என் மலர்

  செய்திகள்

  ராகுல் காந்தி
  X
  ராகுல் காந்தி

  கேரளா மக்களின் கண்ணியமும், தீரமும் மெய்சிலிர்க்க வைக்கிறது - ராகுல் காந்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளா மக்களின் கண்ணியமும், தீரமும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது என வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
  திருவனந்தபுரம்:

  கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கனமழையாக கொட்டித் தீர்த்தது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக கேரள மாநிலம் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது.
   
  வயநாடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஏராளமான மக்கள் உயிரிழந்து உள்ளனர். பலர் மாயமாகி விட்டனர்.

  இதையடுத்து, வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கேரளா வந்தார். அங்கு நிவாரண முகாம்களில் தங்கி உள்ள பொதுமக்களை நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும், கடும் நிலச்சரிவு ஏற்பட்ட கவளப்பாறை பகுதிக்கு சென்று நிலச்சரிவின் பாதிப்புகளை பார்வையிட்டார்.

  இன்று காலை கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று ராகுல் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அதேபோல நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளையும் நேரில் பார்வையிட்டார்.

  மக்களுக்கு ஆறுதல் கூறும் ராகுல் காந்தி

  இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில், கேரளா மக்களின் கண்ணியமும் தீரமும் மெய்சிலிர்க்க வைக்கிறது என தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், கேரளா மக்களின் கண்ணியமும் தீரமும் மெய்சிலிர்க்க வைக்கிறது. வயநாடு மக்களின் பிரதிநிதியாக இருக்கிறோம் என்ற பெருமிதத்துடன் அங்கிருந்து புறப்பட்டேன் என பதிவிட்டுள்ளார்.
  Next Story
  ×