என் மலர்

  செய்திகள்

  மின்னல் தாக்கி பலியான 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: உ.பி. முதல்-மந்திரி அறிவிப்பு
  X

  மின்னல் தாக்கி பலியான 9 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம்: உ.பி. முதல்-மந்திரி அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
  லக்னோ:

  உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் மாநிலங்களின் பல பகுதிகளில் ஓடும் ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்தவர்களை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

  மேலும், பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினரும், மாநில போலீசார் மற்றும் தீயணைப்பு படையினரும் விரைந்து செயல்பட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது என பிரதமர் மோடி உள்பட முக்கிய மந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

  இதற்கிடையே, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கி பலர் உயிரிழந்தனர். இதையடுத்து மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

  இந்நிலையில், உத்திரப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு, தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் இன்று அறிவித்துள்ளார்.
  Next Story
  ×