என் மலர்tooltip icon

    செய்திகள்

    தரங்கம்பாடி அருகே பெண் அடித்துக் கொலை: மகன் கைது
    X

    தரங்கம்பாடி அருகே பெண் அடித்துக் கொலை: மகன் கைது

    தரங்கம்பாடி அருகே பணப் பிரச்சினையில் தாயை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள எருக்கட்டாஞ்சேரியை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி லலிதா (60). இவர்களது மகன் விஜயபாலன். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். மனைவி பிரிந்து சென்று விட்டார்.

    விஜயபாலன் சென்னை பூந்தமல்லியில் தங்கி கட்டிட வேலை பார்த்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்தார். லலிதா தொகுப்பு வீட்டை விற்று பணம் வைத்து இருப்பது விஜயபாலனுக்கு தெரியவந்தது.

    நேற்று நள்ளிரவு தாய் வீட்டிற்கு சென்ற அவர் பணம் தரும்படி கேட்டுள்ளார். அதற்கு லலிதா மறுக்க ஆத்திரம் அடைந்த விஜயபாலன் தாயின் நெஞ்சில் எட்டி உதைத்து உள்ளார்.

    இதில் லலிதா மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

    இது குறித்து பொறையாறு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் (பொறுப்பு சிங்காரவேலன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். கொலையாளி விஜயபாலனை போலீசார் கைது செய்தனர்.

    தாயை மகன் அடித்து கொன்ற சம்பவம் தரங்கம்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×