என் மலர்

  இந்தியா

  இளைஞர் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி
  X
  இளைஞர் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

  உ.பி தேர்தல்: இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை என்பது உத்திரப்பிரதேசத்தில் இருந்து தொடங்க வேண்டும் என ராகுல் காந்தி கூறினார்.
  லக்னோ:

  உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

  கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச தேர்தலில் 403 இடங்களில், வெறும் 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்தமுறை பெரும்பான்மை இடங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர், பட்டியலின மக்களை நம்பி தேர்தல் வியூகத்தை வகுத்து வருகிறது. 

  ஏற்கனவே இந்த சட்டமன்ற தேர்தலில் 40 சதவீத பெண் வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரியங்கா காந்தி கூறியிருந்தார்.

  இந்நிலையில் இன்று இளைஞர்களுக்கான தேர்தல் அறிக்கையை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் வெளியிட்டனர். அப்போது பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:-

  இந்த தேர்தல் அறிக்கையில் இருப்பது வெற்று வார்த்தைகள் கிடையாது. இந்தியாவுக்கான தொலைநோக்கு பார்வை என்பது உத்திரப்பிரதேசத்தில் இருந்து தொடங்க வேண்டும். 

  நாங்கள் வெறுப்பை விதைக்க மாட்டோம். நாங்கள் மக்களை ஒன்றிணைக்கிறோம். இளைஞர்களின் வலிமையில் புதிய உத்தர பிரதேசத்தை கட்டமைக்க விரும்புகிறோம்.

  இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.  

  தேர்தல் அறிக்கை குறித்து பேசிய பிரியங்கா காந்தி, 'உத்திரப் பிரதேச அரசின் மீது இளைஞர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். உ.பி.யில் யோகி ஆதித்யநாத் அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தவறிவிட்டது. நாங்கள் உ.பியில் ஜாதியை வைத்து பிரச்சாரம் செய்யவில்லை. உத்தர பிரதேசத்தின் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம்’ என கூறினார்.
  Next Story
  ×