என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "killed by lightning"

    • தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
    • அறந்தாங்கி அருகே பறையத்தூரில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர்

    புதுக்கோட்டை:

    வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த அதீத கனமழையால் டெல்டா மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

    இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பறையத்தூரில் மின்னல் தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். இரு சக்கர வாகனத்தில் சென்ற 2 பள்ளி மாணவர்கள் உள்பட 3 பேர் மீது மின்னல் தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    • திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
    • இதனைத் தொடர்ந்து மழையின் காரணமாக ஏற்பட்ட மின்னல் கணபதியின் மாடுகளை தாக்கியது.

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் துறையூர் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (55). இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்வதுடன், கால்நடை வளர்ப்பும் செய்து வருகிறார். சம்பவத்தன்று தனக்கு சொந்தமான 2 பசு மாடு மற்றும் ஒரு கன்றுக்குட்டியினை தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் கட்டியிருந்தார்.

    இதனைத் தொடர்ந்து மழையின் காரணமாக ஏற்பட்ட மின்னல் கணபதியின் மாடுகளை தாக்கியது. இதில் காயம் அடைந்த 3 பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பீகாரில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
    • மின்னல் தாக்கி இறந்தோர் குடும்பங்களுக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் புர்னியா, அராரியா மாவட்டத்தில் தலா 4 பேரும், சோபால் மாவட்டத்தில் 3 பேர் என மொத்தம் 11 பேர் இடி, மின்னல் தாக்கி இறந்து விட்டனர் என முதல் மந்திரி அலுவலக்ம் தெரிவித்துள்ளது.

    மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல் மந்திரி நிதிஷ்குமார், அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், மோசமான வானிலை நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

    • கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
    • மின்னல் தாக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கியதில் 9 பேர் இறந்துவிட்டனர்.

    விதிஷா மாவட்டத்தில் 4 பேர், சாட்னா மாவட்டத்தில் 4 பேர், குணா மாவட்டத்தில் ஒருவர் என மொத்தம் 9 பேர் பலியாகினர். மின்னல் தாக்கி மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    காயமடைந்தவர்களுக்கு விரைவில் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்றும் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.
    • மின்னல் தாக்கி இறந்தோர் குடும்பங்களுக்கு முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்தார்.

    லக்னோ:

    உத்தர பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் பாண்டா, பதேபூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் மின்னல் தாக்கியதில் 14 பேர் இறந்து விட்டனர். 16 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    பாண்டா மாவட்டத்தில் 4 பேர், பதேபூர் 2 பேர், பல்ராம்பூர், புலந்த்சாகர், ரே பரேலி, அமேதி, கவுஷாம்பி, சுல்தான்பூர் மற்றும் சித்ரகூட் உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 14 பேர் பலியாகினர்.

    மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களுக்கு விரைவில் சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

    ×