என் மலர்
நாகப்பட்டினம்
இ.கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் மயிலாடுதுறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒரே நாடு, ஒரே வரி, ஒரே மொழி என்று மத்திய அரசு கூறுவதை எப்படி ஏற்க முடியும். பசுபாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்களை கொலை செய்வது கண்டிக்கத்தக்கது என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார். காந்தியை பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர் மோடி. பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜனதா அறிவித்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவாயிற்று? மத்திய அரசால் தமிழக உரிமைகள், நலன்கள் அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு அதனை நிறைவேற்றவில்லை. விவசாய கடன்களை தள்ளுபடி செய்தால் பொருளாதாரம் பாதிக்கும் என்று மத்திய நிதி மந்திரி கூறுகிறார். ஆனால் பெரும் முதலாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன்கொடுத்து வட்டியை கூட வசூல் செய்யாமல் இருக்கிறார்கள். ஒரே நாடு ஒரே வரி என்று ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்துள்ளது. இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஜி.எஸ்.டி. வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றன. அதனை பற்றி மாநில அரசு கவலைப்படவில்லை. ஜி.எஸ்.டி. வரியை எதிர்க்கவும் இல்லை.
தமிழகத்தில் அ.தி.மு.க எத்தனை அணிகளாக இருந்தாலும் மோடியை ஆதரிப்பதில் ஒரே அணியாகத்தான் உள்ளனர். தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா போன்றவை விற்பனை செய்ய அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த அமைச்சர் சட்டப்படி எதையும் சந்திப்பேன் என்கிறார். நேர்மையான அமைச்சராக இருந்திருந்தால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் மழைநீரை சேமிக்க எந்த ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்படவில்லை. கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டவேண்டும் என்று இப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக போராடியும் எந்த நடவடிக்கையும் இல்லை. தமிழக மக்கள் மீது அக்கறை இல்லாத அரசாக தமிழக அரசு உள்ளது.
பழங்காலங்களில் உருவாக்கப்பட்ட ஏரி, குளங்களை தூர்வாரி மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்றில் தடுப்பணை கட்டுவதைவிட அதில் இருக்கும் மணலை கொள்ளை அடிக்கத்தான் ஆளும்கட்சியினர் ஆர்வம் காட்டுகின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஷேல் கியாஸ் எடுக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் அதனை இப்பகுதிகளில் மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
தரங்கம்பாடி:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள எருக்கட்டாஞ்சேரியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி லலிதா (60). இவர்களது மகன் விஜயபாலன். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். மனைவி பிரிந்து சென்று விட்டார்.
விஜயபாலன் சென்னை பூந்தமல்லியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்தார். லலிதா தொகுப்பு வீட்டை விற்று பணம் வைத்து இருப்பது விஜயபாலனுக்கு தெரியவந்தது.
நேற்று நள்ளிரவு தாய் வீட்டிற்கு சென்ற அவர் பணம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு லலிதா மறுக்க ஆத்திரம் அடைந்த விஜயபாலன் தாயின் நெஞ்சில் எட்டி உதைத்து உள்ளார்.
இதில் லலிதா மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து பொறையாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு சிங்காரவேலன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். கொலையாளி விஜயபாலனை போலீசார் கைது செய்தனர்.
தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் தரங்கம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே உள்ள நாலுவேதபதி தெற்கு பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து. விவசாயி. இவரது மனைவி குப்பம்மாள் (75). இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.
நேற்று மதியம் குப்பம்மாள் வீட்டின் அருகே உள்ள குட்டை ஓரத்தில் கீற்று பின்னிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது மகன் ராமச்சந்திரன் தாயிடம் ஏதோ கேட்க அவர்களுக்குள் தகராறு உருவானது.
இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன் அரிவாளால் குப்பம்மாளை வெட்டி குட்டையில் தள்ளி விட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயசங்கர் வேட்டைக்காரனிருப்பு போலீசாருக்கும், தாசில்தாருக்கும் தகவல் தெரிவித்தார்.
தகவலின் பேரில் டி.எஸ்.பி. பாலு, இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று குப்பம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான ராமச்சந்திரனை தேடி வருகிறார்கள்.
தாயை மகன் வெட்டி கொன்ற சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கள்ளிமேடு கிராமத்தில் வசிப்பவர் லெட்சுமணன். இவரது மனைவி ரெத்தினம் (வயது80). இவர் சம்பவத்தன்று வீட்டுவாசலில் நின்றுகொண்டிருந்தார்.
அப்போது நாகை -வேதாரண்யம் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த கந்தசாமி மகன் குருநாதன் (32) என்பவர் ரெத்தினம் மீது மோதினார்.
இதில் ரெத்தினம் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ரெத்தினத்தின் மகன் சம்பத்குமார் கொடுத்த புகாரின்பேரில் வேட்டைக்காரனிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோடியக்காடு ஆதிவாசி காலனியைச் சேர்ந்த வரதராஜன் (வயது32), சாமிநாதன் (55) வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜகிளி (36) மற்றும் மற்றொரு வாலிபர். இவர்கள் 4 பேரும் நேற்று கோடியக்காட்டில் இருந்து சுமார் 55 கிலோ கஞ்சாவை படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துச்சென்றனர்.
இது குறித்து வேதாரண்யம் டி.எஸ்.பி. பாலுவிற்கு கிடைத்த ரகசிய தகவலின்படி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோடியக்காடு வடக்குத் தெருவைச் சேர்ந்த ஜெயினுலாதீன் என்பவருக்கு சொந்தமான புகையிலை கொல்லையில் கஞ்சா மூட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே அங்கு சென்று போலீசார் கஞ்சா வைத்திருந்த மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து இலங்கைக்கு கடத்த முயன்ற வரதராஜன், ராஜகிளி, சாமிநாதன் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையிலிருந்து கஞ்சாவை ஏற்றி செல்ல வந்த படகு எங்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்றும் அந்த படகில் தங்கம் வந்ததா என்றும் போலீசாரும், உளவுத்துறை பிரிவினரும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இலங்கைக்கு கடத்த இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் கோடியக்கரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சீர்காழி:
சீர்காழி அடுத்த பழைய பாளையம் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ஞானசுந்தரி (வயது 57). மீன், கருவாடு விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 25-ந் தேதி இரவு பழையாறு பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக ஞானசுந்தரி மீது மோதியது. இதில் பலத்தகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து புதுப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவர் கொள்ளிடம் அலக்குடி கிராமம் நானல் படுகையை சேர்ந்த தமிழ்வானன் (22). என்பவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை மாவட்டம், மணல்மேடு அருகே தலை ஞாயிறு கிராமத்தில் என்.பி.கே.ஆர்.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நிர்வாக சீர்கேட்டின் காரணமாக சர்க்கரை ஆலை சரிவர இயங்காமல் உள்ளது. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கரும்புக்கான தொகையை ஆலை நிர்வாகத்தினர் வழங்கவில்லை.
இதுபோன்ற சூழ்நிலையால் இந்த ஆண்டு கூட்டுறவு சர்க்கரை ஆலை முற்றிலும் இயக்கப்படாமல் முடங்கி கிடக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி கரும்பு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கரும்புக்கான நிலுவை தொகை வழங்காததை கண்டித்து கடந்த 6-ந் தேதியில் இருந்து கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் காசிநாதன் தலைமையில் விவசாயிகள், கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் காத்திருப்பு போராட்டம், கஞ்சி தொட்டி அமைத்து போராட்டம், அரை நிர்வாணமாக வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம், எலியை வாயில் கவ்வி போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு 20-க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் அரை நிர்வாணமாக ஒற்றை காலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காலம் தாழ்த்தாமல் கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் 110 விதியின் கீழ் சர்க்கரை ஆலையின் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை உடனடியாக வழங்க வேண்டும், கரும்புக்கான நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
வேதாரண்யம்:
திருத்துறைப்பூண்டியில் வசித்து வருபவர் முகமது நிஜாமுதீன் (வயது 43) இவரது மனைவி சேத்தங்குடியில் வசித்து வருகிறார்.முகமது நிஜாமுதீன் தனக்கு சொந்தமான காரில் தோப்பு துறையில் உள்ள சகோதரி வீட்டுக்கு நேற்று வந்தார். இதுபற்றி அறிந்த அவரது மகன்கள் சருக்கன் அகமது, உஸ்மான் அகமது ஆகியோர் சம்பவ இடம் வந்து சொத்து தொடர்பாக பேசி தகராறு செய்தனர்.
அப்போது அவர்கள் அவதூறாக பேசி முகமது நிஜாமுதீன் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.14 ஆயிரம் ஆகும்.
இதுபற்றி முகமது நிஜாமுதீன் வேதாரண்யம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் கண்ணாடியை உடைத்த அவரது மகன்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மணல்மேடு அருகே வில்லிய நல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பழனி இவருடைய மகள் பிரீத்திநிஷா (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி படித்து வந்தார். இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வில் பிரீத்திநிஷா தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். நாகை மாவட்ட மீனவர்களும் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றனர். கடந்த 20-ந்தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன.
நாகை அக்கறைப் பேட்டையை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்வம், சங்கர், செந்தில், ராஜசேகர், முகேஷ், ரமேஷ், சக்திவேல் மற்றும் கல்லார் பகுதியை சேர்ந்த ஒரு மீனவர் உள்பட 8 பேர் கடந்த 20-ந் தேதி வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென் கிழக்கே ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தனர். அப்போது அவர்கள் இந்திய எல்லையை தாண்டி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு 10 மணி அளவில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லையை தாண்டி வந்து விட்டதால் அவர்களை சிறைபிடித்து இலங்கை காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்தனர்.

பின்னர் அவர்களை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை வரும் ஜூலை 7-ம் தேதிவரை சிறையில் அடைக்குமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து எல்லை கடந்துவந்து மீன் பிடித்ததாக இலங்கை கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டில் உள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டம், செம்பனார்கோவில் அருகே இளையாளூர் ஊராட்சி வடகரை கிராமத்தில் 1984-ம் ஆண்டு கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி உள்ளது. இங்கு வடகரை, வாடாகுடி, புளிகண்டமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். இந்த நிலையில் பள்ளியில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை படிப்படியாக குறைந்து, தற்போது அந்த பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் கழிவறை, சமையலறை, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை வகுப்பறை கட்டிடங்கள், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் முறையாக செய்து இருந்தும் தங்களது குழந்தைகளை மேற்கண்ட பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் தயங்குகின்றனர். அதற்கு மாற்றாக பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை மெட்ரிக் பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். இதனால் அரசு தொடக்க பள்ளியில் படிப்படியாக மாணவர் சேர்க்கை குறைந்து தற்போது மகாஸ்ரீ என்ற மாணவி மட்டும் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு பாடம் சொல்லி கொடுக்கும் பணியையும், பள்ளியை பராமரிக்கும் பணிகளையும் தலைமை ஆசிரியர் மகாலட்சுமி ஒருவரே பார்த்து வருகிறார்.
இதுகுறித்து அந்தபகுதி மக்கள் கூறுகையில், கடந்த ஆண்டு இந்த பள்ளியில் படித்த 15 மாணவர்கள் மெட்ரிக் பள்ளியில் சேர்ந்து விட்டனர். இதனால் பள்ளியில் தற்போது ஒரே ஒரு மாணவி மட்டும் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளியில் மேலாண்மைக்குழு இயங்கி வந்தாலும் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கான எந்தவித முயற்சியும் அந்த குழுவினர் எடுக்கவில்லை. வடகரை போன்ற ஏராளமான உள்கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகள் மூடுவிழாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனை தவிர்க்க கிராமங்களில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணிகளை நடத்துவதோடு, பெற்றோர்களிடம் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்ப்பது குறித்த விழிப்புணர்வையும் அரசு ஏற்படுத்த வேண்டும். எனவே, உடனடியாக வடகரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.
மேலும் இதுகுறித்து உதவி தொடக்க கல்வி அலுவலர் சீனிவாசனிடம் கேட்டபோது, ஒரே ஒரு மாணவி படிப்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்று கூறினார்.
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிந்து சில நாட்களே ஆன நிலையில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். நாகை மாவட்ட மீனவர்களும் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றனர். கடந்த 20-ந் தேதி 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க சென்றன.
நாகை அக்கறைப் பேட்டையை சேர்ந்த வடிவேல் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் செல்வம், சங்கர், செந்தில், ராஜசேகர், முகேஷ், ரமேஷ், சக்திவேல் மற்றும் கல்லார் பகுதியை சேர்ந்த ஒரு மீனவர் உள்பட 8 பேர் கடந்த 20-ந் தேதி வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென் கிழக்கே ஆழ்கடலில் சென்று மீன்பிடித்தனர். அப்போது அவர்கள் இந்திய எல்லையை தாண்டி சென்று விட்டதாக கூறப்படுகிறது.
நேற்று இரவு 10 மணி அளவில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் விசைப்படகில் எல்லையை தாண்டி வந்து விட்டதால் அவர்களை சிறைபிடித்து இலங்கை காங்கேசன் துறைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இது பற்றி இன்று காலை தெரியவந்ததும், சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் கடலோர காவல் படை போலீசாரை சந்தித்து சிறை பிடிக்கப்பட்ட 8 பேரையும் மீட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
மீன்பிடித் தொழில் தொடங்கிய சில நாட்களிலேயே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றதால் நாகை மீனவர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து நாகை மீனவர்களை மீட்க வேண்டும். இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சிறை பிடிக்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறினர்.
ஏற்கனவே தமிழக மீனவர்களின் பல விசைப்படகுகளை இலங்கை கடற்படை கைப்பற்றி வைத்துள்ளது. மீனவர்களை விடுவித்த போதிலும் விசைப்படகுகளை வழங்க மறுத்து வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இலங்கை கடற்படைக்கு அஞ்சும் நிலையில் மீன்பிடிக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில நேரங்கள் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல், மீன்களை பறித்து செல்லுதல், மீனவர்களை சுட்டுக் கொல்லுதல் போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடல் சீற்றங்களிலும் மீனவர்கள் சிக்கி தவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.
எனவே தமிழக மீனவர்களின் பாதுகாப்பிற்கு மத்திய, மாநில அரசுகள் உத்தரவாதம் அளிக்கும் வகையில் தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது அனைத்து மீனவர்களின் கோரிக்கையாக உள்ளது.






