என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச், தீம் அரையிறுதிக்கு முன்னேற்றம்
Byமாலை மலர்7 Jun 2019 3:43 AM GMT (Updated: 7 Jun 2019 3:43 AM GMT)
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும் முன்னேறியுள்ளனர்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்க்ள் முடிந்து காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நேற்று நடைபெற்ற ஆண்கள் காலிறுதி போட்டி ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான செர்பியா நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஜெர்மனி நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் வெரெவுடன் மோதினார். இதில் ஜோகோவிச் 7-5, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதேபோல், நடைபெற்ற மற்றொரு காலிறுதி போட்டியில் ஆஸ்திரியா நாட்டின் டொமினிக் தீம் ரஷ்யா நாட்டை சேர்ந்த கரென் கச்சனோவுடன் மோதினார். இதில் டொமினிக் தீம் 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதையடுத்து, இன்று மாலை நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் ரோஜர் பெடரரும், ரபெல் நடாலும் மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் ஜோகோவிச்சும், தீமும் மோதுகின்றனர்.
Next Story
×