என் மலர்
ஈரோடு
- வாகன ஓட்டுநர்கள் வனப்பகுதி சாலையோரம் கரும்பு துண்டுகளை யானைகளுக்கு உணவாக போட்டுவிட்டு செல்கின்றனர்.
- சாலையோரத்தில் கூட்டமாக காட்டு யானைகள் நிற்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் கரும்பு அறுவடை செய்யப்பட்டு லாரியில் பாரம் ஏற்றி சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
லாரியில் கரும்பு பாரம் ஏற்றி செல்லும் வாகன ஓட்டுநர்கள் ஆசனூர் மற்றும் புளிஞ்சூர் வனப்பகுதி வழியாக சாலையில் செல்லும்போது கட்டுக்கட்டாக கரும்பு துண்டுகளை சாலையோரம் யானைகளுக்கு உணவாக போட்டுவிட்டு செல்கின்றனர்.
கரும்பின் வாசனையை நுகர்ந்து காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி கூட்டம் கூட்டமாக சாலையோரம் முகாமிட்டபடி கரும்பு துண்டுகள் ருசித்து வருகின்றன. சாலையோரத்தில் கூட்டமாக காட்டு யானைகள் நிற்பதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
இன்னும் சில வாகன ஓட்டிகள் வாகனங்கள் விட்டு இறங்கி ஆபத்தை உணராமல் யானைகளை தங்களது செல்போனில் படம் பிடிக்கின்றனர். எனவே கரும்பு லாரியை இயக்கும் ஓட்டுநர்கள் லாரியில் இருந்து கரும்பு துண்டுகளை வனப்பகுதியில் உள்ள சாலையோரம் காட்டு யானைகளுக்கு உணவாக அளிக்க கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் மீறி கரும்பு கட்டுகள் யானைகளுக்கு வீசும் வாகன ஓட்டுநர்கள் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
- தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் துறை சார்ந்த மக்கள் நல திட்டங்கள் தொடர்பாக ஆய்வு
- சத்தீஸ்வரர் கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சத்தீஸ்வரர் கோவில், செல்லாண்டியம்மன் கோவில், ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில்களில் இன்று இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் துறை சார்ந்த மக்கள் நல திட்டங்கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் இன்று ஈரோடு மாநகர் பெரிய மாரியம்மன் திருக்கோவில் உப கோவில்களில்களான மொடக்குறிச்சி வட்டம், கஸ்பாபேட்டை சத்தீஸ்வரர் கோவில், ஸ்ரீவரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் செல்லாண்டியம்மன் கோவில்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
சத்தீஸ்வரர் கோவில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான கோவில் ஆகும். இக்கோவில் மிகவும் பழுதடைந்திருந்த நிலையில் தற்போது திருப்பணிகள் செய்திடும் வகையில் இன்று பாலாலயம் செய்யப்பட்டது.
இந்து சமய அறநிலையத்துறை அனுமதி பெற்று மேற்கண்ட கோவிலை பழமை மாறாமல் புதுப்பித்து விரைவில் குடமுழுக்கு நடத்தவும், பூஜைகள் மற்ற விழாக்கள் நடைபெறவும், கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்களை உடனடியாக மீட்டு கோவிலுக்கு வருவாய் பெருக்கிடவும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையர்ஜெ.குமரகுருபரன், கலெக்டர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி, ஈரோடு மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, உதவி ஆணையர்அன்னக்கொடி, இந்து சமய அறநிலை துறை உதவி கோட்ட பொறியாளர் காணீஸ்வரி, தொல்பொருள் துறை உதவி இயக்குநர் (ஓய்வு) சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை தாசில்தார் தாமோதரன் மற்றும் கோவில் செயல் அலுவலர்கள் அருள்முருகன், சுகுமார் உள்பட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கிய 24 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
- நாட்டு வெடிகுண்டு வைத்திருந்தவர்களை வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகேயுள்ள வாணிப்புத்தூர், காளியூர் மற்றும் கெம்மநாயக்கன்பாளையம் ஆகிய இடங்களில் நேற்று பங்களாப்புதூர் போலீசார் ரோந்து ஈடுபட்டு வந்தனர்.
அப்போது டி.ஜி.புதூர்-கே.என்.பாளையம் சாலையில் உள்ள காளியூர் பிரிவு பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீசார் சென்றபோது, சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன் நின்றிருந்த கே.என்.பாளையம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த வேட்டையன் (50) மற்றும் நாராயணன் (58) ஆகிய இருவரும் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் விரட்டிய போது, அருகில் வந்தால் நாட்டு வெடியை வீசி கொன்று விடுவோம் என்று போலீசாரை பார்த்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து தப்பியோட முயன்ற இருவரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், இருவரும் வனப்பகுதியில் இருந்து வரும் விலங்குகளை அச்சுறுத்தவும், காட்டு பன்றிகளை வேட்டையாடுவதற்கும், அவுட்காய்கள் எனப்படும் நாட்டுக்காயை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நான்கு நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து, வேட்டையன், நாராயணன் ஆகிய இருவர் மீதும் கொலை மிரட்டல், வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இதேபோல் புளியம்பட்டி பகுதியிலும் நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது. மொத்தம் 24 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் வனவிலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்தது தெரிய வந்தது.
இதுபோன்ற சட்ட விரோதமாக வெடிபொருட்கள் வைத்திருப்பவர்கள் சம்பந்தமாக புகார் அளிக்க விரும்புபவர்கள் ஈரோடு மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன்னிடம் நேரடியாகவோ, அல்லது தனது வாட்ஸ்அப் எண் 9655220100 என்ற எண்ணுக்கும் புகார் தெரிவிக்கலாம்.
மேலும் காவல் அலுவலகத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தெரிவிக்கலாம். இதுகுறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல் கொடுப்பவரின் பெயர் முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கேட்டுக் கொண்டுள்ளார்.
- பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் மார்ஷல் நேசமணி பிறந்தநாள் விழா நடைபெற்றது.
- இந்த பிறந்த நாள் விழாவில், அந்தியூர் நகர தலைவர் சரவணன், துணை தலைவர் ஜெயகுமார் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட துணைதலைவர் கேசவராஜ் நன்றி கூறினார்
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுபாளையம் பகுதியிலுள்ள பெருந்தலை–வர் மக்கள் கட்சி அலுவ–லகத்தில் கன்னியா–குமரி மாவட்டத்தை தமிழ–கத்தோடு சேர்க்க போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்ட
மார்ஷல் நேசமணியின் 127- வது பிறந்த நாள் நிகழ்ச்சி பெருந்தலைவர் மக்கள் கட்சி ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக மாவட்ட தலைவர் சுப்ரமணியம் தலைமையில் நடைப்பெற்றது
அந்தியூர் ஒன்றிய தலைவர் சக்திவேலன் அனைவரையும் வரவேற்றார், சிறப்பு அழைப்பாளராக மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் தங்கதுரை, தென் மாவட்ட நாடார் சங்க தலைவர் நெல்லை மகாதேவன் கலந்து கொண்டு மார்ஷல் நேசமணியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
அந்தியூர் நகர தலைவர் சரவணன், துணை தலைவர் ஜெயகுமார் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் மாவட்ட துணைதலைவர் கேசவராஜ் நன்றி கூறினார்
- உழவர் சந்தைகளில் வைகாசி விசாகத்தையொட்டி 52 டன் காய்கறிகள் விற்பனை நடந்தது.
- இதனால் 5 உழவர் சந்தைகளில் நேற்று வரைதான 52.29 டன் காய்கறிகள் ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்துக்கு விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் 5 நிமிடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை பல்வேறு பகுதிகளில் இருந்து நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறி விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று வைகாசி விசாகத்தை ஒட்டி யும் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளிலும் வழக்கத்தைவிட விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். காய்கறிகளை வாங்க அதிகாலை முதலே மக்கள் குவிந்தனர்.
இதனால் 5 உழவர் சந்தைகளில் நேற்று வரைதான 52.29 டன் காய்கறிகள் ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்துக்கு விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- அந்தியூரில் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
- பயிற்சிக்கான ஏற்பாட்டி னை அந்தியூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முருகன், மாதேஸா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் லிங்கப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அந்தியூ ர்ஒன்றி யத்திற்கு ட்பட்ட அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.
இதில் 130 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
கொேரானா கால கட்டத்தில் மாணவ ர்களின் கற்றலில் இடை வெளி காரணமாக மாணவர்களின் பள்ளி செயல்பாடுகள் குறைந்தது. இதனை ஈடுகட்டும் வகையில், மாணவர்கள் திறனை மேம்படுத்து வதற்காக பல்வேறு உத்தி களை கையாண்டு ஆசிரிய ர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டது.
பயிற்சியினை ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்து ஆசிரிய ர்களுக்கு அறிவுரை வழங்கி னார்.
மேலும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் லக்குமி நரசிம்மன், மாவட்ட உதவி திட்ட அலுவலர் ராதா கிருஷ்ணன், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பானுமதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நந்தினி தேவி மற்றும் சிவராமன் ஆகியோர் பார்வையிட்டனர். இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு கையேடு வழங்கப்பட்டது.
பயிற்சிக்கான ஏற்பாட்டி னை அந்தியூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் முருகன், மாதேஸா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் லிங்கப்பன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.
- கருங்கல்பாளையத்தில் பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், ரூ.6.550 ரொக்கப் பணம், 3 மோட்டார் சைக்கிள்கள், மற்றும் 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளை யம் சப்-இன்ஸ்பெக்டர் ராம்பிரபு தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போது 5 பேர் கொண்ட கும்பல் பணம் வைத்து சூதாடிய கொண்டிருந்தது தெரியவந்தது.
போலீசை பார்த்ததும் அந்த கும்பல் தப்பியோட முயன்றது. அந்த கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கிருஷ்ணம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (58), கருங்கல்பாளையம் காவிரி ரோட்டை சேர்ந்த சிவா என்கிற சிவகுமார்(49), கிருஷ்ணம் பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வன் (49), கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த விஜய குமார்(44), கருங்கல்பாளை யம் கமலா நகரைச் சேர்ந்த முருகேசன்(51) ஆகியோர் என தெரியவந்தது. அவர்களிடமிருந்து சீட்டுக் கட்டுகள், ரூ.6.550 ரொக்கப் பணம், 3 மோட்டார் சைக்கிள்கள், மற்றும் 5 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையில் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர்.
- உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,
சென்னிமலை, ஜூன். 13
சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வனப்பகுதி ரோடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.
அப்போது மலைப்பாதை ரோடு முதல் வளைவு பகுதியில் 65 வயது மதிக்க த்தக்க ஒரு முதியவர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த முதிய வர் பிணத்தை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்படுகிறது. எனவே அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனவும் தெரியவந்தது.
ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரம் தெரிய வில்லை.
இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வைகாசி விசாக விழா சென்னிமலை முருகன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள்.
- இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்திருந்தனர்.
சென்னிமலை:
சென்னிமலை முருகன் கோவிலில் நேற்று மாலை வைகாசி விசாக விழா நடந்தது. முருக பெருமானின் அவதார தினமான வைகாசி விசாகத்தன்று முகப்பெருமானை வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
66 வது வருட வைகாசி விசாக பெரு விழாவினை முன்னிட்டு ஊஞ்சலூர் அருகே காவிரியில் தீர்த்தம் எடுத்து கொண்டு சென்னிமலை கிழக்கு ராஜா வீதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க காவிரி திருமஞ்சன தீர்த்தம் ஊர்வலமாக புறப்பட்டு மலை கோவிலை சென்று அடைந்தது.
தொடர்ந்து நேற்று மதியம் கணபதி ேஹாமத்துடன் விழா தொடங்கி கலசஸ்தாபனம், 108 சங்குஸ்தாபனம், ஜெபம், ஓமம் நடந்தது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம், தேன், பழங்கள், பால், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் செய்யப்பட்டது. இதை யடுத்து முருகன் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது.
அதை தொடர்ந்து சுவாமி புறப்பாடு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். காங்கேயம் அருகே உள்ள வரதப்பம்பாளையம் கிராம மக்கள் காவடி, தீர்த்த குடங்கள் எடுத்து வந்து முருகப்பெருமான வழிபட்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அருள்குமார் தலைமையில் அருணகிரிநாதர் மடம் மற்றும் கிருத்திகை விசாக குழுவினர் செய்திருந்தனர்.
- ஈரோட்டில் நடந்த மெகா முகாமில் 19 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
- 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்காக மாவட்டம் முழுவதும் 4260 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
ஈரோடு:
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு மக்களை தேடி மருத்துவம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டே முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.
இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3, 194 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை தடுப்பூசி முகாம் நடந்தது.
இதுபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இரண்டாம் தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்காக மாவட்டம் முழுவதும் 4260 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக 66 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. இருந்தாலும் ஒரு சில மையங்கள் தவிர அனைத்து மையங்களில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக இரண்டாம் தடுப்பூசி போடவேண்டியவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை.
இதேபோல் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே ஆர்வத்துடன் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் வரும் 19 ஆயிரத்து 59 பேர் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
- சென்னிமலை அருகே கடந்த 15 வருடமாக வள்ளியத்தாளுக்கு மூட்டுவலி இருந்து வந்துள்ளது. இருப்பினும் மூட்டு வலி குணமாக வில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார்
- இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அரச்சலூர் ரோடு, எம்.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் வள்ளியாத்தாள் (85). தனது மகன் குமாருடன் வசித்து வருகிறார். கடந்த 15 வருடமாக வள்ளியத்தாளுக்கு மூட்டுவலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். இருப்பினும் மூட்டு வலி குணமாக வில்லை என கூறப்படுகிறது.
எனவே கடந்த சில மாதங்களாக வள்ளியாத்தாள் நடக்க முடியாமல் கடும் அவதி அடைந்து மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வள்ளியாத்தாள் வீட்டின் கழிப்பறைக்கு சென்று மண் எண்ணை தனக்குத்தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மகன், மருமகள், பக்கத்து வீட்டு சேர்ந்தவர்கள் ஓடிவந்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி வள்ளியாத்தாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பவானிசாகர் அருகே வெற்றிலை வாங்க சென்று மாயமான மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார்.
- இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் அடுத்த கறி தொட்டம்பாளையம், ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (30). இவர் தனது பாட்டி ரங்கம்மாள் (73) உடன் வசித்து வருகிறார். ரங்கம்மாள் தினமும் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நால் ரோடு பகுதிக்கு சென்று தனக்கு தேவையான வெற்றிலை பாக்கு வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் கடந்த 4-ந் தேதி வெற்றிலை பாக்கு வாங்க சென்ற மூதாட்டி ரங்கம்மாள் பின்னர் வீடு திரும்பவில்லை.
அவரை பல்வேறு இடங்களில் தேடினர் எனினும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம், மாங்கள் மொக்கைக்கு கீழ்புறம் உள்ள காய்ந்த குட்டை பக்கமாக மூதாட்டி உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தேவராஜிக்கும் தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தது தனது பாட்டி என உறுதிப்படுத்தினார்.
இதையடுத்து பவானிசாகர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






