மலைப்பாதையில் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர்

சென்னிமலை முருகன் கோவில் மலைப்பாதையில் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர். உடலை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,
மலைப்பாதையில் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக தொங்கிய முதியவர்
Published on

சென்னிமலை, ஜூன். 13

சென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வனப்பகுதி ரோடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

அப்போது மலைப்பாதை ரோடு முதல் வளைவு பகுதியில் 65 வயது மதிக்க த்தக்க ஒரு முதியவர் மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கி கொண்டு இருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் இது குறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த முதிய வர் பிணத்தை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவரது உடல் அழுகிய நிலையில் காணப்படுகிறது. எனவே அவர் இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் எனவும் தெரியவந்தது.

ஆனால் அவர் யார் எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரம் தெரிய வில்லை.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com