என் மலர்

  செய்திகள்

  70 ஆண்டுகளாக காங்கிரஸ் அன்பை விதைத்தது பாஜக வெறுப்பை விதைக்கிறது - ராகுல் காந்தி
  X

  70 ஆண்டுகளாக காங்கிரஸ் அன்பை விதைத்தது பாஜக வெறுப்பை விதைக்கிறது - ராகுல் காந்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் இல்லாமல் விவசாயிகளால் வாழ முடியாது. காங்கிரஸ் எதிர்க்காவிட்டால் அவர்களின் நிலங்களை மோடி பிடுங்கியிருப்பார் என ராகுல் காந்தி பேசியுள்ளார். #JanAakroshRally #RahulGandhi
  புதுடெல்லி:

  தலைநகர் டெல்லியில் ‘ஜன் ஆக்ரோஷ்’ என்ற பெயரில் ஒரு மாபெரும் பேரணியும், பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தையும் காங்கிரஸ் கட்சி இன்று நடத்தியது. அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தலைமை ஏற்று நடத்தும் இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

  இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

  மோடி ஆட்சியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுகிறது. தலித், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஆனால், மோடி அமைதியாக உள்ளார். பாஜக, ஆர்.எஸ்.எஸ் மக்களிடையே வெறுப்பை விதைக்கிறது. ஆனால், காங்கிரஸ் 70 ஆண்டுகளாக அன்பை விதைத்தது.

  மக்களின் பணம் நிரவ் மோடி போன்றவர்களின் பாக்கெட்டுகளில் உள்ளது. காங்கிரஸ் இல்லாமல் விவசாயிகளால் உயிர்வாழ முடியாது. காங்கிரஸ் மட்டும் எதிர்க்காவிட்டால் விவசாயிகளின் நிலத்தை மோடி பிடுங்கியிருப்பார். ஜனநாயக அமைப்புகளை மோடி பலவீனப்படுத்தி வருகிறார்.

  வேலை வாய்ப்பு இல்லாமை, அடாவடி வரி விதிப்பு முறை போன்றவற்றை மோடி கொண்டு வந்துள்ளார். அவர் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பெண்களிடம் அடாவடித்தனம் செய்து வருகின்றனர். கர்நாடக தேர்தல் மட்டுமல்ல வரும் அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் வெற்றி பெறும்

  இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். #JanAakroshRally #RahulGandhi
  Next Story
  ×