என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    மதுக்கடை அருகே பெண் போலீசின் கணவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கத்தில் உள்ள அணுமின்நிலைய ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்த வர் ஆண்ட்ரூஸ் ராஜய்யா (வயது 52). இவர் கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் ஆய்வுக் கூட ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி மல்லிகா போலீசாக பணியாற்றி வருகிறார்.

    நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற ஆண்ட்ரூஸ் ராஜய்யா பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கல்பாக்கத்தை அடுத்த இளையனார்குப்பத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அவர் இறந்து கிடந்தார். தலையில் பலத்த ரத்த காயம் இருந்தது. மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்திருப்பது தெரிந்தது. இது குறித்து சதுரங்கபட்டினம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. எட்வர்ட் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆண்ட்ரூஸ் ராஜய்யா கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. அவரது செல்போன் எண்ணை வைத்து கடைசியாக யாருடன் பேசினார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலை நடந்த இடம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூட கோரி சில அமைப்பினர் நாளை மறுநாள் போராட்டம் நடத்த முடிவு செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் மதுக்கடை அருகே அணுமின் நிலைய ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஸ்ரீபெரும்புதூரில் அனுமதி இல்லாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த 20 வேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து இணை ஆணையர் ராமலிங்கம் உத்தரவின்பேரில் ஸ்ரீபெரும் புதூர் வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கடேசன் மேற்பார்வையில் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் வாகன சோதனை நடைபெற்றது.

    இதில் அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகள், அதிக பயணிகளை ஏற்றி வந்த வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் மற்றும் வரி வசூல் மூலம் 3 லட்சத்து 600 ரூபாய் பெறப்பட்டது.

    மேலும் அனுமதி இல்லாமல் பள்ளி குழந்தைகளை ஏற்றி வந்த 20 வேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 7 நபர்கள், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய ஒருவர், மற்றும் அதிக பாரம் ஏற்றி வந்த 11 ஓட்டுனர்கள் உள்பட 19 ஓட்டுனர்கள் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வரும் வாகன ஓட்டிகள் பார்க்கும் வகையில் டி.வி. மூலம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
    தமிழக மக்களின் உணர்ச்சிபூர்வமான போராட்டங்களை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி அளித்தார்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடமான ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ராஜீவ் ஜோதி யாத்திரை தொடங்கி டெல்லி வீர்பூமியை சென்றடையும். அங்கு காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் ராஜீவ் ஜோதி ஒப்படைக்கப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான ராஜீவ் ஜோதி யாத்திரை தொடக்கவிழா ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் நேற்று காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தலைவர் ரூபி மனோகர் தலைமையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளர்களாக கர்நாடக மாநில உணவு பாதுகாப்பு துறை மந்திரி காதர், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்துகொண்டனர். ராஜீவ்காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய திருநாவுக்கரசர் ராஜீவ் ஜோதியை ஏற்றி தொடங்கிவைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, “தமிழக மக்களின் உணர்ச்சிபூர்வமான போராட்டங்களை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. இந்திய மக்கள் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கம் தொடங்கியதை போன்று மோடியே வெளியேறு என்று கூறும் நாள் விரைவில் வரும். மத்தியில் விரைவில் காங்கிரஸ் ஆட்சி அமையும். அதை யாரும் தடுக்க முடியாது” என்றார்.

    நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மாணிக்தாகூர், பிரகாசம், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளர்கள் ரங்கநாதன், பவுன் ஆரோக்கியம், முன்னாள் எம்.எல்.ஏ. முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

    செம்மஞ்சேரி பகுதியில் உள்ள ஏரியை மூட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர்.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி, குடிசை மாற்று வாரியம் அருகே உள்ள ஏரி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஏரியை முழுவதும் மூட உத்தரவிடப்பட்டதாக தெரிகிறது.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். ஏரியை மூட எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டனர்.

    உதவி பொறியாளர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஏரியை மூடும் உத்தரவை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
    காஞ்சீபுரம் நகராட்சியில் சொத்துவரி விண்ணப்பம் 10 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக உயர்தப்பட்டுள்ளது பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நகராட்சி 51 வார்டுகளை கொண்டுள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் முடிந்ததால் கமிஷ்னர் உள்ளிட்ட அதிகாரிகளால் நிர்வாகம் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நகராட்சியின் சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சொத்துவரி விண்ணப்பம் 10 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாகவும் சொத்து வரி பெயர் மாற்றம் விண்ணப்பம் 2 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், குடிநீர் இணைப்பு விண்ணப்பம் 10 ரூபாயில் இருந்து 250 ரூபாயாகவும் இலவசமாக வழங்கப்பட்டு வந்த புதைவடிகால் இணைப்பு விண்ணப்பம் தற்போது 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    இதையடுத்து காஞ்சீபுரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர்.வி.குப்பன் தலைமையில் ஏராளமான காங்கிரசார் நகராட்சி நிர்வாகம் குறித்து மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் புகார் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சீபுரம் நகராட்சி சைவை மையத்தில் எந்தவித முன்னறிவிப்பு செய்யாமலும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யாமலும், விண்ணப்ப படிவங்களின் விலை பலமடங்கு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. மக்களை பாதிக்கும் இந்த விலை உயர்வினை கைவிட வேண்டும். மேலும் பாதாள சாக்கடை வரியினை 2012ம் ஆண்டிலிருந்து வரிஉயர்வு செய்யப்படுவதாக கம்யூட்டரில் தனி அதிகாரி உத்தரவின்பேரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    முன்பு அரைஆண்டிற்கு செலுத்தி வந்த தொகையை தற்போது ஒரே மாதத்திற்கே செலுத்த வேண்டியுள்ளது. நகராட்சி சேவை மையத்திற்கு செல்லும் பொதுமக்கள் தங்களுக்கு எந்தவிதமான வரிபாக்கி இல்லை என கூறியும் அங்குள்ள ஊழியர்கள் 2012-ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரை உயர்த்தப்பட்ட தொகையை செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.

    முன் அறிவிப்பு இல்லாமல் ஏன் வரி உயர்வு செய்தீர்கள் என பொதுமக்கள் கேட்டால் தனி அதிகாரிகை போய் கேளுங்கள் என்று கூறுகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகின்றனர். மேலும் பெரிய வணிக நிறுவனங்களின் கட்டிட உரிமையாளர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு பாதாள சாக்கடை வரியினை குறைவாக நிர்ணயிக்கின்றனர். மக்கள் செலுத்தும் சொத்துவரி, தொழில்வரி, பாதாள சாக்கடை வரி, குடிநீர் குழாய் வரிகள் மூலமாக நகராட்யால் குப்பை அகற்றுதல் தெரு விளக்கு மற்றும் சாலைகள் அமைத்தல் போன்ற பணிகள் நடைபெறவேண்டிய நிலையில் தற்போது வீடுகளில் குப்பை எடுக்கவும் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

    சாலை ஓரங்கள் மற்றும் தெருக்களில் தள்ளுவண்டிகளில் விற்பனை செய்பவர்களிடமும், தலையில் கூடைவைத்து தெருதெருவாக பழங்கள் கீரைகள் விற்பனை செய்பவர்களிடமும் தற்காலிக கடை வாடகை ரசீது என்ற பெயரில் 25 முதல் 100 ரூபாய் வரை நகராட்சி ஊழியர்கள் கட்டாய வசூல் செய்து வருகின்றனர்.

    எனவே கட்டாயப்படுத்தி வரி வசூல் செய்வதை கைவிட வேண்டும். மேலும் நகராட்சியில் வருவாய்பிரிவு, பொறியாளர் பிரிவு, நகர்அமைப்பு பிரிவு, சுகாதார பிரிவு ஆகிய பிரிவிகளில் பொதுமக்கள் அளிக்ககும் மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகள் புரோக்கர்களை நியமித்து பொதுமக்களிடம் பணத்தினை எதிர்பார்க்கின்றனர்.

    விண்ணப்பட கட்டண உயர்வு மற்றும் நகராட்சியில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
    மாமல்லபுரம் அருகே சுற்றுலா வேன் மோதிய விபத்தில் அரசு ஊழியர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 34). கடலூரில் கூட்டுறவு சங்கத்தின் பதிவாளராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு அவர் கோயம்பேட்டில் இருந்து கடலூருக்கு பஸ்சில் புறப்பட்டார். எதிர்பாராமல் பூஞ்சேரியில் இறங்கி விட்டார்.

    பின்னர் வழிதெரியாமல் கடம்பாடி நோக்கி கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த சுற்றுலா வேன் திடீரென விக்னேஷ்வரன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கழுக்குன்றத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் தணிகாசலம். இவர் வீட்டை பூட்டி விட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தத்தளூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். திரும்பி வந்த போது வீட்டின் பின் வாசல் கதவு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பீரோவை பார்த்தபோது லாக்கரை உடைத்து அதில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
    பல்லாவரம் மேம்பால பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    தாம்பரம்:

    கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை வழியாக சென்னை கோயம்பேடுக்கு இன்று அதிகாலை அரசு விரைவு பஸ் வந்தது. டிரைவர் அண்ணாமலை பஸ்சை ஓட்டினார். சுமார் 40 பயணிகள் இருந்தனர்.

    அதிகாலை 2 மணியளவில் பல்லாவரம்-மீனம்பாக்கம் இடையே பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் புதிதாக கட்டப்படும் பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் திடீரென பாய்ந்து கவிழ்ந்தது.

    இதில் பயணிகள் அனைவரும் லேசான காயத்துடன் தப்பினர். அதிர்ச்சி அடைந்த அவர்கள் அலறியடித்து பஸ்சில் இருந்து இறங்கி வெளியே வந்தனர்.

    பஸ் கவிழ்ந்த இடம் குறுகலான பாதை என்பதால் பின்னால் வந்த வாகனங்கள் எதுவும் செல்ல முடியவில்லை.

    இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல்லாவரம் முதல் கிண்டி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    இதற்கிடையே அதிகாலையில் வெளியூரில் இருந்து சென்னை நோக்கி வந்த வாகனங்களும் இதில் சிக்கியது. இதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் தவித்தனர்.

    காலை 9 மணியளவில் ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு விபத்துக்குள்ளான பஸ் மீட்கப்பட்டது. இதன் பின்னரே போக்குவரத்து சீரானது.
    தாம்பரம் 3-வது முனையத்தில் இருந்து இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை கவுகாத்தி ரெயில் வெள்ளோட்டமாக இயக்கப்படுகிறது.
    தாம்பரம்:

    சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ஆகிய 2 ரெயில் முனையங்கள் உள்ளன. தாம்பரத்தில் 3-வது ரெயில் முனையம் அமைக்கும் பணிகள் முடிந்து விட்டன. தண்டவாளம் மற்றும் பிளாட்பாரங்களும் அமைக்கப்பட்டு விட்டன.

    இந்த நிலையில் தாம்பரம் முனையத்தில் இருந்து இன்று முதல் 30-ந் தேதி வரை ரெயில் வெள்ளோட்டம் நடக்கிறது. இந்த வெள்ளோட்டத்தின் போது வழக்கமாக எழும்பூரில் இருந்து புறப்படும் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

    இதற்காக கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு 8.30 மணிக்கு தாம்பரம் ரெயில் முனையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

    இன்று இரவு 9.15 மணிக்கு கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரெயில் வெள்ளோட்டமாக தாம்பரத்தில் இருந்து புறப்படுகிறது. பின்னர் எழும்பூர் சென்று அங்கிருந்தும் பயணிகளை ஏற்றிக் கொண்டு கவுகாத்தி செல்லும் இந்த ரெயில் வாரம் ஒருமுறை இயக்கப்படுகிறது.

    வருகிற 30-ந் தேதி வரை கவுகாத்தி ரெயில் வெள்ளோட்டமாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். அதன் பிறகு தாம்பரத்தில் இருந்து பல ரெயில்கள் இயக்கப்படும்.

    வெள்ளோட்டத்தின் போது 7-ந்தேதி (இன்று), 14-ந் தேதி, 21-ந் தேதி, 28-ந் தேதிகளில் கவுகாத்தி ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.

    இதே போல் திருநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் தாம்பரத்தில் இருந்து 10-ந் தேதி, 17-ந் தேதி, 24-ந் தேதி, 31-ந் தேதிகளில் புறப்பட்டு செல்லும்.
    கண்ணகி நகரில் ஒரே நாளில் 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவான்மியூர்:

    அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் சந்திப் நாத் (25). கண்ணகி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி காரப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இன்று காலை அவர் பணிக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். காரப்பாக்கம் பாலம் அருகே சென்ற போது ஆட்டோவில் வந்த 4 பேர் கும்பல் அவரை வழிமறித்தனர். திடீரென அவர்கள் சந்திப் நாத்தை கத்தியால் குத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    பின்னர் சந்திப் நாத்தின் செல்போனை எடுத்துக் கொண்டு கொலை கும்பல் தப்பி சென்றுவிட்டனர். கொலையாளிகள் மற்றும் கொலைக்கான காரணம் பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கண்ணகி நகர் குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு 2-வது மாடியில் வசித்து வந்தவர் தினேஷ் (19). இன்று காலை அவர் அதே பகுதியில் நண்பர்களுடன் இருந்தார். அப்போது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த நண்பர்கள் தினேசை தாக்கி கத்தியால் குத்தினர். இதில் அவர் பரிதாபமாக இறந்தார். கஞ்சா விற்பனை தகராறில் இந்த கொலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக அதே பகுதியை சேர்ந்த டோரிமணியை பிடித்து விசாரித்து வருகிறார்கள். ஒரே நாளில் 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்ணகி நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மதுராந்தகத்தில் மதுபோதை தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த ஜமீன்எண்டத்தூரை சேர்ந்தவர் தனசேகர் (வயது 37). கூலித் தொழிலாளி. மதுராந்தகம் பஸ் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவரும் அதே பகுதியில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வரும் குமாரும் நண்பர்கள்.

    கடந்த 4-ந் தேதி இருவரும் மதுராந்தகம் பஸ் நிலையம் அருகே மது அருந்தினர். அப்போது அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த குமார் அருகில் கிடந்த கட்டையால் தனசேகரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவருக்கு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி தனசேகர் பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து மதுராந்தகம் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து குமாரை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
    ஆலந்தூரில் நள்ளிரவில் வீடு புகுந்து அழகு நிலைய பெண்ணை கத்தி முனையில் வாலிபர் மதுபோதையில் கற்பழித்து உள்ளார்.
    ஆலந்தூர்:

    பல்லாவரத்தில் உள்ள பியூட்டி பார்லரில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த 39 வயது பெண் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆதம்பாக்கம் 9-வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி உள்ளார்.

    நேற்று முன்தினம் இரவு அவர் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு தூங்கினார். நள்ளிரவில் வந்த மர்ம வாலிபர் நைசாக வீட்டின் கதவை திறந்து உள்ளே புகுந்தான்.

    சத்தம் கேட்டு எழுந்த அழகு நிலைய பெண் வீட்டின் உள்ளே வாலிபர் நிற்பதை கண்டு கூச்சலிட்டார். உடனே அவன் கத்திமுனையில் பெண்ணை மிரட்டி கற்பழித்தான். பின்னர் அவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான். அப்போது அவன் மது போதையில் இருந்ததாக தெரிகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அழகு நிலைய பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×