என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டன்"

    • நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல்
    • மேட்டுக்கடை பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் அந்த கார் சிக்கிக்கொண்டது.

    கன்னியாகுமரி:

    தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்எண்ணை ஆகியவை கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக பல்வேறு பகுதியில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். எனினும் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமாருக்கு நெல்லையில் இருந்து நாகர்கோவில் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் மற்றும் அதிகாரிகள் தக்கலை பகுதி மற்றும் புலியூர்குறிச்சி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை வழி மறித்தனர். காரை நிறுத்தாமல் டிரைவர் வேகமாக சென்றார். எனினும் அதிகாரிகள் காரை பின் தொடர்ந்து சென்றனர். இதையடுத்து மேட்டுக்கடை பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெருக்கடியில் அந்த சொகுசு கார் சிக்கிக்கொண்டது.

    இதனால் டிரைவர் சொகுசு காரை நிறுத்தி விட்டு தப்பியோடி விட்டார். இதையடுத்து அதிகாரிகள் சொகுசு காரை சோதனை செய்தனர். சோதனையில் 35 மூட்டைகளில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரேஷன் அரிசி மற்றும் சொகுசு காரை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வருவாய் ஆய்வாளர் விஜிமாறன், வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் ஆகியோர் குளச்சலில் உள்ள கிட்டங்கிக்கு அனுப்பி வைத்தனர்.

    • உழவர் சந்தைகளில் வைகாசி விசாகத்தையொட்டி 52 டன் காய்கறிகள் விற்பனை நடந்தது.
    • இதனால் 5 உழவர் சந்தைகளில் நேற்று வரைதான 52.29 டன் காய்கறிகள் ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்துக்கு விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் 5 நிமிடங்களில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த காய்கறிகளை பல்வேறு பகுதிகளில் இருந்து நேரடியாக உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். வெளி மார்க்கெட்டுகளை விட உழவர் சந்தைகளில் காய்கறி விலை மலிவாக கிடைப்பதால் மக்கள் இங்கு காய்கறிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று வைகாசி விசாகத்தை ஒட்டி யும் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளிலும் வழக்கத்தைவிட விவசாயிகள் அதிகளவில் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். காய்கறிகளை வாங்க அதிகாலை முதலே மக்கள் குவிந்தனர்.

    இதனால் 5 உழவர் சந்தைகளில் நேற்று வரைதான 52.29 டன் காய்கறிகள் ரூ.14 லட்சத்து 87 ஆயிரத்துக்கு விற்பனை ஆனதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ×