search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student committed suicide"

    • மாணவி பிட் அடித்ததாக தெரிகிறது. இதனை பார்த்த ஆசிரியர் உனக்கு தெரிந்ததை மட்டும் தேர்வில் எழுது. பொதுத்தேர்வில் நன்றாக எழுதினால் போதும் என அறிவுரை கூறியுள்ளார்.
    • இதனால் தலைகுனிவு ஏற்பட்டதால் மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வத்தலக்குண்டு:

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகில் உள்ள கருப்பமூப்பன்பட்டியை சேர்ந்த மாசாணம் மகள் அர்ச்சனாதேவி(16). இவர் விராலிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளியில் 2-ம் நிலை பருவத்தேர்வுகள் நடைபெற்றது. அப்போது அர்ச்சனாதேவி பிட் அடித்ததாக தெரிகிறது. இதனை பார்த்த ஆசிரியர் உனக்கு தெரிந்ததை மட்டும் தேர்வில் எழுது. பொதுத்தேர்வில் நன்றாக எழுதினால் போதும் என அறிவுரை கூறியுள்ளார்.

    இதனால் சகமாணவிகள் மத்தியில் அர்ச்சனாதேவிக்கு தலைகுனிவு ஏற்பட்டது. மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிய அர்ச்சனாதேவி தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இரவு சாப்பிட அழைப்பதற்காக அவரது தாய் கதவை தட்டினார். ஆனால் அவர் திறக்காததால் சந்தேகமடைந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அர்ச்சனாதேவி தூக்குமாட்டிய நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து மாணவியின் தோழிகளிடம் விசாரித்தபோது பள்ளியில் நடந்த விபரங்களை அவரது பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

    • நித்யாவின் பெண் குழந்தை கவுதமி முதல் கணவர் செந்திலின் பெற்றோர் வீட்டில் வளர்த்து வந்தார்.
    • கவுதமி மரணம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அடுத்த காரமடை வெள்ளியங்காடு பூமாதேவி நகர் பகுதியை சேர்ந்தவர் நித்யா (30). இவருக்கும், இவரது தாய்மாமா செந்தில் என்பவருக்கும் கடந்த 16 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி 14 வயதில் கவுதமி என்ற பெண் குழந்தை உள்ளது.

    கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் செந்தில் இறந்துவிட வெள்ளியங் காட்டைச்சேர்ந்த கோபிநாத் என்பவரை நித்யா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரோகித் என்ற ஆண் குழந்தை பிறந்த உள்ளது. நித்யாவின் பெண் குழந்தை கவுதமி முதல் கணவர் செந்திலின் பெற்றோர் வீட்டில் வளர்த்து வந்தார். கவுதமி அங்கிருந்தபடி வெள்ளியங்காடு அரசு மேல் நிலைப்பள்ளியில் 9 -ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்தநிலையில் கவுதமியை பராமரித்து வந்த தாத்தாவும், பாட்டியும் வயோதிகம் காரணமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் மரணம் அடைந்தனர். இதனால் அவர்களது பராமரிப்பில் இருந்த கவுதமி மன உளைச் சலுக்கு ஆளானார். வீட்டில் யாரும் இல்லாத போது பிளேடால் கையை கிழிப்பது, சாணிப்ப வுடரை குடிப்பது என அடிக்கடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்தார்.

    நேற்று கவுதமி, தனது தாயாருடன் தோட்டத்துக்கு சென்றார். அங்கு தாயார் தோட்ட வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார். அப்போது தண்ணீர் குடித்து விட்டு வருவதாக சென்ற கவுதமி, தோட்டத்தில் உள்ள ஆழமான கிணற்றில் குதித்தார். அதை பார்த்து அவரது தாயார் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அவர்கள் தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கவுதமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை பிணமாக தான் மீட்க முடிந்தது. கவுதமியின் உடல் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவுதமி மரணம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

    • கோவை டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்து அழகு கலை பயின்று வந்தார்.
    • கவுசல்யா என்ஜினீயரிங் படிக்காமல் அழகு கலையை படித்து வந்தார்.

    கோவை,

    மேட்டுப்பாளையம் பங்களமேடு மாசாணியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் அருள்நாதன். இவரது மகள் கவுசல்யா (வயது 21).

    இவர் கோவை டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்து அழகு கலை பயின்று வந்தார். இந்த நிலையில் கவுசல்யாவின் பெற்யோர் பள்ளி படிப்பை முடித்து என்ஜினீயரிங் படிக்குமாறு கூறி வந்தனர்.

    ஆனால் அவர் அழகு கலையில் அதிக ஆர்வத்துடன் இருந்து வந்தார். இதனால் கவுசல்யா என்ஜினீயரிங் படிக்காமல் அழகு கலையை படித்து வந்தார். இதனால் அவரது பெற்யோர் கவுசல்யா மீது கோபம் அடைந்து அவருடன் சரியாக பேசாமல் இருந்து வந்தனர்.

    இதனை நினைத்து அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை பெரியநாயக்கன் பாளையம் கஸ்தூரிபாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி (48). இவர் துணி வியாபாரம் செய்து வந்தார். ஆனால் வியாபாரம் சரியாக இல்லாமல் தொழில் நஷ்டம் அடைந்தது.

    அதனால் அவருக்கு போதிய வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த கஷ்டப்பட்டு வந்தார். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையுடன் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று விரக்தி அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறுத்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவன் பாடம் படிக்காமல் அடிக்கடி செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததால் தந்தை கண்டித்துள்ளார்.
    • மனமுடைந்த மாணவன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே குஜிலியம்பாறை ஆர். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் நீதிராஜன். தச்சு தொழிலாளி. இவரது மகன் ரூபன்(17) ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    ரூபன் பாடம் படிக்காமல் அடிக்கடி செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததால் நீதிராஜன் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட ரூபன் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த எரியோடு இன்ஸ்பெக்டர் சத்ய பிரபா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பி.டெக். பட்டதாரியான வரதாயகிரிவு ராம் வேலை தேடிக்கொண்டு இருந்தார்.
    • அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை யாரும் திறக்கவில்லை

    கோவை,

    கோவை நஞ்சுண்டாபுரம் அருகே உள்ள நேதாஜி நகரை சேர்ந்தவர் ராம்கோபால். இவரது மகன் வரதாயகிரிவு ராம் (வயது 22). பி.டெக். பட்டதாரியான இவர் வேலை தேடிக்கொண்டு இருந்தார்.

    சம்பவத்தன்று வரதாயகிரிவு ராம் தனது பெற்றோரிடம் தலை வலிப்பதாக கூறினார். பின்னர் அறைக்கு சென்று தூங்க சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அறைக்கதவை தட்டினர். அறைக்கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை யாரும் திறக்கவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் வரதாயகிரிவு ராம் தனது முகத்தை பிளாஸ்டிக் கவரால் மூடி கழுத்தில் கயிறை கட்டி மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக ஆம்புலன்சு ஊழியர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வரதாயகிரிவு ராமின் உடலை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

    இந்த தகவல் கிடைத்ததும் ராமநாதபுரம் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட வரதாயகிரிவு ராமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.   

    • டாக்டராக முடியவில்லையே என்ற ஏக்கத்தில் மாணவர் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் அருகில் உள்ள மாணிக்கசாமி கோவில் சந்து பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் மணிராஜ் (வயது22). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு மருத்துவம் படிப்பதற்காக தன்னை தயார்படுத்தி வந்தார். நீட் தேர்வுக்காவும் படித்து வந்தார்.

    ஆனால் அவரால் தேர்வு எழுத முடியவில்லை. இதனையடுத்து தனது மகனை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறு தந்தை அறிவுறுத்தி வந்தார்.

    இதற்காக தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் கலை அறிவியியல் கல்லூரியில் சேர்ந்தும் படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். டாக்டராக முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தனது நண்பர்களிடம் புலம்பி வந்த நிலையில் சம்பவத்தன்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சிகிச்சையில் இருந்த மணிராஜ் பரிதாபமாக உயரிழந்தார்.

    இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில் பாலாஜி மகன் தயாநிதி (வயது 14). அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை அறிந்த மாணவனின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

    இதனால் தயாநிதி தனது வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்ற பின்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து மாணவனின் உடல் கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தேவதானபட்டி இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே நேற்று முன்தினம் பிளஸ்-2 மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

    பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பெரம்பூர்:

    சென்னை வியாசர்பாடி எம்.கே.பி.நகர் புது நகரைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக உள்ளார். இவருடைய மனைவி விஜயா. இவர் வீட்டு வேலைகள் செய்து வருகிறார்.

    இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த தம்பதிக்கு பிரியங்கா(வயது 17) என்ற மகளும் இருந்தார். இவர், சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள மூங்கில் பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

    நேற்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் மாணவி பிரியங்கா தேர்ச்சி பெற்றார். ஆனால் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று இருந்தார். இதனால் மனம் உடைந்த அவர், நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு கொண்டார்.

    மதியம் சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்த தியாகராஜன், தனது மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி பிரியங்கா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து வந்த எம்.கே.பி.நகர் போலீசார், தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் மாணவி பிரியங்காவுக்கும், அவருடன் படித்த சக மாணவிகளுக்கும் இடையே பிளஸ்-2 பொதுத்தேர்வில் யார் அதிக மதிப்பெண்கள் பெறுவது? என்பது தொடர்பாக போட்டி ஏற்பட்டதாகவும், அதில் சக மாணவிகளை விட பிரியங்கா குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும் தெரிகிறது.

    இதனால் மனம் உடைந்த அவர், தனது தாயிடம் கூறி அழுது உள்ளார். அதன்பிறகே இந்த மனஉளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். 
    ×