வெற்றிலை வாங்க சென்று மாயமான மூதாட்டி பிணமாக மீட்பு

பவானிசாகர் அருகே வெற்றிலை வாங்க சென்று மாயமான மூதாட்டி பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெற்றிலை வாங்க சென்று மாயமான மூதாட்டி பிணமாக மீட்பு
Published on

ஈரோடு:

சத்தியமங்கலம் அடுத்த கறி தொட்டம்பாளையம், ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (30). இவர் தனது பாட்டி ரங்கம்மாள் (73) உடன் வசித்து வருகிறார். ரங்கம்மாள் தினமும் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள நால் ரோடு பகுதிக்கு சென்று தனக்கு தேவையான வெற்றிலை பாக்கு வாங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 4-ந் தேதி வெற்றிலை பாக்கு வாங்க சென்ற மூதாட்டி ரங்கம்மாள் பின்னர் வீடு திரும்பவில்லை.

அவரை பல்வேறு இடங்களில் தேடினர் எனினும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் பவானிசாகர் அடுத்த தொப்பம்பாளையம், மாங்கள் மொக்கைக்கு கீழ்புறம் உள்ள காய்ந்த குட்டை பக்கமாக மூதாட்டி உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து தேவராஜிக்கும் தகவல் கிடைத்தது. அவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தது தனது பாட்டி என உறுதிப்படுத்தினார்.

இதையடுத்து பவானிசாகர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com