search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி தற்கொலை"

    • நாகலெட்சுமி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    நெல்லை:

    தென்காசி பண்பொழியை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மகள் நாகலெட்சுமி (வயது18).

    இவர் நெல்லையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இதனால் கல்லூரி வளாகத்தில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கி இருந்து நாகலெட்சுமி படித்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்ற நாகலெட்சுமி, விடுதி அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை அந்த அறையில் தங்கியிருந்த சக தோழிகள் இன்று காலை எழுந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் கல்லூரி விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து பாளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக கல்லூரிக்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் தலைமையிலான போலீசார், நாகலெட்சுமி உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    சமீபத்தில் செமஸ்டர் தேர்வு முடிவு வெளியான நிலையில் அதில் நாகலெட்சுமி சில பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியில் யாரிடமும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் தான் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

    இதனால் தேர்ச்சி பெறாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • ஜெயஸ்ரீ உள்ளூரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே தனது தோழிகளுடன் படிக்க வேண்டும் என விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.
    • வீட்டில் விஜயஸ்ரீ தனியாக விட்டுவிட்டு தாய் முத்துலட்சுமி வெளியில் சென்றுள்ளார்.

    திருவாரூர்:

    திருவாரூர் ஒன்றியம் வைப்பூர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன். இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது மனைவி முத்துலட்சுமி. இந்த தம்பதியின் மகள் விஜயஸ்ரீ (வயது 13). இவர் வைப்பூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது பள்ளிகளில் அடுத்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை மார்ச் மாதமே நடந்து வருகிறது. அதனால் விஜயஸ்ரீயை திருவாரூரில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பில் சேர்க்க திட்டமிட்டு விஜயஸ்ரீயை நேற்று அப்பள்ளிக்கு அவரது தாயார் முத்துலட்சுமி அழைத்துச் சென்றார்.

    ஆனால் ஜெயஸ்ரீ உள்ளூரில் உள்ள பள்ளிக்கூடத்திலேயே தனது தோழிகளுடன் படிக்க வேண்டும் என விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் திருவாரூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விவரங்களை கொடுத்து சேர்க்கை படிவத்தில் கையெழுத்துட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி உள்ளனர்.

    வீட்டில் விஜயஸ்ரீ தனியாக விட்டுவிட்டு தாய் முத்துலட்சுமி வெளியில் சென்றுள்ளார்.

    தனது விருப்பத்திற்கு மாறாக தோழிகளை பிரிந்து வெளியூர் சென்று படிக்க வேண்டியுள்ளது என விஜயஸ்ரீ மன வேதனை அடைந்து வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று விட்டு திரும்பிய முத்துலட்சுமி மகள் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் வைப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவி விஜயஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வைப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தோழிகளை பிரிவதால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பாட்டி ராஜேஸ்வரி பச்சபெருமாள் பட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
    • உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்ததன் பேரில் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    உப்பிலியபுரம்:

    உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சை பெருமாள் பட்டி தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்த சிவகுமார்-மேகலா தம்பதியினரின் ஒரே மகள் மெர்சி (வயது 14). தம்பதியர் இருவரும் பணி நிமித்தம் காரணமாக வெளியூரில் உள்ளனர்.

    இதனால் மெர்சி, உறவினரான பாட்டி ராஜேஸ்வரி உடன் தங்கி, பச்ச பெருமாள்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பாட்டி ராஜேஸ்வரி பச்சபெருமாள் பட்டியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் இரவு பள்ளிப் பணிகளை முடித்து ராஜேஸ்வரி வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டில் இருந்த மெர்சி தூக்கு போட்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு அலறினார். இதுபற்றி உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவலின் பேரில் நேற்று நள்ளிரவு துறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ் குமரேசன், செபாஸ்டின் சந்தியாகு போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வீட்டில் தனியாக இருந்த மெர்சி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.

    தொடர்ந்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்ததன் பேரில் மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • பிரக்ருதி ஷெட்டி, கல்லூரியின் தங்கும் விடுதியில் தங்கியிருந்து மருத்துவம் படித்து வந்தார்.
    • பிரக்ருதி ஷெட்டி தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனையிட்டனர்.

    மங்களூரு:

    கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் குந்திகான் பகுதியில் ஏ.ஜே. மருத்துவ கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் பிரக்ருதி ஷெட்டி (வயது 20) என்பவர் எம்.பி.பி.எஸ். 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது சொந்த ஊர் பெலகாவி மாவட்டம் அதானி ஆகும். இவரது தந்தையும் டாக்டராக பணியாற்றி வருகிறார்.

    பிரக்ருதி ஷெட்டி, கல்லூரியின் தங்கும் விடுதியில் தங்கியிருந்து மருத்துவம் படித்து வந்தார். அவரது அறை முதல் தளத்தில் உள்ளது. இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் பிரக்ருதி ஷெட்டி தங்கும் விடுதியின் 6-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    நேற்று காலை இதை அறிந்த சக மாணவிகள் விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள், தற்கொலை செய்த மாணவி பிரக்ருதி ஷெட்டியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில், மருத்துவ மாணவி பிரக்ருதி ஷெட்டி அதிகாலை 3 மணி அளவில் தான் தங்கியிருந்த முதல் தளத்தின் அறையில் இருந்து தங்கும் விடுதியின் 6-வது மாடிக்கு சென்றுள்ளார்.

    அங்குள்ள தனது தோழி ஒருவரின் அறை முன்பு செல்போன், காலணியை கழற்றிவிட்டுவிட்டு, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

    இதையடுத்து பிரக்ருதி ஷெட்டி தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனையிட்டனர். அங்கு தற்கொலை செய்வதற்கு முன்பு பிரக்ருதி ஷெட்டி தற்கொலைக்கான காரணம் பற்றி உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி எடுத்துக்கொண்டனர். அந்த கடிதத்தில் பிரக்ருதி ஷெட்டி கூறியிருப்பதாவது:-

    எனது உடல் மிகவும் பருமனாக உள்ளது. நான் எம்.பி.பி.எஸ். படிக்க விரும்பினேன். ஆனால் எனது உடல் பருமனாக இருந்ததால் நான் பல பிரச்சினைகளை எதிர்கொண்டேன். மேலும் உடல் பருமன் காரணமாக நான் அழகாக இல்லை. உடல் எடையை குறைக்க கடுமையான பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.

    மேலும் அடிக்கடி உடல்நலமும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்து நான் தற்கொலை முடிவை தேடிக்கொள்கிறேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • ஜனனி நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
    • ஜனனி வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    உப்பிலியபுரம்:

    உப்பிலியபுரம் ஒன்றியம் தென்புறநாடு ஊராட்சி பகுதியில் உள்ள கானப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில், விவசாயி. இவரது மகள் ஜனனி (வயது 18). இவர் நாமக்கல் அரசு கலைக்கல்லூரியில் விடுதியில் தங்கி பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    நேற்று மாலை வீட்டிற்கு வந்த ஜனனி வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஹாலில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாத்தா மாலை வேளையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது ஜனனி தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் செபாஷ்டின் சந்தியாகு போலீசாருடன் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஜனனி தற்கொலைக்கு காரணம் என்ன? கல்லூரியில் ஏதும் பிரச்சினையா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • மகேஸ்வரியின் தாய்மாமா மாரிச்சாமி என்பவர் வீட்டின் கதவு பூட்டி கிடந்ததால் கதவை தட்டியுள்ளார்.
    • கதவு திறக்காததால் அதனை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் மகேஸ்வரி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி முத்தையாபுரம் கிருஷ்ணா நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மகள் மகேஸ்வரி (வயது 22).

    இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பி.எஸ்.சி. நர்சிங் 4-வது ஆண்டு பயின்று வந்தார். மேலும் அதே மருத்துவமனையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் மகேஸ்வரி நேற்று இரவு 7 மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என கூறி வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அங்கு வந்த மகேஸ்வரியின் தாய்மாமா மாரிச்சாமி என்பவர் வீட்டின் கதவு பூட்டி கிடந்ததால் கதவை தட்டியுள்ளார். கதவு திறக்காததால் அதனை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில் மகேஸ்வரி தூக்குப்போட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்த தகவலின் பேரில் முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மகேஸ்வரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர்.
    • அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள இரவார் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, விவசாயி. இவரது மகள் பைரவி (18).

    இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். தொடர்ந்து மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுதினார். ஆனால் அதில் குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அவர் கடந்த வாரம் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார்.

    பின்னர் மருந்து குடித்ததை வீட்டில் கூறாமல் வயிற்று வலி என்று பெற்றோரிடம் கூறி வந்தார். இதையடுத்து அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது .

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மதியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர். இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

    • விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் டிரைவர், மாணவி தற்கொலை செய்து கொண்டனர்.
    • இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள எச்சநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சண்முகத்தாய். இவரது மகன் கதிரேசன் (24), டிரைவர். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். தனக்கு வாழ விருப்பமில்லை என்றும், தான் சாகப்போவதாகவும் அடிக்கடி தாயிடம் கூறிவந்தார். சம்பவத்தன்று வெளியே செல்வதற்காக தாயிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் சண்முகத்தாய் வெளியே சென்று விட்டு திரும்பி வந்த போது கதிரேசன் தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். இதுகுறித்து சூலக்கரை போலீசில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடந்து வருகிறது.

    சிவகாசி அரசிகொல்லன் தெருவை சேர்ந்தவர் விமலாதேவி.இவரது மகள் கவுசிகா. அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று தோழிக்கு பரிசு பொருள் வாங்குவதற்காக கடைக்கு செல்ல வேண்டும் என கவுசிகா தாயிடம் கூறியுள்ளார். அப்போது அருகில் உள்ள கடையில் மளிகை பொருள் வாங்கி வருமாறு கவுசிகாவிடம் அவர் கூறியுள்ளார். ஆனால் கவுசிகா கோபித்துக் கொண்டு மறுத்துவிட்டார். இதனால் விமலாதேவி கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் உள்அறையில் கவுசிகா தூக்கில் தொங்கியபடி இருந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அறிக்கை
    • உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் போலீசார் மீது நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும்.

    மார்த்தாண்டம்:

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பினுலால் சிங் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- குலசேகரம் பகுதியில் அமைந்துள்ள மூகாம்பிகா மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வந்த சுகிர்தா என்ற மாணவி தற்கொலை செய்வதற்கு தூண்டிய டாக்டர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இதற்கு காரணமான டாக்டர்களை போலீசார் கைது செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தி வரு கிறது. கல்லூரி நிர்வாகம், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு போதிய விடுப்பு கொடுத்தும், போதிய கவுன்சிலிங் கொடுத்தும் வரும் காலங்களில் இத்த கைய சம்பவங்கள் நடை பெறுவதை தவிர்க்க வழிவகுக்க வேண்டும். மேலும் போலீசார் குற்றம் செய்தவர்கள் தப்பிக்காத அளவுக்கு பாரபட்சம் இன்றி உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களிடம் போலீசார் மீது நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாணவி சுஜிர்தாவின் அறையில் இருந்து அவர் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.
    • செல்போன் மூலம் மாணவி யார், யாரிடம் பேசி உள்ளார், வாட்ஸ் ஆப் மெசேஜ் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறார்.

    திருவட்டார்:

    கன்னியாகுமரி மாவட் டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுநிலை 2-ம் ஆண்டு படித்த பயிற்சி டாக்டர் சுஜிர்தா கடந்த 6-ந் தேதி கல்லூரி விடுதி அறையில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சி டாக்டரின் தந்தை தூத்துக்குடி வியாபாரி சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தினர். மாணவி சுஜிர்தாவின் அறையில் இருந்து அவர் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

    அந்த கடிதத்தில் 3 டாக்டர்களின் பெயர்களை எழுதி அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. முதலில் கல்லூரியின் போராசிரியர் டாக்டர் பரமசிவம், பாலியல் தொந்தரவு செய்து உடல் ரீதியாகவும் மண ரீதியாகவும் தொந்தரவு செய்தாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் முதுகலை பயிற்சி டாக்டர்கள் ஷரிஷ், பிரித்தி ஆகியோரும் மன ரீதியாக தன்னை துன்புறுத்தியதாக குறிப்பிட்டு உள்ளார். அதன் அடிப்படையில் 3 பேர் மீதும், இந்திய குற்றவியல் சட்டம் 306 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், தக்கலை துணை சூப்பிரண்டு உதயசூரியன், குலசேகரம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜானகி மற்றும் போலீசார் கடந்த 3 நாட்களாக ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் சுஜிர்தா கடிதத்தில் குறிப்பிட்டுள்ள 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் புகார் கூறப்பட்டுள்ள பயிற்சி டாக்டர் ஹரிஸ், இங்கு இல்லை என்பதும் அவர் தனது சொந்த ஊரான சென்னையில் இருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. அவரது செல்போனுக்கு போலீசார் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என பதில் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்த தனிப்படையினர் சென்னை சென்றுள்ளனர்.

    இதற்கிடையில் நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஸ்ரீமூகாம்பிகா மருத்துவக்கல்லூரியில் பேராசிரியர் பரமசிவம், பயிற்சி டாக்டர் பிரித்தி ஆகியோரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேலும் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி நியமிக்கப்படுள்ளார். அவர் மூகாம்பிகா மருத்துவ கல்லூரிக்கு சென்று மாணவி தங்கி இருந்த அறை அவரின் செல்போன், லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி தீவிர விசாரனை நடத்தி வருகிறார். செல்போன் மூலம் மாணவி யார், யாரிடம் பேசி உள்ளார், வாட்ஸ் ஆப் மெசேஜ் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகிறார்

    மேலும் கல்லூரி மாணவி தற்கொலை சம்பந்தமாக யாராவது தகவல் தெரிவிக்க விரும்பினால் 9498195077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சசிகாஞ்சனா நேற்று முன்தினம் திடீரென மாயமானார்.
    • மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விளாத்திகுளம்:

    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கோடங்கிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராசையா. இவரது மகள் சசி காஞ்சனா (வயது19). கல்லூரி 2-ம் ஆண்டு மாணவி.

    இந்நிலையில் சசிகாஞ்சனா நேற்று முன்தினம் திடீரென மாயமானார். பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையே நேற்று வீட்டின் அருகே உள்ள மாட்டு தொழுவத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து தகலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சங்கரலிங்கபுரம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சசி காஞ்சனா ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், இதனால் அவரது பெற்றோர் மாணவியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவி மனமுடைந்து காணப்பட்டுள்ளதும் தெரியவந்தது.

    எனவே அதன் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷாலினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கூடச்சேரி அருகே மேலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (41). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மகள் ஷாலினி (13). இவர் வசந்தபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று தேர்வில் மதிப்பெண் குறைந்துவிட்டதாக குணசேகரன் மனைவி தீபா மகள் ஷாலினியை திட்டியுள்ளார்.

    இதனால் மனமுடைந்த ஷாலினி பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார்.

    அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்த தீபா ஷாலினி தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷாலினியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷாலினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு பெற்றோர் கதறி துடித்தனர்.

    இதுகுறித்து குணசேகரன் நல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×