தேவதானப்பட்டியில் 10-ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தற்கொலை செய்து கொண்ட தயாநிதி
தற்கொலை செய்து கொண்ட தயாநிதி
Published on

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த செந்தில் பாலாஜி மகன் தயாநிதி (வயது 14). அங்குள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனை அறிந்த மாணவனின் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர்.

இதனால் தயாநிதி தனது வீட்டில் அனைவரும் வேலைக்கு சென்ற பின்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மாணவனின் உடல் கூராய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தேவதானபட்டி இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்கு பதிவு செய்து தற்கொலை குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே நேற்று முன்தினம் பிளஸ்-2 மாணவன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com