search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அ.தி.மு.க.வினர்"

    • சோழவந்தான், அலங்காநல்லூரில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • உசிலம்பட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.

    உசிலம்பட்டி

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை முன்னிட்டு உசிலம்பட்டி நகர செயலாளர் பூமா கே.ஆர்.ராஜா தலைமையில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர். பி.உதயகுமார் பொதுமக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

    மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜ், நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் லட்சுமணன், உசிலம்பட்டி மாவட்ட கவுன்சிலர் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுதாகரன், இளைஞரணி மாநிலதுணைச் செயலாளர் போஸ் சிவசுப்பிரமணியன்,

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மகேந்திர பாண்டியன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா, பவளக்கொடி ராசு காளை, ரகு, சசிகுமார், பெருமாள், டி.ஆர். பால்பாண்டி, ராமமூர்த்தி மற்றும் வார்டு நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் முன்னிலை வகித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் வருவாய்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

    இதில் யூனியன் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலாஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், சோழவந்தான் உன்னால் பேரூராட்சி தலைவர் முருகேசன், நகரசெயலாளர் முருகேசன், நிர்வாகிகள் முனியாண்டி, கேபிள்மணி, தியாகு, ராமன், கண்ணன், மணிகண்டன், வார்டு கவுன்சிலர்கள் ரேகாராமச்சந்தி ரன், சண்முக பாண்டிய ராஜா, வசந்தி கணேசன், சரண்யாகண்ணன், டீக்கடை கணேசன், மருத்துவர் அணி கருப்பையா, பேட்டை மாரி மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கிளை நிர்வாகிகள், சோழவந்தான் பேரூர் வார்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒன்றிய கவுன்சிலர் தங்கபாண்டியன் நன்றி கூறினார்.

    மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் குமாரம் பிரிவில் முன்னாள் அமைச் சரும், மாவட்ட செயலாளரு மான ஆர்.பி.உதயகுமார் வழிகாட்டுதல்படி ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க . சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க . சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி மாவட்டத்தில் சானல் தூர் வாரப்படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்லாமல் இருப்பதை கண்டித்தும், மின்சார கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்தும், தடிக்காரன் கோணத்தில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கடை கட்டுவதை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    குளம் தூர்வாருதலில் முறைகேடு, சாலை பணிகளில் முறைகேடு உள்ளிட்டவற்றுக்கும் ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் சானல்கள் தூர்வாரப்ப டாமல் உள்ளதால் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால் நெல் பயிர்கள் கருகும் நிலையில் இருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் 40 அல்லது 40 அடிக்கு மேல் தண்ணீர் இருந்தால் தான் ராதாபுரம் தாலுகாவுக்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் தற்போது 38 அடி தான் தண்ணீர் உள்ளது. எனினும் ராதாபுரம் தாலுகாவுக்கு தண்ணீர் திறந்து இருக்கிறார்கள். இதனால் குமரி மாவட்ட மக்கள் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் சாலைகள் அமைப்பதற்கு 18 சதவீதம் கமிஷன் கேட்பதாக கான்ட்ராக்டர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இப்படி கேட்கும் போது எப்படி தரமான சாலைகள் அமைக்க முடியும்.

    தி.மு.க ஆட்சி ஊழல் ஆட்சியாக உள்ளது. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தெற்கு பகுதி செயலாளர் முருகேஸ்வரன் வர வேற்றார். அமைப்புச் செயலாளர் கே.டி.பச்சைமால், மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாணவரணி செயலாளர் மனோகரன், மேற்கு மாவட்ட அவைத் தலைவர் சிவகுற்றாலம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் கிருஷ்ண தாஸ், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவ செல்வராஜன், வக்கீல் பிரிவு துணை செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியண்ட் தாஸ், சக்கீர் உசேன், குளச்சல் நகர செயலாளர் ஆண்ட்ரோஸ், குளச்சல் சட்டமன்ற தொகுதி முன்னாள் செயலாளர் ஆறுமுகராஜா, மாவட்ட மாணவரணி முன்னாள் செயலாளர் ரவிந்திரவர்சன், தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜாராம், ஆரல்வாய் மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், மாவட்ட இணைச்செயலாளர் சாந்தினி பகவதியப்பன், துணைச் செயலாளர் பார்வதி, மாவட்ட பொருளாளர் திலக், பகுதி செயலாளர்கள் ஜெய கோபால், ஜெவின் விசு, ஒன்றிய செயலாளர்கள் ஜெசீம், ஜீன்ஸ், ஜெயசுதர்சன், பொன் சுந்தரநாத், முன்னாள் நகரச் செயலாளர் சந்துரு, மாநகராட்சி கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், கோபாலசுப்பிரமணியன், சேகர், அனிதா சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர் சகாயராஜ் மற்றும் நிர்வாகிகள் ரபீக், வெங்கடேசன், ரெயிலடி மாதவன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவுன்சிலர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்.

    ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை களை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
    • 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப் பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது மற்றும் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தது தொடர்பாக தமிழக அரசை கண்டித்து 29-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு அவைத்தலைவர் சேவியர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்ட் தாஸ், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன்,மாநகராட்சி கவுன்சிலர்கள் அக் ஷயா கண்ணன், ஸ்ரீலிஜா, அண்ணா தொழிற்சங்க செயலாளர் சுகுமாரன், ஒன்றிய செயலாளர்கள் ஜெஸீம், பொன் சுந்தர்நாத், இளையரணி செயலாளர் ஜெயசீலன், மாநகர முன்னாள் செயலாளர் சந்துரு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டுகளை தெரிவிப்பது, குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க.வில் அதிக ளவில் உறுப்பி னர்களை சேர்க்க வேண்டும், தமிழகத்தில் கள்ளச்சா ராயத்தை ஊக்குவித்த தி.மு.க. அரசை கண்டிப்பது, நடைபெற உள்ள நாடாளு மன்ற தேர்தலில் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டும் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வது, வருகிற 29-ந்தேதி நடைபெறவிருக்கும் ஆர்ப் பாட்டத்தில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • சிவகங்கையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது செல்லும் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

    சிவகங்கை

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது செல்லும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

    இதையடுத்து சிவகங்கையில் அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜா ஏற்பாட்டில் பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, அவைத்தலைவர் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், இணை செயலாளர் மோசஸ், கூட்டுறவு சங்க தலைவர்கள் சசிக்குமார், பாபு, நகர நிர்வாகிகள் மோகன், கேபி.முருகன், அண்ணா தொழிற்சங்கம் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்குடியில் மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • 5 விளக்கு எம்.ஜி.ஆர் சிலை அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    காரைக்குடி

    தி.மு.க. அரசின் சொத்துவரி, மின்கட்டணம், பால்விலை உயர்வை கண்டித்து காரைக்குடி நகர அ.தி.மு.க. சார்பில் 5 விளக்கு எம்.ஜி.ஆர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் மெய்யப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சேர்மனுமான கற்பகம் இளங்கோ, மாவட்ட அவைத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.

    இதில் பொதுக்குழு உறுப்பினர் புலவர் பழனியப்பன், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், மாவட்ட பேரவை ஊரவயல் ராமு, மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவானந்தம் போஸ், மாவட்ட மகளிரணி தலைவி டாக்டர் சித்ராதேவி, மாவட்ட மகளிரணி இணை செயலாளர் சோபியா பிளாரன்ஸ், கவுன்சிலர்கள் சத்குரு தேவன், பிரகாஷ், குருபாலு, ராம்குமார், ராதா, கனகவள்ளி, நகர மகளிரணி செயலாளர் சுலோசனா, மாவட்ட பேரவை துணை செயலாளர் இயல் தாகூர், வட்ட செயலாளர்கள் இலைக்கடை சரவணன், விஜய், வழக்கறிஞர் அணி காளிதாஸ், சண்முகமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று கோஷங்கள் எழுப்பினர். கவுன்சிலர் அமுதா நன்றி கூறினார்.

    • இதையொட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.

    கோபி:

    தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.முக. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதையொட்டி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் இன்று காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசினார்.

    இதில் மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, ஆகியவற்றை கண்டித்தும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் அறிவிக்கப்பட்ட குடும்ப த்தலைவிக்கானரூ.1000, சிலிண்டருக்கு மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறை வேற்றாததை கண்டி த்தும் கோஷம் எழுப்ப ப்பட்டது.

    தாலிக்கு தங்கம், பெ ண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்தாததை கண்டித்தும், அரசு ஊழியருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றாததை கண்டித்தும் இதில் கலந்து கொண்டவர்கள் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

    இதில் பவானிசாகர் பண்ணாரி எம்.எல்.ஏ, கோபி நகர அ.தி.மு.க. செய லாளர் பிரினியோ கணேஷ், நம்பியூர் ஒன்றிய செயலாளர் தம்பி சுப்பிர மணியன் மற்றும் முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூராட்சி, கிளை கழக, நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதையொட்டி எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பலூன்கள் ஆர்ப்பாட்டத்தில் பறக்க விடப்பட்டன. மேலும் அ.தி.மு.க.வினர் பதாகைகளை ஏந்தி கொண்டு மின் கட்டண உயர்வை கண்டித்து தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.

    தலைவாசலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    ஆத்தூர்:

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் கூட்டத்தை முடித்து விட்டு இன்று தனது சொந்த ஊரான சேலத்திற்கு கார் மூலம் வந்தார்.

    சேலம் மாவட்டம் தலைவாசல் கூட்டுரோடு டோல்கேட் அருகே அவருக்கு அ.தி.மு.க.வினர் கெங்கவல்லி எம்.எல்.ஏ. நல்லதம்பி தலைமையில் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள்.

    வரவேற்பு நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் தலைவாசல் ராமசாமி, பெத்தநாயக்கன்பாளையம் வடக்கு மோகன், கெங்கவல்லி ராஜா, ரமேஷ், ஆத்தூர் ஒன்றிய செயலாளர் வி.பி.சேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் வாசுதேவன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் அருண்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    ×