என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  எடப்பாடி பழனிசாமி
  X
  எடப்பாடி பழனிசாமி

  சட்டம்- ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது: திமுக அரசை சாடிய எடப்பாடி பழனிசாமி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டுமென்றே தி.மு.க. அரசு பொய் வழக்கு போட்டு வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
  சென்னை:

  தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. சரியாக 10 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஆங்கிலத்தில் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார்.

  அப்போது, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிஎழுந்து பேச தொடங்கினார். அவர் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி கொடுக்கவில்லை. இருந்தாலும் அவர் 5 நிமிடம் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.

  தி.மு.க. ஆட்சியை கண்டித்து அவர் பேசினார். இந்த சமயத்தில் கவர்னர் தனது உரையை நிகழ்த்திக் கொண்டு இருந்தார். எடப்பாடி பழனிசாமிக்கு மைக் இணைப்பு கொடுக்கப்படாததால் அவர் பேசுவது முழுமையாக எல்லோருக்கும் கேட்கவில்லை. ஆனாலும் அவர் தொடர்ந்து பேசிக் கொண்டு இருந்தார்.

  அந்த சமயம் தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் உரையை வரவேற்று மேஜையை தட்டிக் கொண்டு இருந்தனர்.

  வெளிநடப்பு செய்த அதிமுகவினர்.


  அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி கவர்னர் உரையை புறக்கணிப்பதாக கூறி விட்டு வெளிநடப்பு செய்தார். அவருடன் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.

  சட்டசபைக்கு வெளியே எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

  கடந்த 8 மாத தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது. அம்மா ஆட்சியிலும், எங்கள் ஆட்சியிலும் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் தி.மு.க. ஆட்சி முடக்குகின்றன.

  அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டுமென்றே தி.மு.க. அரசு பொய் வழக்கு போட்டு வருகிறது. இதனால் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து நாங்கள் சபையை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.  Next Story
  ×