என் மலர்
நீங்கள் தேடியது "ஷாஹித் அப்ரிடி"
- இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர்.
- கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, "ஆசிய கோப்பை தொடங்கும்போதே இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எதிரான புறக்கணிப்பு பிரசாரங்கள் இணையத்தில் அதிகரித்தன. அது வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்க வேண்டாம் என்று பிசிசிஐ கூறியதில் ஆச்சரியமில்லை.
இதற்காக இந்திய வீரர்களை நான் குறைகூறவில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு படி அவர்கள் நடந்துகொண்டார்கள்.
செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரிடம் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கினார்.
ஆனால் இந்திய அரசாங்கத்தால் சமூக ஊடக அழுத்தத்தைக் கையாள முடியாததால் மைதானத்தில் மக்களின் முன்பு அவரால் கைகுலுக்க முடியவில்லை. இதனால் இந்திய வீரர்கள் உலகத்தின் முன் அவமானமடைந்தனர்" என்று தெரிவித்தார்.
- இந்தியாவில் இந்துக்கள் - இஸ்லாமியர்கள் என்று பேசிதான் அதிகாரத்தில் தொடர்கின்றனர்.
- அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை இது தொடரும்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, ராகுல்காந்தியை புகழ்ந்து பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய அப்ரிடி, "இந்தியாவில் இந்துக்கள் - இஸ்லாமியர்கள் என்று பேசிதான் அதிகாரத்தில் தொடர்கின்றனர். இது தவறான போக்கு. அவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை இது தொடரும். ஆனால், இந்தியாவில் சில நல்லவர்கள் உள்ளனர். உதாரணமாக, ராகுல் காந்தி நல்ல மனம் கொண்டவர். அவர் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை உள்ளவர். எல்லோரையும் சேர்த்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்" என்று தெரிவித்தார்.
பாஜக ஆட்சியை விமர்சித்த அப்ரிடி, ராகுல் காந்தியை பாராட்டியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, "ராகுல் பாகிஸ்தானின் செல்லப்பிள்ளை. அப்ரிடியும் பாகிஸ்தான் மக்களும் ராகுலைத் தங்கள் தலைவராக்க முடியும்" என்று விமர்சித்தார்.
- விராட் கோலி நவீன கால சிறந்த வீரர், மேட்ச் வின்னர், சிறந்த கேப்டன் என்பதை மறுக்க முடியாது- மியான்டட்.
- அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து, தனி ஒருவராகப் போட்டிகளை வென்றவர்- அப்ரிடி.
இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். இதனால் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாட இருக்கிறார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் ஜாவித் மியான்டட் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோர் விராட் கோலியை பாராட்டியுள்ளனர்.
விராட் கோலி குறித்து மியான்டட் கூறியதாவது:-
விராட் கோலி நவீன கால சிறந்த வீரர், மேட்ச் வின்னர், சிறந்த கேப்டன் என்பதை மறுக்க முடியாது. தான் மிகவும் நேசித்த விளையாட்டை திடீரென விட்டுச் செல்வது, கதையில் இன்னும் நிறைய இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. என் பார்வையில், அவர் 2027 இறுதி வரை எளிதாக விளையாடியிருக்கலாம். நிச்சயமாக, அவருக்கு ஒரு கடினமான சூழ்நிலை இருந்தது.
இவ்வாறு மியான்தத் தெரிவித்துள்ளார்.
ஷாஹித் அப்ரிடி கூறியதாவது:-
விராட் கோலியை பற்றி நீங்கள் அதிகமாக சொல்ல முடியும். அவர் மிகவும் ஆக்ரோஷமானவர், சில சமயங்களில் சர்ச்சைக்குரியவர். ஆனால் அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. அவர் அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து, தனி ஒருவராகப் போட்டிகளை வென்றவர். அவரைப் போன்ற வீரர்கள் அரிதானவர்கள், அவர்கள் விசேசமாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர் முன்பு கோபக்காரராக இருந்தார்.
சுனில் கவாஸ்கர் கூட ஒருமுறை அவரை கட்டுப்படுத்துமாறு பிசிசிஐ-யிடம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு, விராட் கோலி நிறைய முதிர்ச்சியடைந்துள்ளார். அவர் அதிக மரியாதைக்கு தகுதியானவர்.
இவ்வாறு அப்ரிடி தெரிவித்துள்ளார்.
- ஒரு பாகிஸ்தான் செய்தி தொகுப்பாளர் அப்ரிடி இறந்துவிட்டதாக அறிவிப்பதைக் காணலாம்.
- சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ சரிபார்க்கப்பட்டது.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி இறந்துவிட்டதாகக் கூறும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
அந்த வீடியோவில், ஒரு பாகிஸ்தான் செய்தி தொகுப்பாளர் அப்ரிடி இறந்துவிட்டதாக அறிவிப்பதைக் காணலாம். இருப்பினும், அது குறித்து உண்மைச் சரிபார்ப்பு நடத்தப்பட்டு, அது உண்மையல்ல என்று தெரியவந்தது.
வீடியோவில் உள்ள படங்கள் மற்றும் பிற கூறுகள் AI ஆல் உருவாக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டது.
ஷாஹித் அப்ரிடி உண்மையில் ஆரோக்கியமாக இருப்பதாகவும்,சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வீடியோ உண்மைக்குப் புறம்பானது என்றும் உண்மைச் சரிபார்ப்புக் குழு தெளிவுபடுத்தியது.
- பாதுகாப்பு காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை என பிசிசிஐ தெரிவித்தது.
- நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம்.
பாகிஸ்தான் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய தீர்மானித்திருந்த போது இந்தியர் ஒருவர் பாகிஸ்தான் அணியை மிரட்டினார் என ஷாஹித் அப்ரிடி சுட்டிக் காட்டியுள்ளார்.
ஆசிய நாடுகள் பங்குபெறும் ஆசிய கோப்பை போட்டி இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி இந்த ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடைபெற வேண்டுமென விரும்புகிறது.
ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) பாதுகாப்பு காரணமாக இந்திய அணியை அண்டை நாட்டிற்கு அனுப்ப விரும்பவில்லை என தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் இது தொடர்பாக ஷாஹித் அப்ரிடியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சில வருடங்களுக்கு முன்பு இந்திய சுற்றுப்பயணத்தின் போது பாகிஸ்தான் அணியை இந்தியர் ஒருவர் அச்சுறுத்தியதாக கூறியுள்ளார். ஆனாலும் நாங்கள் இந்தியா சென்று விளையாடினோம். மேலும், ஆசிய கோப்பைக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல முடிவு செய்தால், அவர்கள் மீது பாகிஸ்தான் மிகுந்த கவனம் செலுத்தும் என உறுதியளிக்கிறேன்.
நீங்கள் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள், நாங்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்போம். இதற்கு முன், மும்பையைச் சேர்ந்த இந்தியர் ஒருவர் எங்களை மிரட்டினார். அதை எங்கள் அரசு பொறுப்பாக ஏற்று பாகிஸ்தான் அணி இந்தியா சென்றது. எனவே மிரட்டல்கள் எங்கள் உறவை சிதைக்கக்கூடாது.
இந்தியா ஆசிய கோப்பைக்கு வர சம்மதித்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். இது போர்கள் மற்றும் சண்டைகளின் தலைமுறை அல்ல. உறவுகள் நன்றாக இருக்க வேண்டும். நாங்கள் இந்தியாவுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளோம்.
நாங்கள் இந்தியாவுக்கு வந்தபோது எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது நினைவிருக்கிறது. இது தான் இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள அழகான உறவு.
என அப்ரிடி தெரிவித்துள்ளார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.
- மார்ச் 1-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
மினி உலகக் கோப்பை தொடர் என்று அழைக்கப்படும் "சாம்பியன் டிராபி" முதன் முதலில் 1998-ம் ஆண்டு நடைபெற்றது. கடைசியாக 2017-ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை வென்று அசத்தியது. இந்த நிலையில், ஒன்பதாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மார்ச் 1-ம் தேதி நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெற உள்ளது.
பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட இந்திய அணி அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்ளுமா என்பது தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்நிலையில் விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்தால், அவர் இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பை எல்லாம் மறந்துவிடுவார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
விராட் கோலி பாகிஸ்தானுக்கு வந்தால், அவர் இந்தியாவில் கிடைக்கும் வரவேற்பை எல்லாம் மறந்துவிடுவார். அவருக்கு பாகிஸ்தானில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இங்கு கோலி விளையாடுவதை பார்க்க ஆவலாக உள்ளோம்.
இவ்வாறு ஷாஹித் அப்ரிடி கூறினார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது.
- பாகிஸ்தானின் மோசமான தோல்விக்கு பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
கராச்சி:
சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா கோப்பையைக் கைப்பற்றி அசத்தியது. ஆனால் தொடரை நடத்திய பாகிஸ்தான் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் வெளியேறியது. கிட்டத்தட்ட 30 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி முதல் அணியாக தொடரிலிருந்து பரிதாபமாக வெளியேறியது. புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடம் பிடித்தது.
இதற்கிடையே, பாகிஸ்தானின் இந்த மோசமான தோல்விக்கு பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை பல முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாஹித் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடியுள்ளார்.
நான் சில நாட்களுக்கு முன் லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரை சந்தித்தேன். மைதானத்தை மேம்படுத்த அவர் செய்த முன்முயற்சிகள் அனைத்தும் நன்றாகவே இருந்தது. அவர் மேலும் கடாஃபி மைதானத்தை மெருகேற்ற விரும்புகிறார். ஆனால் அவர் என்னிடம் கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என கூறினார்.
உங்களுக்கு கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாது என்றால், கிரிக்கெட் பற்றி நன்கு தெரிந்த வல்லுநர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.
பாகிஸ்தான் தேர்வுக் குழுவில் தொடங்கி இயக்குநர்கள் வரை நாம் பார்க்கும் அத்தனை பேருக்கும் கிரிக்கெட் பற்றி ஒன்றுமே தெரியாது. அவர்கள் அங்கு என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று புரியவில்லை.
கிரிக்கெட்டை பற்றி ஒன்றுமே தெரியாதவர்களை வைத்துக்கொண்டு எப்படி உங்களால் கிரிக்கெட்டின் உள்கட்டமைப்பை சரிசெய்ய முடியும்? பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாவலர்கள் சரியாக இருந்தால் தான் அணியும் முன்னேற்றம் அடையும்.
நாம் எப்போதும் தயாரிப்புகளைப் பற்றிப் பேசுகிறோம், ஒரு நிகழ்வு வந்து தோல்வியடையும் போது அறுவை சிகிச்சை பற்றிப் பேசுகிறோம். உண்மை என்னவென்றால் தவறான முடிவுகளால் பாகிஸ்தான் கிரிக்கெட் ஐ.சி.யூவில் உள்ளது என தெரிவித்தார்.






