என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய கிரிக்கெட்டிற்கு விராட் கோலி செய்ததை மறுத்துவிட முடியாது: மியான்டட், ஷாஹித் அப்ரிடி புகழாரம்
    X

    இந்திய கிரிக்கெட்டிற்கு விராட் கோலி செய்ததை மறுத்துவிட முடியாது: மியான்டட், ஷாஹித் அப்ரிடி புகழாரம்

    • விராட் கோலி நவீன கால சிறந்த வீரர், மேட்ச் வின்னர், சிறந்த கேப்டன் என்பதை மறுக்க முடியாது- மியான்டட்.
    • அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து, தனி ஒருவராகப் போட்டிகளை வென்றவர்- அப்ரிடி.

    இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. இவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென ஓய்வு முடிவை அறிவித்தார். இதனால் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாட இருக்கிறார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் ஜாம்பவான்கள் ஜாவித் மியான்டட் மற்றும் ஷாஹித் அப்ரிடி ஆகியோர் விராட் கோலியை பாராட்டியுள்ளனர்.

    விராட் கோலி குறித்து மியான்டட் கூறியதாவது:-

    விராட் கோலி நவீன கால சிறந்த வீரர், மேட்ச் வின்னர், சிறந்த கேப்டன் என்பதை மறுக்க முடியாது. தான் மிகவும் நேசித்த விளையாட்டை திடீரென விட்டுச் செல்வது, கதையில் இன்னும் நிறைய இருக்கிறது என்பதைக் குறிக்கிறது. என் பார்வையில், அவர் 2027 இறுதி வரை எளிதாக விளையாடியிருக்கலாம். நிச்சயமாக, அவருக்கு ஒரு கடினமான சூழ்நிலை இருந்தது.

    இவ்வாறு மியான்தத் தெரிவித்துள்ளார்.

    ஷாஹித் அப்ரிடி கூறியதாவது:-

    விராட் கோலியை பற்றி நீங்கள் அதிகமாக சொல்ல முடியும். அவர் மிகவும் ஆக்ரோஷமானவர், சில சமயங்களில் சர்ச்சைக்குரியவர். ஆனால் அவர் இந்திய கிரிக்கெட்டுக்கு என்ன செய்திருக்கிறார் என்பதை மறுக்க முடியாது. அவர் அணிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்து, தனி ஒருவராகப் போட்டிகளை வென்றவர். அவரைப் போன்ற வீரர்கள் அரிதானவர்கள், அவர்கள் விசேசமாக நடத்தப்பட வேண்டியவர்கள். அவர் முன்பு கோபக்காரராக இருந்தார்.

    சுனில் கவாஸ்கர் கூட ஒருமுறை அவரை கட்டுப்படுத்துமாறு பிசிசிஐ-யிடம் கேட்டது எனக்கு நினைவிருக்கிறது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு, விராட் கோலி நிறைய முதிர்ச்சியடைந்துள்ளார். அவர் அதிக மரியாதைக்கு தகுதியானவர்.

    இவ்வாறு அப்ரிடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×