search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    59 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
    X

    59 தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

    பாராளுமன்ற தேர்தலில் 6ம் கட்டமாக நாளை 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடத்தப்படும் தேர்தலில் இதுவரை 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது.

    6-வது கட்டமாக உத்தர பிரதேசம் (14), அரியானா (10), மேற்கு வங்காளம் (8), பீகார் (8), மத்திய பிரதேசம் (8), டெல்லி (7), ஜார்க்கண்ட் (4) ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 59 தொகுதிகளிலும் நேற்று மாலை பிரசாரம் ஓய்ந்தது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) 59 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும்.

    59 தொகுதிகளிலும் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் திக்விஜய் சிங், மேனகா காந்தி, அகிலேஷ் யாதவ், ரீடா பகுகுணா, கீர்த்தி ஆசாத், கவுதம் காம்பீர், பூபிந்தர் கூடா, ராதா மோகன் சிங், ரகுவன்ஸ் பிரசாத் சிங், மீனாட்சி லெகி, அஜய்மக்கன், விஜேந்தர்சிங், ஷீலா தீட்சித் ஆகியோர் முக்கியமானவர்கள்.

    59 தொகுதிகளிலும் 10 கோடியே 17 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 5 கோடியே 42 லட்சம் பேர். பெண் வாக்காளர்கள் 4 கோடியே 75 பேர்.

    இவர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 7 மாநிலங்களிலும் 1 லட்சத்து 13 ஆயிரத்து 167 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் பாதிக்கு பாதி பதட்டமானதாக கண்டறியப்பட்டுள்ளது.

    இதனால் நாளை ஓட்டுப்பதிவு நடக்கும் 7 மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


    2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்த 59 தொகுதிகளில் 44 இடங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றிருந்தது. லோக் ஜனசக்தி கட்சி 16 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.

    காங்கிரஸ் கட்சிக்கு இந்த 59 தொகுதிகளில் 2 இடங்களே கிடைத்திருந்தன. இந்திய தேசிய லோக் தளம் 2 இடங்களிலும், அகாலி தளம் 1 இடத்திலும், சமாஜ்வாடி கட்சி 3 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தன.

    ஆனால் இந்த தடவை பா.ஜனதாவுக்கு 2014-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்தது போல 44 இடங்களில் வெற்றி கிடைக்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது. தற்போதைய அரசியல் நிலவரப்படி இந்த 44 இடங்களில் பாதி இடங்களை பா.ஜனதா இழக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் 6-வது கட்ட தேர்தல் பாரதிய ஜனதாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது.

    இதுவரை நடந்துள்ள 5 கட்ட தேர்தல்கள் மூலம் 424 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. நாளை நடக்கும் 59 தொகுதிகளையும் சேர்த்தால் 483 தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று விடும்.

    19-ந்தேதி 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும் அத்துடன் 542 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்து விடும். 23-ந்தேதி வாக்குகள் எண்ணி முடிவுகள் வெளியிடப்படும்.
    Next Story
    ×