என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள்.
- தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
'கறிக்கோழி பண்ணை விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களை கைது செய்யும் விடியா திமுக அரசுக்கு என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ் நாடு முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணை விவசாயிகளும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு, கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள்.
தற்போது இந்நிறுவனங்கள் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 பைசா வளர்ப்பு கூலியாக கறிக்கோழி பண்ணையாளர்களுக்கு வழங்கி வருகிறது.
தேங்காய் நார்மஞ்சி விலை உயர்வு மூலப் பொருட்களின் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, ஆள் கூலி உயர்வு என பல்வேறு செலவுகள் அதிகரித்ததற்கு ஏற்ப நிறுவனங்கள் கூலி உயர்வு வழங்காததால் பண்ணையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடும் விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு கறிக்கோழி பண்ணை விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்புக்கு கிலோவுக்கு ரூ. 20-ஐ அடிப்படை கூலியாக வழங்க வேண்டும்; மின் கட்டண சலுகை, தரமான தீவனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 2
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கறிக்கோழி வளர்ப்பு பண்ணையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் முன்னெடுப்பில், தமிழ்நாடு அரசிடம் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ச்சியாகப் போராடி வருகின்றனர்.
1.1.2026 முதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று பண்ணையாளர்கள் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாகவே நிறுவனங்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, 7.1.2026 அன்று சென்னை கால்நடை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 21.1.2026 அன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்தி வந்த கறிக்கோழி பண்ணை விவசாயிகளையும், தமிழக விவசாய பாதுகாப்புச் சங்க நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் 10 பேரை 14.1.2026 அன்று விடியா திமுக அரசின் காவல்துறை கைது செய்து, சிறையில் வைத்துள்ளதாக வந்த செய்தி கடும் கண்டனத்திற்குரியது.
கைது செய்த கறிக்கோழி பண்ணை விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்துவதுடன், கறிக்கோழி பண்ணை விவசாய சங்கத்தினரையும், நிறுவனங்களையும் உடனடியாக அழைத்து முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி.
கறிக்கோழி பண்ணையாளர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
- ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவத்தை விரும்புகிறது.
- காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சியில பங்கு கேட்பதில் தவறு ஏதும் இல்லை.
காங்கிரஸ் கட்சித் தலைவரும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவருமான சச்சின் பைலட் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சச்சின் பைலட் கூறுகையில் "ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் பிரதிநிதித்துவத்தை விரும்புகிறது. காங்கிரஸ் தொண்டர்கள் ஆட்சியில பங்கு கேட்பதில் தவறு ஏதும் இல்லை. இதன்மூலம் அவர்களால் தமிழ்நாடு மக்களுக்கு உதவி செய்ய முடியும்.
எதிர்காலத்தில் எது நடந்தாலும், பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியால் தமிழக அரசியலில் கால் பதிக்க முடியாது. தி.மு.க. அரசு சிறந்த பணியை செய்து வருகிறது. அவர்களின் செயல்பாட்டை மக்கள் விரும்பியுள்ளனர்" என்றார்.
தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைத்தால் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆட்சியில் அதிகாரம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
- அதிகாலையில் தொண்டர்கள் மற்றும் நண்பர்கள் அவரை பார்க்க அலுவலகத்துக்கு வந்தனர்.
- அலுவலகத்தின் உள்ளே சைதை சுகுமார் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.
சைதாப்பேட்டை:
சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதி அ.தி.மு.க. செயலாளர் சைதை சுகுமார் (வயது 47). இவரது அலுவலகம் சைதாப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் உள்ளது.
இந்த நிலையில் நாளை எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். பின்னர் இரவு கட்சி அலுவலகத்திற்கு தூங்க போவதாக கூறி அவருடன் இருந்த நண்பர்களிடம் கூறி சென்றார்.
இதனால் நண்பர்கள் அவர்களது வீட்டிற்கு சென்றுவிட்டனர். இன்று அதிகாலையில் தொண்டர்கள் மற்றும் நண்பர்கள் அவரை பார்க்க அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது.
அலுவலகத்தின் உள்ளே சைதை சுகுமார் தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கினார். உடனே இது பற்றி குமரன் நகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சுகுமார் உடலை கைப்பற்றி சென்னை கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமரன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் கடன் தொல்லை காரணமாக சுகுமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. இருப்பினும் தற்கொலைக்கு வேறு காரணங்கள் இருக்கிறதா என போலீசார் பல கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் இறந்துபோன சுகுமாரின் செல்போனை பறிமுதல் செய்து கடைசியாக யார்? யாரிடம் பேசிள்ளார் என தீவிர விசாரணை செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு அ.தி.மு.க. பகுதி செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது.
- லாரி டிரைவர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை:
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று மாட்டுப் பொங்கலும், நாளை காணும் பொங்கலும் கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கலையொட்டிய தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களது ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நிறுவனங்களை நடத்தி வருபவர்களும் தங்களது நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து விட்டு அவர்களும் ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகளில் வாகன போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.
குறிப்பாக வடசென்னை பகுதிகளில் கனரக வாகனங்கள் எப்போதுமே அணிவகுப்பதை காண முடியும். துறைமுகம் நோக்கி செல்லும் கனரக வாகனங்களால் செங்குன்றம், புழல், மாதவரம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் கண்டெய்னர் லாரிகள் அதிக அளவில் சென்று வரும்.
பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறைவிடப்பட்டுள்ளதால் லாரி டிரைவர்களும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக வடசென்னை பகுதிகளும் வாகனப் போக்குவரத்து இன்றியே காணப்படுகிறது.
நாளை காணும் பொங்கலுக்கு இன்று இருப்பதை விட வாகனப் போக்குவரத்து மிகவும் குறைவாகவே இருக்க வாய்ப்புள்ளதாகவும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.
- தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பஸ் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்றவர்கள் வருகிற 18-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு திரும்புகிறார்கள். காலையில் இருந்து பஸ் மற்றும் ரெயில்களில் பயணத்தை தொடர முன்பதிவு செய்துள்ளனர். 19-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் திறக்கப்படுவதால் வெளியூர் சென்றவர்கள் சென்னை திரும்புவதற்கு தயாராகி வருகின்றனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பஸ் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. கூடுதலாக சிறப்பு ரெயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. 18-ந்தேதி மாலை 5 மணிக்கு இந்த சிறப்பு ரெயில் (எண்.06160 ) புறப்பட்டு மறுநாள் (திங்கள்கிழமை) அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த அதிவேக சிறப்பு ரெயில் வள்ளியூர், நாங்குநேரி, திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான முன்பதிவு நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
- பாலமேடு ஜல்லிக்கட்டு மரபுபடி 7 மணி முதல் 8 மணிக்குள் தொடங்கப்பட வேண்டும்.
- 9.30 மணி தாண்டியும் வாடிவாசல் திறக்கப்படவில்லை என்பது மக்களுக்கு வேதனையாக இருந்தது.
மதுரை:
மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மனிதனின் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் கடவுளுக்கும், இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் பொங்கல் வைத்து வழிபடுகிறோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதை போல எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் கோட்டைக்கு போவார் அப்போது தமிழக மக்களுக்கு நிச்சயமாக வழி பிறக்கும்.
உலகப் பிரசித்தி பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஜல்லிக்கட்டு போட்டி மன்னராட்சி முதல் தற்போது மக்களாட்சி வரை மக்கள் ஜல்லிக்கட்டாக நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது உதயநிதிக்காக ஜல்லிக்கட்டா? மு.க.ஸ்டாலினுக்காக ஜல்லிக்கட்டா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டில் அதிகாலையில் இருந்து மாடுபிடி வீரர்களும், காளைகளும் அனைவரும் பல மணி நேரம் காத்திருந்து தொடங்கப்படவில்லை. பாலமேடு ஜல்லிக்கட்டு மரபுபடி 7 மணி முதல் 8 மணிக்குள் தொடங்கப்பட வேண்டும். ஆனால் 9.30 மணி தாண்டியும் வாடிவாசல் திறக்கப்படவில்லை என்பது மக்களுக்கு வேதனையாக இருந்தது. உதயநிதிக்காக வேடிக்கை ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துகிறார்கள். தி.மு.க. அரசின் அதிகார துஷ்பிரயோகம் எல்லை மீறி சென்று விட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஜனநாயகம் மலர இந்த தைத்திருநாளில் நாம் சூளுரை ஏற்க வேண்டும் என்று கூறினார்.
- சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர்.
- சென்னையில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்று அங்கு நகைகளை அடகு வைத்து பணமாக மாற்றியது விசாரணையில் தெரியவந்தது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி பொன்விழா நகரை சேர்ந்தவர் சன்னியாசி, இவர் பா.ஜ.க. மாவட்ட வர்த்தக பிரிவு அணி செயலாளராக உள்ளார். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் சென்னையில் வசித்து, அங்கு பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார்.
இதனால் சுத்தமல்லியில் உள்ள வீட்டில் அவரது மாமனார் மாரி, மாமியார் ஆண்டிச்சி (வயது 70) ஆகியோர் மட்டும் வசித்து வருகிறார்கள். கடந்த 8-ந்தேதி காலையில் வீட்டில் ஆண்டிச்சி மட்டும் தனியாக இருந்தார்.
அப்போது வீட்டுக்குள் புகுந்த கும்பல் ஆண்டிச்சியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்பது போல் நடித்து அவரது கை, கால்களை கயிறு மூலம் கட்டி, அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மூக்குத்தி, கம்மல் என சுமார் 15 பவுன் நகைகளை பறித்தனர். தொடர்ந்து பீரோவை திறந்து அதில் இருந்த 10 சவரன் நகைகள், ரூ.6 லட்சம் பணத்தை கொள்ளையடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு அந்த பகுதியில் பொருத்தப்பட்டி ருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.
மேலும் அந்த பகுதியில் சம்பவத்தன்று சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
நவீன தொழில்நுட்ப வசதியுடன் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நேற்று பேட்டை அண்ணாமலை நகரை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினரான ஜீவா நகரை சேர்ந்த சுந்தர் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் 2 பேரும் போலீசாரிடம் சிக்கிக்கொள்ளாமல் இருக்க மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்த நகைகளை, புத்திசாலித்தனமாக செயல்களை செய்வது போல் சென்னையில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்திற்கு சென்று அங்கு நகைகளை அடகு வைத்து பணமாக மாற்றியது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சென்னைக்கு விரைந்துள்ள தனிப்படையினர், அந்த திருட்டு நகைகளை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு கும்பலை திறம்பட கைது செய்த போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார் பாராட்டினார்.
- சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 கார்களில் 7 பேர் வந்தனர்.
- கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 4 பேர் டாக்டரின் அறையில் ஒரு வாரம் தங்கி இருந்து உள்ளனர்.
வேலூர்:
வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவில் சி.எம்.சி. டாக்டர்கள் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
இன்று காலை சென்னையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 கார்களில் 7 பேர் வந்தனர்.
மேலும் அவர்களுடன் துப்பாக்கி ஏந்திய போலீசாரும் வந்தனர். அதிரடியாக அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பின் முன் பகுதியில் இருந்த கதவை இழுத்து பூட்டினர்.
அமலாக்கத்துறை அதிகாரிகள் குடியிருப்பில் நுழைந்து சோதனை செய்தனர். குடியிருப்பில் இருந்து யாரையும் வெளியே செல்லவும், வெளியில் இருந்து யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
முதற்கட்ட விசாரணைகள் கேரளாவை சேர்ந்த டாக்டர் ஒருவர் சி.எம்.சி.யில் வேலை செய்து வருகிறார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 4 பேர் டாக்டரின் அறையில் ஒரு வாரம் தங்கி இருந்து உள்ளனர்.
டாக்டருடன் தங்கி இருந்தவர்களுக்கும், டாக்டருக்கும் என்ன தொடர்பு இருந்தது என விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் சி.எம்.சி. வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்!
- அறம் - பொருள் - இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஈராயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கும் இலக்கியமாய், உலக மாந்தர்க்கெல்லாம் பொதுவான உயரிய நற்கருத்துகள் கொண்ட திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம்!
அறம் - பொருள் - இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்ற போது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது.
- எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, புனே உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கான தேர்தல் 30 ஆண்டு வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. நவி மும்பையில் இப்போது முழுமையாக பா.ஜ.க. கூட்டணியே ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்த நிலையில், மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் குறித்து விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கூட்டணி அரசியலில் காங்கிரஸ் ஆட்சியில் பங்கேற்ற போது எப்போதும் ஒரு தெளிவான முடிவை எடுக்கிறது. பொதுபணித்துறை, பாசனத் துறை, நெடுஞ்சாலைதுறை, சுரங்கங்கள், நகர்ப்புற வளர்ச்சி போன்ற "வளமிக்க" துறைகளை காங்கிரஸ் தேடி போவதில்லை.
மகாராஷ்டிரா, கேரளா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில், மக்களை மையமாகக் கொண்ட துறைகள் சுகாதாரம், ஊரக வளர்ச்சி, சமூக நீதி, பெண்கள் & குழந்தைகள் நலன், காதி & கைத்தறி ஆகியவற்றையே காங்கிரஸ் பொறுப்புடன் ஏற்றுள்ளது.
எங்களுக்கு அரசியல் என்பது ஒப்பந்தங்கள் அல்ல; மக்கள் சேவை. அதுவே காங்கிரஸ் மாடல் என்று கூறியுள்ளார்.
- தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை :
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு தினங்களில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.
இதனிடையே இன்று முதல் 20-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
21 மற்றும் 22-ந்தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21-22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
- பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை.
- காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் மட்டும்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:
* பராசக்தி படத்தை நான் பார்ப்பதாக இல்லை. திரைப்படங்களை அரசியல் ரீதியாக அணுகுவதே தவறானது.
* பராசக்தி ஒரு கமர்ஷியல் திரைப்படம் அவ்வளவு தான். இதை வைத்து அரசியல் narrative set பண்ணலாம் என நினைத்தால் அது அபத்தம்.
* காங்கிரஸ் கட்சி தி.மு.க.வுடன் மட்டும்தான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
* நிர்வாகிகளுக்கு பலவித கருத்து இருக்கலாம். தி.மு.க.வுடன் கூட்டணி பேசுவதற்கு தான் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.






