பீகாரில் இடி, மின்னல் தாக்கி 11 பேர் பலி - தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

பீகாரில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.மின்னல் தாக்கி இறந்தோர் குடும்பங்களுக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.
மின்னல் தாக்கி பலி
மின்னல் தாக்கி பலி
Published on

பாட்னா:

பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதில் புர்னியா, அராரியா மாவட்டத்தில் தலா 4 பேரும், சோபால் மாவட்டத்தில் 3 பேர் என மொத்தம் 11 பேர் இடி, மின்னல் தாக்கி இறந்து விட்டனர் என முதல் மந்திரி அலுவலக்ம் தெரிவித்துள்ளது.

மின்னல் தாக்கி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல் மந்திரி நிதிஷ்குமார், அவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், மோசமான வானிலை நிலவுவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com