என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியை பார்ப்பார்கள் - சிவசேனா கருத்து
Byமாலை மலர்23 Jan 2019 3:13 PM GMT (Updated: 23 Jan 2019 3:13 PM GMT)
பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் மக்களை கவரும் விதமாக பிரியங்கா காந்தி இருப்பார். வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியை பார்ப்பார்கள் என சிவசேனா தெரிவித்துள்ளது. #Congress #PriyankaGandhi #IndiraGandhi #Shivsena
மும்பை:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி. இவர் தேர்தல் சமயங்களில் தனது தாயார் சோனியா காந்தி, சகோதரர் ராகுல்காந்தி போட்டியிடும் ரேபரேலி, அமேதி தொகுதிகளில் தேர்தல் பணிகளை கவனித்து அவர்களுக்கு உதவி வந்தார்.
தற்போது முதல் முறையாக பிரியங்கா காந்திக்கு காங்கிரசில் பதவி வழங்கப்பட்டு உள்ளது. அவரை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளராக ராகுல்காந்தி நியமித்து உள்ளார்.
பிரியங்காவுக்கு கட்சி பதவி வழங்கப்பட்டதை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஆனால், பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கும் மக்களை கவரும் விதமாக பிரியங்கா காந்தி இருப்பார். வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியை பார்ப்பார்கள் என சிவசேனா கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் மனீஷா கயாண்டே கூறுகையில், பிரியங்கா காந்தியிடம் அவரது பாட்டி குணங்கள் தென்படுகிறது. எனவே, வரும் தேர்தலில் வாக்களிக்கும் மக்கள் பிரியங்காவுக்குள் இந்திரா காந்தியின் முகத்தை காண்பார்கள் என தெரிவித்துள்ளார். #Congress #PriyankaGandhi #IndiraGandhi #Shivsena
Next Story
×