே ஒரு ஹீரோவாக உள்ளார்.

    ஒரு வாழ்க்கை படத்தை இயக்க வேண்டுமெனில் நான் வேறொருவரைதான் தேர்வு செய்ய வேண்டும்.

    கோலி மிகவும் அழகானவர் மற்றும் அற்புதமான மனிதர்!" என்றார்.

    • இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர்.
    • கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.

    டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.

    இந்த விவகாரம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, "ஆசிய கோப்பை தொடங்கும்போதே இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எதிரான புறக்கணிப்பு பிரசாரங்கள் இணையத்தில் அதிகரித்தன. அது வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்க வேண்டாம் என்று பிசிசிஐ கூறியதில் ஆச்சரியமில்லை.

    இதற்காக இந்திய வீரர்களை நான் குறைகூறவில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு படி அவர்கள் நடந்துகொண்டார்கள்.

    செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரிடம் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கினார்.

    ஆனால் இந்திய அரசாங்கத்தால் சமூக ஊடக அழுத்தத்தைக் கையாள முடியாததால் மைதானத்தில் மக்களின் முன்பு அவரால் கைகுலுக்க முடியவில்லை. இதனால் இந்திய வீரர்கள் உலகத்தின் முன் அவமானமடைந்தனர்" என்று தெரிவித்தார். 

    • கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.
    • கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் 'கூலி'. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நல்ல வசூலை குவித்தது. இதையடுத்து இவர்களின் கூட்டணியில் அடுத்த படம் எப்போது? என்ற கேள்வி எழுந்தது.

    இதனிடையே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்கப்போவதாக கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வந்தது. கமல்ஹாசனும் ஒரு நிகழ்ச்சியில் இதை உறுதிப்படுத்தினார்.

    கூலி படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயண்ட் இணைந்து தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க ஆசை இருக்கு, பிளானும் இருக்கு. ஆனால் அதற்கான இயக்குநர், கதை, கதாபாத்திரம் இன்னும் ரெடி ஆகல. ஆனதும் நடிப்பேன் என்றார்.

    ×