மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

சென்னிமலை அருகே கடந்த 15 வருடமாக வள்ளியத்தாளுக்கு மூட்டுவலி இருந்து வந்துள்ளது. இருப்பினும் மூட்டு வலி குணமாக வில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அரச்சலூர் ரோடு, எம்.எஸ்.கே. நகரைச் சேர்ந்தவர் வள்ளியாத்தாள் (85). தனது மகன் குமாருடன் வசித்து வருகிறார். கடந்த 15 வருடமாக வள்ளியத்தாளுக்கு மூட்டுவலி இருந்து வந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். இருப்பினும் மூட்டு வலி குணமாக வில்லை என கூறப்படுகிறது.

எனவே கடந்த சில மாதங்களாக வள்ளியாத்தாள் நடக்க முடியாமல் கடும் அவதி அடைந்து மன வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வள்ளியாத்தாள் வீட்டின் கழிப்பறைக்கு சென்று மண் எண்ணை தனக்குத்தானே ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு மகன், மருமகள், பக்கத்து வீட்டு சேர்ந்தவர்கள் ஓடிவந்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி வள்ளியாத்தாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com