என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Usain Bolt"

    • 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையை உசைன் போல்ட் படைத்தார்.
    • உசைன் போல்ட் மின்னல் வீரன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

    ஜமைக்கா நாட்டை சேர்ந்த முன்னாள் பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளரான அவர் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் 11 உலக தடகள சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.

    உசைன் போல்ட், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் (9.58 வினாடிகளில்) மட்டுமில்லாமல் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் (19.19 வினாடிகள்) மற்றும் 4x100 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயம் (36.84) உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

    உலகின் மிக வேகமாக ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையை பெற்ற உசைன் போல்ட் மின்னல் வீரன் என்று அழைக்கப்பட்டார்.

    ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட உசைன் போல்டிற்கு தற்போது படிக்கட்டுகளில் ஏறுவதற்கு கூட மூச்சு வாங்குகிறது என்று வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    39 வயதான உசைன் போல்ட்செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில், "நான் ஒரு காலத்தில் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் ஓடினேன். ஆனால் இப்போது படிக்கட்டில் ஏறினால் கூட எனக்கு மூச்சு வாங்குகிறது. நான் உண்மையில் மீண்டும் ஓடத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறன். நான் மீண்டும் முழுமையாக உடற்பயிற்சி செய்யத் தொடங்கும்போது, மூச்சு வாங்கும் பிரச்சனை சரி ஆகும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    • இந்தியாவுக்கு செல்வதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
    • எனக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

    புதுடெல்லி:

    ஜமைக்கா நாட்டை சேர்ந்த முன்னாள் பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளரான அவர் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இந்த நிலையில் உசைன் போல்ட் செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறார். செப்டம்பர் 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை டெல்லி, மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது குறித்து உசைன் போல்ட் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு செல்வதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறேன்.

    இந்திய மக்கள் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். எனக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உசைன் போல்ட் இந்தியா வர இருப்பது 2-வது முறையாகும். ஏற்கனவே அவர் 2014-ம் ஆண்டு வந்திருந்தார்.

    • தடகளத்தில் இந்தியாவுக்கு முதல் ஒலிம்பிக் தங்கம் பதக்கம் பெற்றுக் கொடுத்தவர்.
    • இந்திய வீரர் நீரஜ் சோப்ரா குறித்து 812 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது.

    தடகளத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் நீரஜ் சோப்ரா. ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் ஈட்டி எறியும் போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்தார். அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப்பில் 2-வது இடம் பிடித்து அசத்தினார். 2003-ம் ஆண்டு நீளம் தாண்டுதலில் இந்திய வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் வெண்கலம் வென்றார். அதன்பின் தடகளத்தில் பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ராதான்.

    உலகளாவிய தடகள வீரர்கள் வீராங்கனைகள் குறித்த கட்டுரைகள் எழுதப்படுவது குறித்து நிறுவனம் ஒன்று ஆய்வு நடத்தியதால், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா குறித்து 812 கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. இதன்மூலம் 2022-ல் அதிக கட்டுரைகள் எழுதப்பட்ட வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் உசைன் போல்ட் தொடர்ந்து முதலிடம் பிடித்து வந்துள்ளார். தற்போது நீர்ஜ் சோப்ரா அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

    2017-ல் ஓய்வு பெற்ற உசைன் போல்ட் குறித்து 574 கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

    ஜமைக்கானவின் தடகள வீராங்கனை எலைன் தாம்சன்-ஹெரா குறித்து 751 கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

    • உலக டி20 கிரிக்கெட் போட்டி வருகிற ஜுன் 1-ந் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது.
    • இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

    உலக டி20 கிரிக்கெட் போட்டி வருகிற ஜுன் 1-ந் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது. இந்த தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ஐசிசி 2024-ம் ஆண்டுக்கான ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான தூதராக ஜமைக்காவின் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் பல்வேறு சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் விளம்பரங்களில் இடம் பெறுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து உசைன் போல்ட் கூறியதாவது:-

    கிரிக்கெட் எனது வாழ்வின் ஒரு அங்கமாகும். விளையாட்டு போட்டிகள் எப்போதும் எனது மனதில் சிறப்பு இடத்தை கொண்டுள்ளன.

    தற்போது எனக்கு ஒரு சிறந்த பதவி கிடைக்கப் பெற்றுள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகிறேன். பெருமை கொள்கிறேன். இந்த டி20 உலக கோப்பை போட்டிகளை உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடைய செய்ய என்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவேன்.

    என அவர் தெரிவித்துள்ளார்.

    விளையாட்டுக்கான நடுவர் மன்றம் நெஸ்டா கார்ட்டரின் மேல்முறையீட்டை நிராகரித்ததால் உசைன் போல்டின் பதக்கம் 8-ஆக குறைந்துள்ளது. #bolt
    உலகின் அதிவேக ஓட்டப் பந்தைய வீரராக கருதப்படுபவர் உசைன் போல்ட். இவர் 100 மீட்டர், 200 மீட்டர், 4X100 மீட்டர் ஓட்டப் பந்தையங்களில் 2008, 2012 மற்றும் 2016 ஒலிம்பிக் தொடரில் மூன்றிலும் தங்கம் வென்று ஹாட்ரிக் வரலாற்று சாதனைப் படைத்திருந்தார்.

    2008-ம் ஆண்டு சீனாவின் பீஜிங்கில் பெற்ற ஒலிம்பிக் தொடரின்போது உசைன் போல்ட் உடன் 4X100 ஓட்டத்தில் நெஸ்டா, மைக்கேல் பிராட்டர், ஆசாபா பொவேல் ஆகியோர் இணைந்து ஓடினார்கள்.

    ஊக்கமருந்து பயன்படுத்தியது தொடர்பாக பெரிய சர்ச்சை எழுந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கடந்த ஒலிம்பிக் தொடரில் கலந்து கொண்ட வீரர்களின் மாதிரிகளை திரும்பவும் சோதனை நடத்தியது. அப்போது நெஸ்டா ஊக்கமருந்து பயன்டுத்தியது தெரியவந்தது.



    இதனால் 4X100 ஓட்டத்தில் வென்ற ஜமைக்கான அணியின் தங்கப் பதக்கம் பறிக்கப்பட்டது. இதனால் உசைன் போல்ட் ஒரு பதக்கத்தை இழந்தார். இந்த முடிவை எதிர்த்து நெஸ்டா விளையாட்டுத் துறைக்கான நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதை விளையாட்டு நடுவர் மன்றம் தள்ளுபடி செய்தது.

    இதனால் உசைன் போல்டின் பதக்கம் பறிபோனது போனதாக உள்ளது. உசைன் போல்ட் வரலாற்றில் 8 பதக்கங்கள் பெற்றதாகவே எழுதப்படும்.
    ×