search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாசர்பாடி வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்
    X

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாசர்பாடி வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்

    விபத்தில் மூளைச்சாவு அடைந்த வியாசர்பாடி வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் 4 நோயாளிகள் உயிர்பிழைத்து மறு வாழ்வு பெற்றனர்.

    பெரம்பூர்:

    வியாசர்பாடி சர்மா நகர் எஸ்.ஏ. காலனி 1வது தெருவை சேர்ந்தவர் துரைராஜ். திருமணம் ஆகாதவர். அந்தப் பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். கடந்த 20-ந் தேதி இவர் வியாசர்பாடியில் தனது கடையில் இருந்து டீக் கடைக்கு செல்ல சாலையை கடக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதியது.

    தலையில் பலத்த காயம் அடைந்த அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 23-ந் தேதி மூளைச்சாவு ஏற்பட்டது. இனி அவர் உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லை என்பதால் டாக்டர்கள் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களை அழைத்து நிலைமையை எடுத்துக்கூறி உடல் உறுப்பு தானம் பற்றி விளக்கினார். அதற்கு அவர்கள் சம்மதித்தனர்.

    இதையடுத்து வாலிபர் துரை ராஜின் ஈரல், சிறுநீரகம் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கும், இதயம், நுரையீரல் பிரான்டியர் லைப் லைன் ஆஸ்பத்திரிக்கும் கண் கருவிழி எழும்பூர் கண் ஆஸ்பத்திரிக்கும், தோள் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.

    இதன் மூலம் 4 நோயாளிகள் உயிர்பிழைத்து மறு வாழ்வு பெற்றனர்.

    இறந்த வாலிபர் துரை ராஜ் உடல் போலீசார் மூலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    Next Story
    ×