என் மலர்
விளையாட்டு

மின்னல் வீரனுக்கு வயசாயிடுச்சு... படிக்கட்டில் ஏறினாலே மூச்சு வாங்குது - மனம் திறந்த உசைன் போல்ட்
- 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையை உசைன் போல்ட் படைத்தார்.
- உசைன் போல்ட் மின்னல் வீரன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
ஜமைக்கா நாட்டை சேர்ந்த முன்னாள் பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட். 100 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனையாளரான அவர் ஒலிம்பிக்கில் 8 தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மேலும் 11 உலக தடகள சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.
உசைன் போல்ட், 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் (9.58 வினாடிகளில்) மட்டுமில்லாமல் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் (19.19 வினாடிகள்) மற்றும் 4x100 மீட்டர் ரிலே ஓட்டப்பந்தயம் (36.84) உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.
உலகின் மிக வேகமாக ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையை பெற்ற உசைன் போல்ட் மின்னல் வீரன் என்று அழைக்கப்பட்டார்.
ஓட்டப்பந்தயத்தில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட உசைன் போல்டிற்கு தற்போது படிக்கட்டுகளில் ஏறுவதற்கு கூட மூச்சு வாங்குகிறது என்று வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
39 வயதான உசைன் போல்ட்செய்தித்தாள் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்பேட்டியில், "நான் ஒரு காலத்தில் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் ஓடினேன். ஆனால் இப்போது படிக்கட்டில் ஏறினால் கூட எனக்கு மூச்சு வாங்குகிறது. நான் உண்மையில் மீண்டும் ஓடத் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறன். நான் மீண்டும் முழுமையாக உடற்பயிற்சி செய்யத் தொடங்கும்போது, மூச்சு வாங்கும் பிரச்சனை சரி ஆகும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.






