search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளிக்கு செல்லும் சிறுவன்
    X
    பள்ளிக்கு செல்லும் சிறுவன்

    ஜம்மு காஷ்மீர்: லடாக்கில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு

    ஜம்மு காஷ்மீர் லடாக் மண்டலத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் நிகழும் பதற்றம் தொடர்பாக ஸ்ரீநகரில் நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அமர்நாத் யாத்திரை, மச்சாயில் மாதா யாத்திரை உள்ளிட்ட யாத்திரைகள் ரத்து செய்யப்பட்டன.

    மேலும், ஜம்மு காஷ்மீரில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்தார். இதை தொடர்ந்து சுமார் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேறியுள்ளனர்.
     
    இந்நிலையில் ஸ்ரீநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலானது. மறு உத்தரவு வரும் வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் காஷ்மீரில் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களை மூடுவதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் லடாக் மண்டலத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

    லடாக்கில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படாததால் கல்வி நிறுவனங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களும் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
    Next Story
    ×