search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளின் ஆதரவு உள்ளது - ராஜ்நாத் சிங்
    X

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளின் ஆதரவு உள்ளது - ராஜ்நாத் சிங்

    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளின் ஆதரவு உள்ளது என பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம்.
     
    ஒரே நேரத்தில் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துகிறபோது பண இழப்பு, நேரம் வீணாவது குறையும் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். ஆனாலும், இதில் அனைத்துக் கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.

    இதுகுறித்து விவாதிக்க மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோ‌ஷி அழைப்பு அனுப்பினார்.



    இதற்கிடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று மதியம் தொடங்கியது. இதில் ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக், ஆந்திரா முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
     
    ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசனை நடத்த 40 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதில் 21 கட்சிகள் கலந்து கொண்டன. மேலும் 3 கட்சிகள் தங்களது ஆலோசனைகளை கடிதம் மூலம் தெரிவித்திருந்தனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆலோசனை வழங்க குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார் என தெரிவித்தார். 
    Next Story
    ×