சிவகங்கையில் இனிப்பு வழங்கிய அ.தி.மு.க.வினர்

சிவகங்கையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது செல்லும் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.
சிவகங்கையில் இனிப்பு வழங்கிய அ.தி.மு.க.வினர்
Published on

சிவகங்கை

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது செல்லும், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

இதையடுத்து சிவகங்கையில் அ.தி.மு.க. நகர செயலாளர் ராஜா ஏற்பாட்டில் பஸ்நிலையம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, அவைத்தலைவர் பாண்டி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் இளங்கோவன், பாசறை மாவட்ட பொருளாளர் சரவணன், இணை செயலாளர் மோசஸ், கூட்டுறவு சங்க தலைவர்கள் சசிக்குமார், பாபு, நகர நிர்வாகிகள் மோகன், கேபி.முருகன், அண்ணா தொழிற்சங்கம் சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com