என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  பியட் செல் கார்டன் பகுதியில் பூங்கா அமைக்கப்பட உள்ள இடத்தினை நிர்வாக இயக்குனர் சுல்தான் பார்வையிட்ட காட்சி.
  X
  பியட் செல் கார்டன் பகுதியில் பூங்கா அமைக்கப்பட உள்ள இடத்தினை நிர்வாக இயக்குனர் சுல்தான் பார்வையிட்ட காட்சி.

  மேட்டூர் நகராட்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மேட்டூர் நகராட்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆய்வு செய்தார்.
  மேட்டூர்:

  மேட்டூர் நகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் நகராட்சியின் சேலம் மண்டல நிர்வாக இயக்குனர் சுல்தான் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

  மேட்டூர் நகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் அபிவிருத்தி திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சிக்கு சொந்தமான 3 கூடங்களில் உரமாக்கும் பணிகள் மற்றும் மேட்டூர் நகராட்சி நவீன வசதிகளுடன் அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்காக புதிதாக அமைக்கப்பட உள்ள அறிவுத் திறன் மேம்பாட்டு சென்டர் ஆகியவை அமைய உள்ள இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

  மேலும் மேட்டூர் பியட் செல் கார்டன் பகுதியில் நகராட்சி சார்பில் பூங்கா அமைய உள்ள இடத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது நகராட்சி ஆணையாளர் அண்ணாமலை நகராட்சி பொறியாளர் மணிமாறன் உதவி பொறியாளர் பிரேமா துப்புரவு அலுவலர் சுகவனம் ஆகியோர் உடன்  இருந்தார்.
  Next Story
  ×