search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எச்.ராஜா - முக ஸ்டாலின்
    X
    எச்.ராஜா - முக ஸ்டாலின்

    வரலாறு தெரியாமல் போராடும் மு.க.ஸ்டாலின் - எச்.ராஜா தாக்கு

    திமுக தலைவர் முக ஸ்டாலின் வரலாறு தெரியாமல் போராடுவதாக பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
    சென்னை:

    குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துவதை பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் எச்.ராஜா கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியதாவது:-

    குடியுரிமை திருத்த சட்டம் என்ன சொல்கிறது? என்பது புரிகிறதா இல்லை வரலாறாவது தெரிகிறதா? என்பதை நினைத்து வேதனைப்படுகிறேன்.

    இந்தியா- பாகிஸ்தான் பிரிவினை எப்படி வந்தது? மதத்தின் அடிப்படையில் தான் காங்கிரஸ் பிரித்தது.

    அப்போது நேருவும், அயுப்கானும் ஒரு ஒப்பந்தம் போட்டார்கள். அந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினருக்கு அந்த நாடு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதே போல் இந்தியாவில் வாழும் சிறுபான்மையினருக்கு இந்திய அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    ஆனால் நடந்தது என்ன? பாகிஸ்தானில் சிறுபான்மையாக இருந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்தர்கள், சீக்கியர்கள் பல வழிகளில் சித்ரவதை அனுபவித்தார்கள். பலர் விரட்டியடிக்கப்பட்டார்கள்.

    பிரிவினையின்போது 30 சதவீதம் இந்துக்களும், சிறுபான்மையினரும் இருந்தார்கள். இப்போது 1½ சதவீதம்தான் இருக்கிறார்கள். அவர்கள் எங்கே போனார்கள் என்பதற்கு சோனியாவும், ஸ்டாலினும் முதலில் பதில் சொல்லட்டும்.

    உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி வந்தவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படுகிறது.

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளும் அதிகாரப்பூர்வமாக முஸ்லிம் நாடாக அறிவிக்கப்பட்ட நாடுகள். அந்த நாடுகளில் முஸ்லிம்களுக்கு என்ன அச்சுறுச்சல்? என்ன துன்பம்? ஏன் அகதிகளாக வருகிறார்கள்? இதை கூட புரிந்து கொள்ள முடியாத அல்லது தெரிந்து தங்கள் சாயம் வெளுத்து விட்டதே என்று மறைக்க போராடுகிறார்கள். மக்களிடையே மத மோதலை உருவாக்கும் தேச விரோதிகள்.

    அடுத்து இலங்கை தமிழர் பிரச்சினை. அந்த பிரச்சினையில் அவர்களுக்கு குடியுரிமை தேவையில்லை என்று பழ.நெடுமாறனே கூறி இருக்கிறார்.

    ஏனெனில் இலங்கையில் தமிழர்களின் மண் இருக்கிறது. அங்கு அவர்களுக்கான பிரதிநிதிகள் இருக்கிறார்கள். இங்கு குடியுரிமை வழங்குவதால் பூர்வீக மண்ணை இழக்க நேரிடும் என்கிறார்கள். அப்படியானால் மீண்டும் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்ய தி.மு.க. விரும்புகிறதா? மக்களை குழப்பும் இவர்களது முகத்திரை விரைவில் கிழியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×