என் மலர்

  செய்திகள்

  முத்தரப்பு டி20 தொடரில் கோலி, தோனிக்கு ரெஸ்ட் - களமிறங்கும் இளம்படை
  X

  முத்தரப்பு டி20 தொடரில் கோலி, தோனிக்கு ரெஸ்ட் - களமிறங்கும் இளம்படை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடரில் கேப்டன் கோலி, விக்கெட் கீப்பர் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
  மும்பை:

  இந்தியா, இலங்கை மற்றும் வங்காளதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் வரும் மார்ச் 6-ம் தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு அணியிம் மற்றொரு அணியுடன் இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

  இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் விராட் கோலி, விக்கெட் கீப்பர் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா அணியை வழிநடத்த உள்ளார். தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், சர்துல் தாகுர் ஆகிய இளம் வீரர்கள் அதிகமானோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

  அணி விபரம்:

  ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், சுரேஷ் ரெய்னா, மனிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹுடா, வாஷிங்டன் சுந்தர், யுஷ்வெந்திர சாஹல், அக்ஸர் படேல், விஜய் சங்கர், சர்துல் தாகுர், ஜெய்தேவ் உனத்கட், முகம்மது சிராஜ், ரிஷாப் பாந்த் #TamilNews
  Next Story
  ×