

ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி டி.சுப்புலாபுரம் அருகில் உள்ள மாணிக்கசாமி கோவில் சந்து பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் மணிராஜ் (வயது22). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு மருத்துவம் படிப்பதற்காக தன்னை தயார்படுத்தி வந்தார். நீட் தேர்வுக்காவும் படித்து வந்தார்.
ஆனால் அவரால் தேர்வு எழுத முடியவில்லை. இதனையடுத்து தனது மகனை பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படிக்குமாறு தந்தை அறிவுறுத்தி வந்தார்.
இதற்காக தமிழ்நாடு அரசு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் கலை அறிவியியல் கல்லூரியில் சேர்ந்தும் படிப்பை தொடராமல் வீட்டிலேயே இருந்து வந்தார். டாக்டராக முடியவில்லையே என்ற ஏக்கத்தில் தனது நண்பர்களிடம் புலம்பி வந்த நிலையில் சம்பவத்தன்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சிகிச்சையில் இருந்த மணிராஜ் பரிதாபமாக உயரிழந்தார்.
இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.