search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kovilpalayam"

    • என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
    • இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை :

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள கோடனூரை சேர்ந்தவர் பிரம்மையா. இவரது மகள் சந்திரகலா (வயது 19). இவர் கோவில்பாளையம் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    கடந்த 5-ந் தேதி திடீரென சந்திர கலாவுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். பின்னர் விடுதியில் இருந்த அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து சந்திரகலா விடுதியில் இருந்து வெளியே வந்து 2-வது மாடியில் உள்ள வராண்டாவில் நடை பயிற்சி செய்தார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

    இதில் சந்திரகலாவுக்கு இடுப்பு மற்றும் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விடுதி வார்டன் உடனடியாக சந்திரகலாவை மீட்டு பீளமேட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்தரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    கோவில்பாளையம் அருகே கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    பெரம்பலூர் மாவட்டம் பெரிய அரமணையை சேர்ந்தவர் சதீஸ்குமார். கூலித் தொழிலாளி. இவரது மகன் குணால் (வயது 18). இவர் கோவை கோவில்பாளையம அருகே உள்ள ரங்கநாதர் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக குணால் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

    நேற்று காலை விடுதி அறையில் இருந்த குணால் திடீரென தனது லுங்கியில் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த சகமாணவர்கள் தூக்கில் இருந்து அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்தில் குணால் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவர் குணால் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×