அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சோழவந்தான், அலங்காநல்லூரில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். உசிலம்பட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்துள்ளது முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டபோது எடுத்த படம்.
இந்திய தேர்தல் ஆணையம் அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரித்துள்ளது முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் இனிப்பு வழங்கப்பட்டபோது எடுத்த படம்.
Published on

உசிலம்பட்டி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை முன்னிட்டு உசிலம்பட்டி நகர செயலாளர் பூமா கே.ஆர்.ராஜா தலைமையில் முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆர். பி.உதயகுமார் பொதுமக்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜ், நகர அம்மா பேரவை செயலாளர் வழக்கறிஞர் லட்சுமணன், உசிலம்பட்டி மாவட்ட கவுன்சிலர் பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுதாகரன், இளைஞரணி மாநிலதுணைச் செயலாளர் போஸ் சிவசுப்பிரமணியன்,

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட மாணவரணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மகேந்திர பாண்டியன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம்.வி.பி.ராஜா, பவளக்கொடி ராசு காளை, ரகு, சசிகுமார், பெருமாள், டி.ஆர். பால்பாண்டி, ராமமூர்த்தி மற்றும் வார்டு நிர்வாகிகள் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

இதேபோல் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்தின் சார்பில் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் முன்னிலை வகித்தார். மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் வருவாய்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

இதில் யூனியன் தலைவர் மகாலட்சுமி ராஜேஷ் கண்ணா, மாவட்ட கவுன்சிலர் அகிலாஜெயக்குமார், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், சோழவந்தான் உன்னால் பேரூராட்சி தலைவர் முருகேசன், நகரசெயலாளர் முருகேசன், நிர்வாகிகள் முனியாண்டி, கேபிள்மணி, தியாகு, ராமன், கண்ணன், மணிகண்டன், வார்டு கவுன்சிலர்கள் ரேகாராமச்சந்தி ரன், சண்முக பாண்டிய ராஜா, வசந்தி கணேசன், சரண்யாகண்ணன், டீக்கடை கணேசன், மருத்துவர் அணி கருப்பையா, பேட்டை மாரி மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கிளை நிர்வாகிகள், சோழவந்தான் பேரூர் வார்டு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒன்றிய கவுன்சிலர் தங்கபாண்டியன் நன்றி கூறினார்.

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் குமாரம் பிரிவில் முன்னாள் அமைச் சரும், மாவட்ட செயலாளரு மான ஆர்.பி.உதயகுமார் வழிகாட்டுதல்படி ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com