என் மலர்
விளையாட்டு

செப்டம்பர் மாதம் உசைன் போல்ட் இந்தியா வருகை
- இந்தியாவுக்கு செல்வதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.
- எனக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
புதுடெல்லி:
ஜமைக்கா நாட்டை சேர்ந்த முன்னாள் பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளரான அவர் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்த நிலையில் உசைன் போல்ட் செப்டம்பர் மாதம் இந்தியா வருகிறார். செப்டம்பர் 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை டெல்லி, மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இது குறித்து உசைன் போல்ட் கூறியதாவது:-
இந்தியாவுக்கு செல்வதை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறேன்.
இந்திய மக்கள் விளையாட்டின் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். எனக்கு இந்தியாவில் அதிகமான ரசிகர்கள் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உசைன் போல்ட் இந்தியா வர இருப்பது 2-வது முறையாகும். ஏற்கனவே அவர் 2014-ம் ஆண்டு வந்திருந்தார்.
Next Story






